தகைமைகள்
இயற்கை அனர்த்தம் காரணமாக தனக்குச் சொந்தமான ஒரே வீடு பகுதியளவிலோ முற்றாகவோ சேதமுற்றிருத்தல்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய செயற்பாடு (விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
அனர்த்தம் நேரிந்த உடனேயே பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடமிருந்து தேசிய அனர்த்த நிவாரண சேவை இலக்கம் 07 படிவத்தைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் அலுவலகம் ஃ பிரதேச செயலகம்.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
கட்டணம் அறவிடப்படமாட்டாது.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
அனர்த்தம் நேர்ந்த உடனேயே.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
கட்டணமேதும் அறவிடப்படமாட்டாது.
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சதாரண சேவை மற்றும் முந்துரிமைச் சேவை)
மாவட்ட செயலாளரின் விதப்புரை கிடைத்து ஒரு வாரத்துக்குள்.
நிரூபிக்கத் தேவையான ஆவணங்கள்
கிராம உத்தியோகத்தர் சமூக சேவைகள் உத்தியோகத்தரால் விதப்புரை செய்யப்படுகின்ற தே.அ.ந.சே.நி. 07 படிவம்.
ஆதனத்தின் சேதத்தை மதிப்பீடு செய்த கடிதம்.
வீட்டின் ஃ காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் கடிதங்கள்.
சேவைகளுக்குப் பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பிரதேச செயலாளர்
உதவிப் பிரதேச செயலாளர்.
விதிவிலக்குகள் அல்லது மேற்படி தேவைப்பாடுகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்.
ஏற்புடையதன்று.
விண்ணப்பப் பத்திர மாதிரி (மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
பின்னிணைப்பு 01.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம் (பூர்த்தி செய்த மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
பின்னிணைப்பு 01.
அமைப்பு பற்றிய தகவல்National Disaster Relief Services Centre (Under Construction)
Vidya Mawatha,
Colombo 7.
தொலைபேசி:+94112665258 தொலைநகல் இலக்கங்கள்:+94112665702 மின்னஞ்சல்: இணையத்தளம்: www.ndrsc.gov.lk
|