The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திர வினியோகம்
கேள்வி விடை வகை முழு விபரம்


சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திர வினியோகம்

PDF Print Email

                                                நிதி அமைச்சு 

                                             இலங்கைச் சுங்கம்


சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திர வினியோகம்


சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திரம் என்றால் என்ன?

  • சுங்க அலுவலர்களுடன் இணைந்து செயற்படும் வகையில் அதிகாரமளிக்கப்பட்டதொரு முகவராக அங்கீகரிக்கப்படும் நபரொருவருக்கு வினியோகிக்கப்படும் ஒரு அடையாள அட்டையே சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திரமாகும்.

சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திரம் ஒன்றினை வைத்திருப்பதன் நன்மைகள் யாவை?

  • சரக்குகளை கையாளுதல்/வெளியாக்குதல்/கப்பலில் சரக்குளை அனுப்புகின்ற கம்பனிகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • அவருடைய சொந்த சரக்குகளை வெளியாக்குதல் மற்றும் கப்பலேற்றல் போன்றவை தொடர்பில் அவரின் சொந்த பிரகடனப்படுத்துனராக செயற்பட முடியும்.
  • கப்பலில் பொருட்களை ஏற்றுதல்/ பொருட்களை வெளியாக்குதல் முகவராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதிகள்.
  • ஒரு மேலதிக தகைமையாகவும் /பொருட்கள் கையாளுதல் செயன்முறை கற்கைக்கான தகைமை.


சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திரம் ஒன்றினை வைத்திருப்பவரால் என்ன செய்ய முடியும்?

  • அவருடைய பொருள் ஏற்றுகையினர்/உரிமையாளர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்ட முகவராக செயற்பட முடியும் (சுங்கப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளுக்காக ஆவணங்களில் ஒப்பமிடல்/சமூகமளித்தல்)
  • முன் அனுமதியின்றி சுங்க வளாகத்திற்குள் நுளைய முடியும்.
  • சுங்கத்திற்கு கப்லேற்றுகை/வெளியாக்கல் ஆவணங்களை (சுங்கப் பிரகடணம்) சமர்ப்பிக்க முடிவதுடன் அவற்றினை பெற்று கப்பலேற்றல்/வெளியாக்கல் தொடர்பிலான செயன்முறையினையும் மேற்கொள்ள முடியும்.

சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திரம் ஒன்றினை எவ்வாறு பெறமுடியும்?

  • இலங்கை சுங்கத்தின் மனிதவள அபிவிருத்திப் பணிப்பகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சுங்க இல்ல முகவர்களுக்கான பரீட்சை மற்றும் பயிற்சி என்பவற்றில் திறம்பட பூர்த்தி செய்கின்ற நபர் சுங்க இல்ல முகவர் அனுமதிப்பத்திரத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.
  • விண்ணப்பமானது பல்வேறு  அதிகார ஆவணங்கள் மற்றும் அவற்றின் பிரதிகளையும் கொண்டிருத்தல் கட்டாயமானதாகும். (அதிகார ஆவணங்களது பட்டியலினை கீழே பார்க்கவும்.)


சுங்க இல்ல முகவர் பயிற்சி தொடர்பாக அதில் எவ்வாறு பங்கேற்கலாம்?

  • கபொ.த (சா/தர) பரீட்சையில் ஆங்கிலம், கணிதம், மற்றும் சிங்களம்/தமிழ் பாடங்கள் அடங்கலாக ஆறு பாடங்களில் சித்திடைந்த நபர் இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • விண்ணப்பத்துடன் பதிவு செய்யப்பட்ட கம்பனியிடமிருந்தான வேண்டுகோள் கடிதம் ஒன்றினையும்     இணைத்தல் கட்டாயமான தாகும்.
  • புதிய ஒரு சுங்க இல்ல முகவராக செயற்படுவதற்கு தேவையான ஆவணங்கள் (பிரகடணப்படுத்துபவர்)
  • வேண்டுகோள் கடிதம் (உரிமையாளர்/பங்குடமையாளர்/பணிப்பாளர் அவர்களது ஒப்பத்துடன்)
  • பூரணப்படுத்தப்பட்ட சுங்க இல்ல முகவர் விண்ணப்பப்பத்திரம்
  • வியாபார பதிவுச் சான்றிதழ்
  • வரி அடையாளப்படுத்தல் இலக்கச் சான்றிதழ்
  • பெறுமதி சேர் வரிச் சான்றிதழ்
  • சுங்க கட்டளைச் சட்டத்தின் 115 ஆம் பிரிவுக்கிணங்க சுங்க இல்ல முகவர் பதிவுக்கான விண்ணப்பம்
  • படிவம் 1/படிவம் 2அ/படிவம் 48/படிவம் 20/படிவம் 41
  • கூட்டிணைப்பு ஆவணம்/கூட்டிணைப்பு உடன்படிக்கை
  • கப்பல் முகவர்களது அனுமதிப்பத்திரம் (கப்பல் முகவர்களுக்கு மாத்திரம்)
  • ரூபா 50,000/= க்கான பண உத்தரவாதம் (கலாவதி திகதியானது முதல் பதிவு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்கு இருத்தல் வேண்டும்)
  • விலாசத்தினை உறுதிசெய்யும் ஆவணங்கள் (மின்சாரப் பட்டியல்/நீர் பட்டியல்/தொலைபேசிப் பட்டியல்)
  • காணி உறுதி அல்லது வாடகை உடன்படிக்கையின் சான்றுப் பிரதி
  • அமைவிட வரைபடம்
  • கம்பனியின் பெயருடைய கடிதத்தலைப்பில் உரிமையாளர்/பங் காளி/பணிப்பாளர் மற்றும் விண்ணப்பதாரர்களது கையொப்பத்துடனான போட்டோ அடங்கிய சகல விபரங்ளையும் உள்ளடக்கிய கடிதத்தாள் விபரம்
  • சகல மின்சார உதிரிப்பாகங்களது தொடர் இலக்கத்துடனான பொருட் பட்டியல் மற்றும் அலுவலக அமைவிட வரைபடம்
  • விண்ணப்பதாரர்களது

          - தேசிய அடையாள அட்டை
          - திறமைச் சான்றிதழ் (சுங்கச் சான்றிதழ்)
          - பொலிஸ் அறிக்கை
          - தடுப்புப் பணிப்பகத்திலான சான்றிதழ்
          - கிராம அலுவலர் சான்றிதழ்

  • 2015 ஆம் வருடத்திற்கான சுங்க இல்ல முகவர் பதிவினை புதுப்பிப்பதற்குத்தேவையான ஆவணங்கள்

         - வேண்டுகோள் கடிதம் (உரிமையாளர்/பங்காளி/பணிப்பாளர்)
         - பூரணப்படுத்தப்பட்ட சுங்க இல்ல முகவர் விண்ணப்ப்ப்படிவம்
              - CUS/CHA (01) – ஒரு பிரதி
              - CUS/CHA (02) – இரண்டு பிரதிகள்
        - பின்வருவனவற்றின் மூலப் பிரதிகள்
             - வியாபார பதிவுச் சான்றிதழ்
             - வரி அடையாளப்படுத்தல் இலக்கச் சான்றிதழ்
             - பெறுமதி சேர் வரிச் சான்றிதழ்
 

  • ரூபா 50,000/= காசு சேமிப்பு
  • வங்கியினால் வினியோகிக்கப்பட்ட சான்றிதழ் கடிதம்
  • சுங்க இல்ல முகவரது பெயரில் செயற்பாட்டிலுள்ள நடைமுறைக்கிளை சான்றுபடுத்தியதொரு கடிதத்தினை வங்கி வினியோகித்தல் வேண்டும்.
  • விலாசத்தினை உறுதிப்படுத்தல்
  • மின்சாரப் பட்டியல்/நீர் பட்டியல்/தொலைபேசிப் பட்டியல் (இறுதி இரண்டு மாதங்களுக்கிடையிலாவை)
  • விண்ணப்பதாரரது (பின்வரும் ஆவணங்களின் போட்டோ பிரதியுடன்)
  1. தேசிய அடையாள அட்டை
  2. 2013 ஆம் வருட சுங்க இல்ல முகவர் அட்டை மற்றும் அதனது போட்டோ பிரதி (இருபக்கமும்)
  3. திமைச் சான்றிதழ்
  4. சுங்க புலனாய்வு பிரிவின் அறிக்கை (1 வருடத்துக்குட்பட்டவையாக இருத்தல் வேண்டும்)
  5.  பொலிஸ் அறிக்கை – இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு விலாசமிடப்படல் வேண்டும். (இரு வருடங்களுக்குள்)
  6. கிராம அலுவலர் சான்றிதழ் (கடந்த ஆறு மாதங்களுக்குள் பெறப்பட்டவை)
     

அமைப்பு பற்றிய தகவல்

சுங்கத் திணைக்களம்

இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.



தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364
மின்னஞ்சல்:dgc@customs.gov.lk
இணையத்தளம்: www.customs.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2015-07-14 17:08:00
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-09-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 244