தகுதி
• மோட்டார் வாகன ஆணையாளரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை இந்த அலுவலகத்தில் வாகன இசைவு பெற்ற நாளிலிருந்து 6 வாரத்திற்க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
• வாகன மேலுறையானது மண்/சகதி ஆகியவை நீக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். இதை உறுதிசெய்வதற்க்கான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
• இந்த உரிமம் வாகன பாகங்களின் மேலுறையை இறக்குமதி செய்ய மட்டும் செல்லதக்கது.
• மேலுறையானது வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உரிமம் பெறுவதற்கு வாகனத்தை பயன்படுத்தக்கூடாது மற்றும் வாகனமானது மோட்டார் வாகன ஆணையாளரின் ஆய்வுக்கு 04 வாரங்களுக்குள் அனுப்பப்பட வேண்டும்.
• மேலுறையை இறக்குமதி செய்ய தேவைப்படும் உரிமத்தை பெறுவதற்க்காக வாகனமானது பயன்படுத்தப்படவில்லையென்று மேட்டார் வாகன திணைக்களத்திடமிருந்து கடிதம் பெற வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வாகன மேலுறையை இறக்குமதி செய்வதற்க்கான வேண்டுகோள் கடிதம்
• வாகன போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட விசைவுக் கடிதம்
• மாதிரி இடாப்பு
• வாகன உரிமை ஆவணங்கள்
• ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்கள காசாளரிடமிருந்து பெறப்பட்ட இடாப்பு.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பபடிவங்கள் மற்றும் ஆவணங்கள் பெறுதல்
கருமபீடம் – பகுதி 02
பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
விண்ணப்பபடிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் (1.10.7 பிரிவை சரி பார்க்கவும்)
கருமபீடம் – பகுதி 02
விண்ணப்பபடிவங்கள்
மாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்
படிப்படியான வழிமுறைகள்
படி 1
பகுதி 02லிருந்து விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்
படி 2
பகுதி 02ற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்களையும் சமர்ப்பித்தல்
படி 3
அனைத்து இணைப்பு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு மற்றும் விண்ணப்பம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பதாரர் காசாளரிடம் அனுப்பிவைக்கப்படுவார்.
படி 4
விண்ணப்பதாரர் காசாளரிடம் உரிம கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் சரக்குபட்டியலை பகுதி 02க்கு அனுப்பிவைத்தல்
படி 5
உரிமம் வழங்குதல்
குறிப்பு
• சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமலிருந்தால், விடுபட்ட ஆவணங்களைப் பற்றி விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்
• விண்ணப்பபடிவம் முறையாக பூர்த்தி செய்யப்படாமலிருந்தால், விண்ணப்பதாரருக்கு படிவத்தை பூர்த்தி செய்ய துணை புரிதல்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் வரை
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பபடிவங்கள் மற்றும் ஆவணங்கள் பெறுதல்
கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 3.00 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கி வழமைரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
விண்ணப்பபடிவங்கள், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்
கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
இந்தச் சேவைக்காக ஏற்றுக்கொள்ளக் கூடிய காலம் 03 மாதங்களாகும்.
குறிப்பு:
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலத்தை நீட்டிக்க விண்ணப்பதாரர் விரும்பினால், அவன்/அவள் தகுந்த காரணங்களை வழங்க வேண்டும் மற்றும் கட்டுப்பாட்டாளரிடம் அந்த வேண்டுகோள் அனுப்பிவைக்கப்படும். கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளிக்களாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பார்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்
விண்ணப்பம் பெற கட்டணம் ஏதுமில்லை
கட்டணம்
CIFன் மதிப்பில் 0.1% ஆக இருக்கும்
அபராதங்கள்
• இடாப்பின் மதிப்பை இறக்குமதி மதிப்பு தாண்டிச் சென்றால், அந்த தொகை பற்றுவைத்தலின் போது செலுத்தப்பட வேண்டும்.
இதரக்கட்டணம்
பொருந்தாது.
சிறப்பு வகையறைகள்
• எந்த வகையிலாவது விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலத்தை நீட்டிக்க விரும்பினால், வேண்டுகோளானது கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பப்படும். வேண்டுகோளுக்கான ஒப்புதல் வழங்கப்படுமா அல்லது
அமைப்பு பற்றிய தகவல்இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01 திரு.W.A.R.H. வன்ஸதிலக தொலைபேசி:+94-11-2326774 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2328486 மின்னஞ்சல்:imexport@sltnet.lk இணையத்தளம்: www.imexport.gov.lk
|