The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Trade, Business & Industry Motoring அபராத பற்றுச் சீட்டை பெற்று பணத்தை செலுத்துதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


அபராத பற்றுச் சீட்டை பெற்று பணத்தை செலுத்துதல்

PDF Print Email


படி 1: ஓட்டுனர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல்.

படி 2: போக்குவரத்து பொலிஸ் ஓட்டுனரிடமிருந்து உரிமத்தை பறிமுதல் செய்தல்.

படி 3: பொலிஸ் உடனடிஅபராத அறிக்கையை வழங்குதல்.

படி 4: ஓட்டுனர் அலுவலகத்திற்குச் சென்று போக்குவரத்து பிரிவிடமிருந்து பணம் செலுத்துவதற்கான படிவத்தை பெறுதல்.

படி 5: ஓட்டுனர் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று பணம் செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டை வாங்குதல்.

படி 6: ஓட்டுனர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பற்றுச் சீட்டை காண்பித்து பொலிஸிடமிருந்து ஓட்டுனர் உரிமத்தை திரும்பப் பெறுதல்.


குறிப்பு 1:
ஓட்டுனர் அபராத தொகையை செலுத்தவில்லை எனில் அவன்/அவளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தல்.

குறிப்பு 2:
ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கவில்லை எனில் பொலிஸ் வேறு அனுமதியை வழங்குதல் (பொலிஸ் 405– சட்டத்தொகுப்பிகுற்ற வழிமுறை பிரிவு 109(6) சட்ட இலக்கம் 15 - 1979).  


தகுதி வரையறைகள்:
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பிடிப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட ஏதாவது ஒரு ஓட்டுனர்.



மர்ப்பிக்கும் முறைகள்:
வழக்கு – பொலிஸாரால் அபராதம் சுமத்தப்பட்ட ஓட்டுனர்
பொலிஸ் அலுவலர் உடனடி அபராத அறிக்கையை வழங்குதல் - (ஆண்-பெண்)ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தல்.
    

வேலை நேரம்:
பொலிஸ் நிலையம்
24/7/365 நாட்கள்

அஞ்சல் அலுவலகம்

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
மு.ப 8.00 மணி முதல் பி.ப 3.00 மணி வரை
சனிக்கிழமை
மு.ப 8.00மணி முதல் பி.ப 1.30 மணி வரை


ஓட்டுனர் உரிமத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள்:

பொலிஸ் நிலையத்தில்
ஓட்டுனர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று போக்குவரத்து பொலிஸ் பிரிவிடமிருந்து அபராத பற்றுச் சீட்டை பெறுதல்.


குறிப்பு:
ஓட்டுனர் அபராத பற்றுச் சீட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து பெறுவதற்கு உடனடி அபராத அனுமதியை கொண்டுவர வேண்டும்.

அஞ்சல் அலுவலகத்தில்
ஓட்டுனர் அஞ்சல் அலுவலகத்தில் பணத்தை செலுத்தி பணம் செலுத்தியதை நிருபிப்பதற்காக பற்றுச் சீட்டை பெறவேண்டும்.


குறிப்பு:
 
ஓட்டுனர் 14 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் அவருக்கு உடனடி அபராத அனுமதியே தற்காலிக உரிமமாக வழங்கப்படும் பணம் செலுத்தவில்லை என்றால் அவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவார்.

 



சமர்ப்பிக்கும் வழிமுறைகள்:
பணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் (போக்குவரத்து பிரிவில்) சமர்ப்பித்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.


படிவத்தின் பெயர்
:
உடனடி அபராத அனுமதி  – ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக பொலிஸ் அலுவலர் படிவம்(M.T.A 37) வழங்குவார்.
அபராத பற்றுச் சீட்டு      – வழக்கு தொடர்வதற்க்குப் பதிலாக அபராதம்.



விண்ணப்ப படிவம்:
பொது மக்கள் பூர்த்தி செய்வதற்கு எந்த விண்ணப்ப படிவமும் இல்லை. ஆனால் பொலிஸ் அலுவலர் பூர்த்தி செய்வார்.
(போக்குவரத்துப் பிரிவு)கீழே கொடுக்கப்பட்டுள்ள பற்றுச் சீட்டை மக்களுக்கு வழங்கும்.

   • ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக பொலிஸ் அலுவலரால் வழங்கப்படும் படிவம்



குறிப்பு :
ஓட்டுனரிடம் அந்த நேரத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லை எனில் (ஆண்-பெண்) அவர்களுக்கு பொலிஸ் 405 பற்றுச் சீட்டை அபராத அறிக்கையை வழங்கும்.
ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக பொலிஸ் அலுவலரால் வழங்கப்படும் படிவம்.(DOP 405)



காலக்கெடு:
    செயல்முறை காலக்கெடு:
    தினசரித் தொகையைப் பொறுத்து அமையும்.

   ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கெடு:
   தற்காலிக அனுமதி உரிமம் என்றால் 14 நாட்கள்.

   வேலை நேரம்:
   பொலிஸ் நிலையம் – 24/7/365 நாட்கள்.


சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
அபராதம் - ‘வழக்குத் தொடர்பவரின் அபராத ஆவணங்களில் கிடைக்க பெறும் (படிவம் பொலிஸ் DOP F397)



தேவையான இணைப்பு ஆவணங்கள்:
பொலிஸ் அதிகாரி உடனடி அபராதம் வழங்கும் அந்த நேரத்தில் ஓட்டுனாரிடம் ஓட்டுனர் உரிமம் தேவைப்படும்.

 சேவை பொறுப்புக் குழு:
அலுவலக பொறுப்பாளர் (OIC) - பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து கிளையில்
அலுவலக பொறுப்பாளர் (OIC) - பொலிஸ் நிலையத்தில்

 

சிறப்பு வகையறைகள்:
இந்த சேவைக்கு பொருந்தாது.



போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்
:
உறுதியான தகவல்கள் இருக்கும் பட்சத்தில் பொலிஸ் நிலையம் வழங்காது.


அமைப்பு பற்றிய தகவல்

Department of Police (Under Construction)

Police Head Quarters,
Colombo 01.


Mr. Lasitha Weerasekara
தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553
மின்னஞ்சல்:telligp@police.lk
இணையத்தளம்: www.police.lk

தொடர்பான சேவைகள்

மோட்டார் வாகன தண்டப் பணம் செலுத்தல்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:15:44
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 262
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty