The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home ஆட்களின் பதிவுகள் விவாகம் திருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


திருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்

PDF Print Email

திருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்

தகுதி

-    செயலகத்தின் கோட்;ட எல்லைக்குள் திருமணம் நடைப்பெற்ற இலங்கையினர் திருமணச் சான்றிதழின் பிரதியை திருமணம் நடைப்பெற்ற பகுதியின்; கோட்டச் செயலகத்திடமிருந்து பெற தகுதியானவர்கள்.

திருமணம் வசிப்பிடத்திற்கு வெளியே நடைப்பெற்றால் அவர் திருமணம் நடைப்பெற்ற பகுதிக்கான கோட்டச் செயலகத்திற்கு போக வேண்டும்.

சமர்ப்பிக்கும் முறைகள்
1. விண்ணப்பப்படிவம் பெறுதல்
-    விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை விசாரணைப் பிரிவிலிருந்தோ அல்லது எந்த ஒரு கோட்ட அலுவலகத்தின் அதற்குண்டான சான்றிதழ் பதிவாளரிடமிருந்தோ பெற வேண்டும்.
-விண்ணப்பப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்தல்.
-கீழ்க்கண்ட இணைப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
தேசிய அடையாள அட்டை

2. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க தேவையானவை
-    விண்ணப்பதாரர் பதிவாளரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பதிவாளரின் முகவரியிடப்பட்ட தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் தபாலில் அனுப்ப வேண்டும்
 குறிப்பு:
-விண்ணப்பதாரர் தபாலில் அனுப்புவதென்றால் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
-விண்ணப்பதாரர் ஆரம்பப் பதிவு அல்லது உண்மைப் பதிவிலக்கத்தின் சரியானத் திகதியை அறிந்திருந்தால் மிக வேகமாகவும் எளிதாகவும் பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
-திருமணச் சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்

விண்ணப்பங்கள்  ஏற்றுக்கோள்ளும் நேரம்:

 மு.ப. 9.00 மணி முதல். பி..ப. 12.30மணி வரை

பி..ப. 1.00மணி முதல்பி..ப. 4.45மணி வரை.

 

விண்ணப்பப்படிவம்

 

 

விண்ணப்பப்படிவத்தின் இலக்கம்/பெயர்

விரிவாக்கம்

திருமணச் சான்றிதழின் பிரதிக்கான விண்ணப்பம்(பொதுஅல்லது கண்டியன்)மற்றும்/அல்லது பதிவேடுகளில் தேடுதல் - படிவம் 121

  

திருமணச் சான்றிதழுக்கானப் பிரதியைப் பெறுதல்

படிப்படியான வழிமுறைகள் (திருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்)

படி 1: விண்ணப்படிவத்தை விசாரணைப் பிரிவிலிருந்தோ அல்லது கோட்டச் செயலகத்தின் பதிவாளரிடமிருந்தோப் பெறுதல்.
படி 2: விண்ணப்பப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்தல்.
படி 3: விண்ணப்பதாரர் கோட்டச் செயலகத்திற்கு தபாலில் அனுப்புதல் அல்லது கோட்டச் செயலகத்தின் பதிவாளரிடம் நேரடியாகச் சமர்ப்பித்தல்
குறிப்பு :
விண்ணப்பம் தபால் மூலம்/நேரடியாகவோ தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

படி 4: கோட்டச் செயலகம் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று உண்மைப் பதிவைப் பதிவேடுகளில் சரிப்பார்த்தல்
படி 5: விண்ணப்பதாரர் திருமணச் சான்றிதழைத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோப் பெற்றுக் கொள்ளலாம்

குறிப்பு:
விண்ணப்பதாரர் தகுதியிழந்தால் பதிவாளர் விண்ணப்பத்தை விண்ணப்பதாரருக்கு தகுதி நீக்கம் செய்யபட்டதற்கானக் காரணத்துடன் திருப்பி அனுப்புவார்.

காலக்கோடு
செயல்முறைக் காலக்கோடு

ஆவணங்களை எளிதாக தேடுவதற்காக விண்ணப்பதாரர் உண்மைத் திருமணச் சான்றிதழின் பதிவிலக்கம் அல்லது பதிவிலக்கத்தை தரும் பட்சத்தில் புதியத் திருமணச் சான்றிதழ் 2 லிருந்து 3 நாட்களுக்குள் தயார் செய்து விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.

குறிப்பு:
தேடுகின்ற தகவல்கள் கிடைக்காதப் பட்சத்தில் விண்ணப்பத்தின் செயல்முறைக் காலம் கிடைக்க கூடிய மனிதவளத்தைப் பொறுத்து சாதரணமாக ஆகக்கூடிய நேரத்தைவிட அதிக நேரம் தாமதமாகும்.

சமர்ப்பிக்க வேண்டியக் காலக்கோடு

படி 1: விண்ணப்பப்படிவங்களைப் பெறுதல்
விண்ணப்பப்படிவங்களை விசாரணைப் பிரிவு அல்லது கோட்டச் செயலகத்தின் பதிவாளரிடமிருந்தும் பணி நேரங்களில் கிடைக்கும்.
பணிநாட்கள் – திங்கள் கிழமை –  வெள்ளிக் கிழமை (திங்கள் கிழமை ரூ புதன் கிழமை விரும்பத்தகுந்த நாட்கள்)
கருமப்பீடம் திறந்திருக்கும் நேரம் –  மு.ப. 9.00 முதல் பி.ப. 12.30இ பி.ப 1.00  முதல் பி.ப.  3.00
விடுமுறைகள் – பொது மற்றும் அனைத்து வணிக நாட்கள்

படி 2: விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல்
விண்ணப்பம் நேரடியாக சமர்ப்பித்தால், நேரம் வீணாவது இல்லை. விண்ணப்பம் அஞ்சல் மூலமாக அனுப்பினால் அஞ்சல் நேரத்தைப் பொறுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை சென்றடையும்.
பணிநாட்கள் – திங்கள் கிழமை –  வெள்ளிக் கிழமை (திங்கள் கிழமை ரூ புதன் கிழமை விரும்பத்தகுந்த நாட்கள்)
கருமப்பீடம் திறந்திருக்கும் நேரம் –  மு.ப. 9.00 முதல் 12.30 பி.ப.இ பி.ப 1.00  முதல் பி.ப.  3.00
விடுமுறைகள் – பொது மற்றும் அனைத்து வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலக்கோடு
நீடித்து நிற்கும் கால அவகாசம்

சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்
பிரதியைப் பெறுவதற்கான முத்திரைக் கட்டணங்கள் பின்வருமாறு
•    பதிவுத் திகதி அல்லது சான்றிதழ் இலக்கம் தெரிந்திருந்தால் பிரதியைப் பெறுவதற்கானக் கட்டணம் ரூ. 5
•    ஒவ்வொருப் பிரதிக்கும் ரூ. 5 செலுத்தி மேலும் இரு பிரதிகள் பெற்றுக் கொள்ளலாம்.
•    பதிவுத் திகதித் தெரியாதப் பட்சத்தில் ஏடுகளில் 3 மாதங்கள் தேடி ஒரு பிரதியைப் பெறுவதற்கு முத்திரைக் கட்டணம் ரூ. 10.  ஒவ்வொருப் பிரதிக்கும் ரூ. 5 செலுத்தி மேலும் இரு பிரதிகள் பெற்றுக் கொள்ளலாம்.
•    இறப்பிலிருந்து 2 வருடக் காலங்களுக்கு ஏடுகளில் தேடப்பட வேண்டியிருப்பின் முத்திரைக் கட்டணமாக ரூ. 20 செலுத்த வேண்டும்.
•    ஒவ்வொருப் பிரதிக்கும் ரூ. 5 செலுத்த வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்
•    இரு தரப்பினர்கள்; மற்றும் 2 சாட்சிகளின் தேசிய அடையாள அட்டை
•    முன்னதாக திருமணம் நடந்து விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்
•    முன்னதாக திருமணம் நடந்து கணவன்/மனனவி இறந்திருந்தால் – இறப்பு சான்றிதழ்

சிறப்பு வகையறைகள்
பொருந்தாது.

போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்
திருமணச் சான்றிதழின் பிரதிக்கான விண்ணப்பம்


முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:42:44
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 272
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty