ஊர்வலத்திற்க்கான அனுமதிகளை பெறுதல் |
|
|||
படி 1 : விண்ணப்பதாரர்/அமைப்பாளர் குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்திற்கு முன்பாக ஊர்வலத்திற்கான அனுமதி வேண்டுதல். படி 2 : பொலிஸ் நிலையத்தின் பொறுப்பு அலுவலர் (OIC) அனுமதி நிச்சையமெனில் துணை பொலிஸ் கண்காணிப்பாளர் (A.S.P) யினால் அங்கீகரிக்கப்படுமா இல்லையா என்று முடிவு செய்வர். படி 3 : பொறுப்பு அலுவலர் (OIC) ஊர்வலம் எதன் சம்பந்தமானது என்று சரிபார்ப்பார். ஊர்வலத்தில் பயன்படுத்தப்படும் அறிக்கை, அட்டைப்படம் மற்றும் வேறு சாதனங்களை சரிபார்த்து அவருக்கு திருப்தியடைந்தால் துணை பொலிஸ் கண்காணிப்பாளர் (A.S.P) யின் அங்கீகாரத்திற்காக அனுப்புவார். படி 4 : துணை பொலிஸ் கண்காணிப்பாளர் (A.S.P) இந்த விபரங்களை எல்லாம் மறுபடியும் சரிப்பார்த்து பின் ஊர்வலத்துக்கான அனுமதி அளித்தல். குறிப்பு : ஊர்வலத்தில் அதிக கூட்டம் இருக்கும் பட்சத்தில் பொலிஸ் நிலையங்களிடம் அமைப்பாளருக்கு அந்தந்த பொலிஸ் நிலையங்களிடம் கடைசி ஆறு மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்குமாறு அறிவுரை வழங்குதல். சமூகத்தினருக்கு எந்தவித இடையூரு செய்யாமல் தடுப்பதற்கான சரியான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பொலிஸ் நிலையம் செய்தல் வேண்டும். தகுதி வகையறைகள்: இலங்கை குடிமகன் அல்லது வெளிநாடு வார் இலங்கைவாசி ஊர்வல அனுமதிக்கான தகுந்த காரணங்களை கூறி வேண்டுதல். குறிப்பு : தகுதியிர்க்கக்கூடிய வரையறைகள் ஊர்வலத்திற்க்கு முன்: ஊர்வலத்துக்கான அனுமதி வேண்டும் நேரத்தில் தவறான ஆவணங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொடுத்தால் ஊர்வலத்துக்கான அனுமதி அங்கீகரிக்கப்படமாட்டாது. ஊர்வலத்துக்குப் பின்: கீழே கொடுக்கப்பட்டுள்ள குற்றத்தின்படி ஊர்வல அமைப்பாளர் நடந்து கொள்வதை பொறுப்பு அலுவலர் கவனித்தால் ஊர்வலம் கலைக்கப்படும். • ஊர்வலம் பாதை மாறிச் செல்வது • கட்டுப்பாடில்லாத மற்றும் உணர்ச்சி மீறிய கூட்டம் • வன்மையான மொழிகளை பயன்படுத்துதல் சமர்ப்பிக்கும் முறைகள்: பொலிஸ் நிலையத்திற்கு வருகை புரிதல். விண்ணப்பதாரர் அல்லது அமைப்பாளர் ஊர்வலத்துக்கான அனுமதி வேண்டி பொலிஸ் நிலையத்திற்கு வருதல். பொலிஸ் நிலையத்தின் வேலை நாட்கள்: 24/7/365 நாட்கள் விண்ணப்ப படிவம் பெறுதல்: விண்ணப்பதாரர் அல்லது அமைப்பாளர் ஒலிபெருக்கி அனுமதிக்கான விண்ணப்பபடிவத்தை தன் கையால் எழுதி பூர்த்தி செய்தல் விண்ணப்பதாரர் அனுமதி வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை அனுமதிக்காக வேண்டும் போது இணைத்தல். தேவையான ஆவணங்கள்: • வீடு மற்றும் அலுவலக விலாசத்தின் முழு விபரங்கள் • வேலை பார்க்கும் இடத்தின் விபரங்கள் • விண்ணப்பதாரர்/அமைப்பாளர் அரசியல் கட்சியின் அங்கத்தினராக இருப்பின், கட்சி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் • ஊர்வலத்திற்காக பயன்படுத்தக்கூடிய அட்டைப்படத்தின் பிரதி,சுற்று அறிக்கைகள் மற்றும் வேறு சாதனங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்பித்தல்: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். விண்ணப்ப படிவம்: இந்த சேவையை பெறுவதற்கு எந்த விண்ணப்பமும் தேவையில்லை. குறிப்பு : விண்ணப்பதாரர் அல்லது அமைப்பாளர் தன் கைப்பட எழுதிய வேண்டுகோளுடன் ஊர்வல அனுமதி வேண்டி தகுந்த காரணத்தை நிருபித்து சமபந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். காலக்கெடு: செயலுக்கான காலம் இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வேலை நேரங்கள் A.S.P அலுவலகம் : மு.ப 8.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையம்: 24/7/365 நாட்கள் சேவைக்கானக் கட்டணங்கள்: இந்த சேவைக்கு கட்டணம் ஏதும் இல்லை. தொகைகள் மற்றும் இதரகட்டணங்கள்: இந்த வகையான சேவைக்கு பயன்படாது. குறிப்பு 01: ஊர்வலம் கட்டுப்பாட்டை மீறினால் அதற்கான நடவடிக்கையை அலுவலகத்தின் பொறுப்பில் உள்ளவர் மேற்கொள்வார். தேவையான இணைப்பு ஆவணங்கள்: • குடியிருப்பு மற்றும் அலுவலக முகவரியின் விபரம் • வேலை பார்க்கும் இடத்தின் விபரம் • விண்ணப்பதாரர் ஒழுங்குபடுத்துபவர் அரசியல் கட்சியில் உறுப்பினராக இருந்தால் அந்த கட்சியை பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட வேண்டும் • ஊர்வலத்தில் பயன்படுத்தப்படும் அச்சு சுவரொட்டியின் பிரதிகள் தோரனம் மற்றும் வேறு பொருட்கள் சேவைகளின் பொறுப்பு குழு: பொலிஸ் துணை கண்காணிப்பாளர் (A.S.P) குறிப்பு 01: மண்டல துணை பொலிஸ் கண்காணிப்பாளர் அதிகாரி அனுமதி வழங்குவார். அலுவலகத்தின் பொறுப்பாளர் குறிப்பு 02 : துணை பொலிஸ் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட அனுமதி வேண்டுகோளை மண்டல அலுவலகத்தின் பொறுப்பாளர் உறுதி செய்வார். சிறப்பு வகையறைகள்: இந்த வகையான சேவைக்கு பயன்படாது. போலித் தகவல்களுடன் கூடிய உதாரணப்படிவம்: இரகசிய தகவல்களாய் இருப்பதன் காரணமாக பொலிஸ் நிலையம் வழங்கவில்லை.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:15:55 |
» | Train Schedule | |