The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு எடைகள், அளவீடுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவீட்டு உபகரணங்களுக்கு மாதிரி ஓப்புதல் வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


எடைகள், அளவீடுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவீட்டு உபகரணங்களுக்கு மாதிரி ஓப்புதல் வழங்குதல்

PDF Print Email

சர்வதேச சட்ட அளவியல் அமைப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் எடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களுக்கான ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை அளவீடு அலகுகள் தரங்கள் மற்றும் சேவை திணைக்களம் வைத்துக்கொள்ளும் (கூடுதல் விபரங்களுக்கு கீழ் உள்ள சர்வதேச சட்ட அளவியல் அமைப்பை பார்க்கவும்)

குறிப்பு: ஆயினும், அளவீடு அலகுகள், தரங்கள் மற்றும் சேவை திணைக்களம் சர்வதேச சட்ட அளவியல் அமைபிலுள்ள 76 தரங்களிலுள்ள இலங்கைக்கு பொருந்தக் கூடியவைகளை மட்டும் தேர்வு செய்து இணைத்துக் கொள்ளும்.
 

தகுதி

உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் இந்தச் சேவையைப் பெற விரும்பினால் கீழ்காணும் காரணிகளுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

• விண்ணப்பதாரர் பழுதுபார்க்கும் உரிமம் வைத்திருக்க வேண்டும்

• இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், தனிநபர் அல்லது நிறுவனம் அந்த உபகரணங்களை விற்பனை செய்தால் அந்த நபரோ அல்லது நிறுவனமோ உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் அங்கிகரிக்கப்பட்ட முகவராக அடையாளம் காட்டப்பட வேண்டும்.

குறிப்பு:
விண்ணப்பதாரர் பழுதுபார்க்கும் உரிமம் வைத்திருக்கவில்லையெனில், உரிமம் பெற திணைகளத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

சமர்பிக்கும் முறைகள்

1

வேண்டுகோள் கடிதத்தைச் சமர்ப்பித்தல்

 

-    திணைக்களத்தின் இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட வேண்டும்.

 

-    செயல்முறை கையேடு, சேவைக் கையேடு மற்றும் சுற்று வரைபடங்களுடன் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் அளவுகோலின் வகை, அமைப்பு அளவிட்டு உபகரணத்தின் வகை போன்றவற்றை மாதிரி ஒப்புதல் பெறுவதற்கு குறிப்பிட வேண்டும்.

 

 

வேலை நாட்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை

 

வேலை நேரங்கள்

மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை

2

தேவையான இணைப்பு ஆவணங்கள்

 

-          வியாபாரப் பதிவுச் சான்றிதழ்

-          பழுதுபார்க்கும் உரிமம்

-          செயல்முறை கையேடு / சேவைக் கையேடு மற்றும் சுற்று வரைபடம்

-          சரக்குகளை வைத்திருக்கும் பெட்டகத்தின் விபரங்கள்

-          வெளிநாட்டு உற்பத்தியாளரிடமிருந்து வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வணிகம் செய்வதற்கானக் கடிதம்

-          மென் பொருட்களின் பிரதிகள், கருவி படிவத்திற்குத் தேவைப்பட்டால்.

-          மாதிரி ஒப்புதலுக்கான உபகரணங்களின் மாதிரி சோதனைத் தகவல் அறிக்கை (இருப்பின்)

 

விண்ணப்பப்படிவங்கள்
 
அதிகாரப் பூர்வ விண்ணப்பபடிவங்கள் எதுவும் தேவையில்லை. அளவை அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்கள இயக்குனருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட வேண்டும்.
 

செயல்முறை வரைபடம்

 

 

 

படிப்படியான வழிமுறைகள்

படி 1
மாதிரி அமைப்பு அங்கீகாரம் பெற விரும்பும் தயாரிப்பாளர்கள் அல்லது விற்பனையாளர் (இறக்குமதி செய்யப்படும் உபகரணம்) ஒரு வேண்டுகோள் கடித்தை அளவியல் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகளின் திணைக்கள இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு:
மாதிரி அமைப்பு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பதாரர் தனது கடிதத்தில் அளவுகோளின் வகை, உருவப்படிவம் மற்றும் கருவி அளவீடுகளின் எல்லைகளை செயல்பாட்டுக் கையேடு, சேவைக் கையேடு மற்றும் சுற்று வரைபடத்துடன் சேர்த்துக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

படி 2: 
விண்ணப்பதாரரால் அனுப்பப்பட்டக் கடித திணைக்களம் பெற்று மற்றும் ஆவணங்களை சரிப்பார்த்தல்.

படி 3: 
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திணைக்களம் விண்ணப்பதாரரிடம் கருவியை ஆய்விற்கு கொண்டு வருமாறு அறிவுருத்தும்.

படி 4: 
விண்ணப்பதாரர் கருவியை கொண்டு வருதல் மற்றும் திணைக்களம் அதனைச் சரிபார்த்தல்.

படி 5: 
உபகரணம் தேவைகளை பூர்த்திசெய்யும் பட்சத்தில், மாதிரி அமைப்பு அங்கீகரிக்கப்படும் மற்றும் விண்ணப்பதாரருக்கு தொலைபேசி மூலம் அங்கீகாரம் தெரிவிக்கப்படும்.


குறிப்பு 1:
விண்ணப்பதாரர் சமர்ப்பித்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனில், தகுந்த ஆவணங்களை மறுமுறை சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர் அறிவுத்தப்படுவார்.

குறிப்பு 2:
விண்ணப்பதாரர் தேவைப்படும் நிபந்தனைகளை எதிர்கொள்ள தவறியிருந்தால், அவர் நேரடிசந்திப்பிற்கு அழைக்கப்பட்டு சாதனங்களில் தேவைப்படும் மாற்றங்கள் செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்படும். சம்பந்தப்பட தரப்பினருடன் சேர்ந்து திணைக்கள இயக்குனர் இந்த சந்திப்பை நடத்துவார்.

குறிப்பு 3:

மாதிரி அமைப்பு அங்கீகாரம் பெற்ற அளவீட்டு கருவியில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டிருந்தால், தொடர்புடைய தரப்பினர் புதிய மாதிரி அமைப்பு அங்கீகாரம் பெற வேண்டும்.

காலக்கோடு

செயல்முறைக் காலக்கோடு

விண்ணப்பதாரர் இச்சேவையை 1 மாதத்திற்குள்ளாகப் பெறலாம்.


சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

உபகரணத்தை சமர்ப்பித்தல்:
வேலை நாட்கள்– திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை.
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.
விடுமுறை நாட்கள் – அனைத்துப் பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு

எந்த மாற்றமும் செய்யாதிருக்கும் காலம் வரை பெறப்பட்ட மாதிரி அமைப்பின் அங்கீகாரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்

செலவினம்
இந்த சேவைக் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இவை வருங்காலங்களில் மாற்றத்திற்குரியது

அபராதங்கள்
குற்றம் மற்றும் அபராதப் பிரிவைச் சரிப்பார்க்கவும்.

 
 
தேவையான இணைப்பு ஆவணங்கள்

அளவீட்டு கருவிகளுக்கான மாதிரி அமைப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்காகக் கீழ்காணும் இணைப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

• வணிகப் பதிவுச் சான்றிதழ்
• பழுது உரிமம்
• செயல்பாட்டுக் கையேடு/சேவைக் கையேடு மற்றும் சுற்று வரைபடம்.
• சரக்குகளை வைத்திருக்கும் பெட்டக விபரங்கள்
• வெளிநாட்டு உற்பத்தியாளருடனான அங்கீகரிக்கப்பட்ட விற்பனை உரிமைக் கடிதம்.
• மென்பொருள் நகல்கள், கருவிப் படிவத்திற்கு தேவைப்பட்டால்.
• மாதிரி அமைப்பு அங்கீகாரம் பெறவிருக்கும் கருவியின் மாதிரித் தேர்வு விபர அறிக்கை.(தேவையிருப்பின்

சேவைக்கானப் பொறுப்புக் குழு

நபரின் பதவி

நபரின் பெயர்

பிரிவின் பெயர்

 

இயக்குனர்

 

திரு. குணசோமா

அளவியல் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகளின் திணைக்களம்.

சிறப்பு வகையறைகள்

பொருந்தாது.


போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்

பொருந்தாது.

 


அமைப்பு பற்றிய தகவல்

அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

இலக்கம்: 101,
பார்க் வீதி,
கொழும்பு-05


இயக்குனர்
தொலைபேசி:+94-11-2182250
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2182259
மின்னஞ்சல்:metrolad@sltnet.lk
இணையத்தளம்: www.measurementsdept.gov.lk

தொடர்பான சேவைகள்


முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:02:21
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty