The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Regulation of Trade வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களைச் சரிப்பார்த்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களைச் சரிப்பார்த்தல்

PDF Print Email

அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களமானது விற்பனையாளர் மற்றும் சில்லறை வியாபாரிகளின் அளவீட்டு உபகரணங்களை ஒவ்வொரு வருடமும் முத்திரையிடும். இந்தச்செயல் தீவில் உள்ள அணைத்து மாவட்ட முத்திரை மையங்களிலும் நடைபெறும்.

தகுதி


தனிநபர்/அமைப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எடைகள், அளவீடுகள் மற்றும் எடையளவுகள் அல்லது அளவீட்டு கருவிகள் கீழ்க்காணும் அளவீட்டு வகையைச் சார்ந்திருந்தால் தகுதியானவை:

(a) நீளத்தின் அளவீடுகள்

(b) கொள்ளளவு அளவீடுகள்
வகை 1 – துணைஅளவற்ற – பகுக்ககூடிய அளவீடுகள்
வகை 2 – துணைஅளவுள்ள – பகுக்ககூடிய அளவீடுகள்
வகை 3 – திரவங்களை அளவிடுவதற்கு  பயன்படும் அளவைகள்

(c) பொது வாணிபத்திற்குப் பயன்படும் எடைகள்

(d) வேதியியல் வல்லுநர், மருந்துதயாரிப்பவர், நகைவியாபாரிகள் (காரட் எடை) பயன்படுத்தும் எடைகள்.
  OIML வகுப்பு M1 மற்றும் M2

(e) எடையளவு கருவிகள் (வகுப்பு 3&4)
  அன்-கிராஜூவேட்டட் பேன் பேலன்ஸ்
  வகை 2- அன்-கிராஜூவேட்டட் கௌன்டர் பேலன்ஸ்
வகை 3- கிராஜூவேட்டட் கருவிகள் (டிஜிட்டல் டிஸ்ப்ளே)
வகை 4- கிராஜூவேட்டட் கருவிகள் (நியுமரல் டிஸ்ப்ளே)
  வகை 5- வகுப்பு 2 எடையளவு கருவிகள்
  வகை 6- வகுப்பு 1 எடையளவு கருவிகள்


(f) அளவீட்டுக் கருவிகள்
  திரவஎரிப்பொருளுக்கானவை
  உயவு எண்ணெய்க்கானவை
  பானபங்கிட்டுக்கொள்ளும் கருவிகளுக்கானவை
  
   
சமர்ப்பிக்கும் முறைகள்

ஆரம்ப முத்திரை – உற்பத்தி செய்பவர் மற்றும் விற்பனையாளர்களுக்காகானவை (இறக்குமதியாளர்)
 

படிப்படியான வழிமுறைகள்: ஆரம்ப முத்திரைகள் – உற்பத்தி செய்பவர் மற்றும் விற்பனையாளர்களுக்கானவை (ஏற்றுமதியாளர்)


படி 1
தனிநபர் அல்லது அமைப்புகள் கருவிகளுக்கு முத்திரையிடுமாறு திணைக்கள இயக்குனருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்புதல்.

குறிப்பு:
தனிநபர் அல்லது அமைப்பு, புதிய அளவீட்டு கருவிகள் வாங்கினால் அது முத்திரையிடப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் முத்திரையிட வேண்டும்.

படி 2 
திணைக்களம் வேண்டுகோள் விடுத்தவருக்கு, ஆய்வாளர் எந்த இடத்தில் அளவீட்டு இயந்திரத்தின் தரத்தை சோதனை செய்வாரோ அந்த இடம், திகதி மற்றும் நேரத்தை தொலைபேசி அல்லது அஞ்சல் மூலம் தெரிவித்தல்.

படி 3
விண்ணப்பதாரர் அளவீட்டு கருவியோடு குறிப்பிடப்பட்ட இடத்திற்கு வருதல்.

படி 4 
ஆய்வாளர் கருவியை சோதனை செய்தல் மற்றும் சரிப்பார்த்தல்.

படி 5 
உபகரணம் தேவையானவற்றை பூர்த்தி செய்யுமெனில், திணைக்களம் உபகரணத்தை முத்திரையிட்டு சம்பந்தபட்ட நபருக்கு சான்றிதழை வழங்கும்.


குறிப்பு :
ஆயவாளர் சரிப்பார்த்ததில் குறிப்பிட்ட கருவி தேவையானவற்றை பூர்த்தி செய்யவில்லையெனில், சில்லறை வியாபாரி/உற்பத்தியாளர் கருவியின் தேவையான திருத்ததிற்கு தொழில்நுட்ப அலுவலரிடம் அனுப்புதல். சிறிய திருத்தம் தேவையெனில் சில்லறை வியாபாரி/உற்பத்தியாளர் உடனடியாக கருவியைப் பொருத்தியப் பின் அதை அந்த நேரத்தில் மறுபடியும் ஆய்வுக்காக எடுத்துச் செல்லுதல். பெரிய மாற்றம் செய்ய வேண்டுமெனில் உடனடியாகப் பொருத்த முடியவில்லை என்றால் சில்லறை வியாபாரி/உற்பத்தியாளர் பழுது உரிமம் வைத்திருக்கும் நபர்/முகாமிடம் பொருத்துவதற்காக எடுத்துச் செல்லுதல் மற்றும் படி 1ன் படி கருவியை முத்திரையிடுவதறைகாக வேண்டுகோள் விடுத்தல் வேண்டும்.

படிப்படியான வழிமுறைகள் வருடாந்திர முத்திரைகள் – சில்லறை வியாபாரிகளுக்கானவை


படி 1
அரசாங்க முகவர் முத்திரையிடும் திகதி மற்றும் இடத்தை முடிவு செய்தல் மற்றும் ஆய்வாளருக்குத் தெரிவித்தல்.


படி 2 
ஆய்வாளர் கிராம சேவகரிடம் தெரிவித்தல்.


படி 3
கிராம சேவகர் சில்லறை வியாபாரிகளுக்குத் தெரிவித்தல்.

படி 4 
சில்லறை வியாபாரி குறிப்பிடப்பட்ட இடத்திற்குச் சென்றுக் கருவியைச் சமர்ப்பித்தல்.
படி 5 
அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகளின் அலுவலகப் பொறுப்பாளர்/ஆய்வாளர் உபகரணங்களைச் சரிப்பார்த்தல்.
படி 6
உபகரணங்கள் தேவையானவற்றைப் பூர்த்தி செய்தால் திணைக்களம் உபகரணங்களுக்கு முத்திரையிட்டுச் சான்றிதழ்களை வழங்குதல்.

குறிப்பு 1:
உபகரணங்கள் தேவையானவற்றைப் பூர்த்தி செய்யாமல் மற்றும் சிறிய திருத்தம் தேவையெனில், அந்த இடத்திலேயே  உபகரணங்களை தொழில்நுட்ப அலுவலரால்  திருத்தம் செய்யப்படும் .

குறிப்பு 2:
உபகரணங்களில் பெரிய திருத்தம் தேவைப்படும் எனில், சில்லறை வியாபாரி பழுதுப்பார்ப்பதற்காக விற்பனையாளரிடம் திருப்பிக் கொடுக்கலாம்   அதன்படி விற்பனையாளர் தேவையான திருத்தம் செய்து முத்திரையிடப்பட்ட உபகரணத்தை மாவட்ட தலைமை செயலகத்திடம் பெற்றுக்கொண்டு. முத்திரையிடப்பட்ட உபகரணத்தைக் சில்லறை வியாபாரியிடம் கொடுத்தல். 
 
காலக்கோடு

ஆரம்ப முத்திரைகள் – உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கானவை (ஏற்றுமதியாளார்)


செயல்முறைக் காலக்கோடு

விண்ணப்பதாரர் இந்தச் சேவையை 2 நாட்களுக்குள் பெறலாம்.

சமர்பிக்க வேண்டிய காலக்கோடு

வேண்டுகோள் கடிதத்தை ஒப்படைத்தல்
வேலை நாட்கள்– திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை.
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.
விடுமுறைநாட்கள் – எல்லா பொது மற்றும் வணிக விடுமுறைநாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு------பொருந்தாது.

 

வருடாந்திர முத்திரைகள் – சில்லறை வியாபாரிகளுக்கானவை

செயல்முறைக் காலக்கோடு

விண்ணப்பதாரர் இந்தச் சேவையை 1 நாளுக்குள் பெறலாம்.


சமர்பிக்க வேண்டிய காலக்கோடு

கூடுதல் தகவல் பிரிவிலுள்ள முத்திரையிடும் திகதிகளை பார்க்கவும்.
  
ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு

ஒவ்வொரு வருடமும் தங்களது உபகரணங்கள் முத்திரையிடப்பட்டுள்ளது என்று சில்லறை வியாபாரிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும்.

 
சேவைத் தொடர்பான கட்டணங்கள்

ஆரம்ப முத்திரைகள் – உற்பத்தியாளர்  மற்றும் விற்பனையாளர்களுக்கானவை (ஏற்றுமதியாளர்)

செலவினம்

(a)    நீளத்தை அளவிடுதல்:

(i) ஒவ்வொரு மீட்டருக்கும் அல்லது அதுப் போன்ற வற்றிருக்கும்:

 

20.00

(b) கொள்ளவை அளவிடுதல்:

வகை 1துணை அளவற்றபகுக்கக்கூடிய அளவு:

1. ஒவ்வொரு லிட்டருக்கும் அல்லது அதுப்போன்றவற்றிருக்கும்

2. 100 லிட்டருக்கு அதிகமான  அளவைகள்

                                 i.            முதல் தடவையாக இருந்தால்

                                ii.            அடுத்தடுத்த 100 லிட்டர் அல்லது அதுப்போன்றவற்றிருக்கும்

 

வகை 2துணை அளவுள்ள-பகுக்ககூடிய அளவு:

(i)                 வகை 1ல் இருக்ககூடிய துணை அளவு அல்லாத அளவில் குறிப்பிட்டக் கட்டணத்தை விட கூடுதலாக 10 சதவீதம் கட்டணம் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் வழங்கப்படும்.

 

வகை 3திரவங்களை அளவிடுவதற்கு  பயன்படும் அளவைகள்

(i) ஒவ்வொரு லிட்டருக்கும் அல்லது அதுப்போன்றவற்றிருக்கும்

 

 

 

6.00

 

600.00

60.00

 

 

 

 

 

 

75.00

(c) பொது வாணிபத்திற்குப் பயன்படுத்தப்படும் எடைகள்:

                                             i.            2 கிலோ கிராமிற்கு மிகாமல் உள்ள ஒவ்வொரு எடைகும்

                                            ii.            2 கிலோ கிராமிற்கு மேல் உள்ள ஒவ்வொரு எடைகும்

 

 

10.00

20.00

(d) வேதியியல் வல்லுநர், மருந்துதயாரிப்பவர், நகை வியாபாரிகள் (காரட் எடை) பயன்படுத்தும் எடைகள்

      OIML வகுப்பு M1 மற்றும் M2

                                             i.            ஒவ்வொரு எடைக்கும்

 

 

40.00

(e) எடையிடப்பயன்படும் கருவிகள்(வகுப்பு 3&4)வகை 1 :

அன்-கிராஜூவேட்டட் பேன் பேலன்ஸ்

(i) ஒவ்வொரு  5 கிலோகிராம் அல்லது அதுப்போன்றவற்றிருக்கு

     வகை 2- அன்-கிராஜூவேட்டட் கௌன்டர் பேலன்ஸ்

 (i) ஒவ்வொரு  5 கிலோகிராம் அல்லது அதுப்போன்றவற்றிருக்கும்

 

     வகை 3- கிராஜூவேட்டட் கருவிகள் (டிஜிட்டல் டிஸ்ப்ளே)

  (i) 20 கிலோகிராமிற்கு மிகாமல்

 (ii) 20 கிலோகிராமிற்கு மேல் 100 கிலோகிராமிற்குள்

(ii)                 100 கிலோகிராமிற்கு மேல் 1000 கிலோகிராமிற்குள் 

(iii)                (iv) 1000 கிலோகிராமிற்கு மேல் உள்ள ஒவ்வொரு கூடுதல் 1000 கிலோகிராமிற்கும் அல்லது அதுப் போன்றவற்றிருக்கும்.

 

     வகை 4- கிராஜூவேட்டட் கருவிகள் (நியுமரல் டிஸ்ப்ளே)

(நியுமரல் டிஸ்ப்ளே)

(i) 20 கிலோகிராமிற்கு மிகாமல்

(ii) 20 கிலோகிராமிற்கு மேல் 100 கிலோகிராமிற்குள் 

(iii) 1000 கிலோகிராமிற்கு மேல் உள்ள ஒவ்வொரு கூடுதல் 1.000 கிலோகிராமிற்கும் அல்லது அதுப் போன்றவற்றிருக்கும்.

 

 

 

15.00

25.00

 

 

100.00

200.00

400.00

500.00

 

 

 

400.00

500.00

500.00

அமைப்பு பற்றிய தகவல்

அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

இலக்கம்: 101,
பார்க் வீதி,
கொழும்பு-05


இயக்குனர்
தொலைபேசி:+94-11-2182250
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2182259
மின்னஞ்சல்:metrolad@sltnet.lk
இணையத்தளம்: www.measurementsdept.gov.lk

தொடர்பான சேவைகள்


முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:02:36
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty