நீங்கள் இருப்பது இங்கே:Home வங்கிக் கணக்கு ஆரம்பித்தல்
Required Forms
வங்கிக் கணக்கு ஆரம்பித்தல்
கீழ்க்காணப்படும் கணக்குகள் சமுர்த்தி வங்கியில் இருக்கின்றன.
1. உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கு
சிறு குழுக்கள் மற்றும் சமுர்த்தி சமுகத்தின் உறுப்பினர்கள் மட்டும் இந்த கணக்கை தொடங்கலாம்.
2. உறுப்பினர் அல்லாதவர்களின் சேமிப்பு கணக்கு
சிறு குழுக்கள் மற்றும் சமுர்த்தி சமுகத்தின் உறுப்பினர் அல்லாதவர்கள் இந்த கணக்கை தொடங்கலாம்.
3. குழு சேமிப்பு கணக்கு
சிறு குழுக்கள் மற்றும் சமுர்த்தி சமுகத்தின் உறுப்பினர்கள் குழுவாக இணைந்து இந்த கணக்கை தொடங்கலாம்.
4. குழந்தைகள் சேமிப்பு கணக்கு
சமுர்த்தி சமுகங்கள் மற்றும் சிறு குழுக்களிலுள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்காக தொடங்கலாம்.
5. திரியமாதா சேமிப்பு கணக்கு
சமுர்த்தி சமுகத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் அல்லது மனைவியை இழந்தவர் மட்டும் இந்த கணக்கை தொடங்கலாம்.
6. சிசுரக்கா– பள்ளி சேமிப்பு கணக்குகள்
சமுர்த்தி சமுகங்கள் மற்றும் சிறு குழுக்களிலுள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்காக தொடங்கலாம்.
7. கட்டாய சேமிப்பு கணக்கு
சமுர்த்தி முத்திரையை பெற்று பயன்பெறும் அனைத்து உறுப்பினர்களும் இந்த கணக்கை கட்டாயமாக தொடங்க வேண்டும்.
8. கேகுலு சிறுவர் சேமிப்பு கணக்கு
இந்த கணக்கு வங்கி சமூக வலையமைப்பிட்குட்பட்ட 18 வயதுக்கு கீழான சிறுவர்களுக்குரியது
தகுதி
1. விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட சமுர்த்தி பகுதிக்குள் இருக்க வேண்டும்
2. விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
குறிப்பு: இந்த தகுதி குழந்தைகள் சேமிப்பு கணக்கு மற்றும் சிசுரகா-பள்ளி சேமிப்பு கணக்குக்கு பொருந்தாது
3. கீழ்காணும் வங்கி கணக்குளை தொடங்க வேண்டுமெனில் விண்ணப்பதாரர் சிறு குழுக்கள் அல்லது சமுர்த்தி சமுதாயத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
• உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கு
• குழு சேமிப்பு கணக்கு
• குழந்தைகள் சேமிப்பு கணக்கு
• திரியமாதா சேமிப்பு கணக்கு
• சிசுரக்கா– பள்ளி சேமிப்பு கணக்குகள்
குறிப்பு: மற்றவர்கள் உறுப்பினர் அல்லாத வங்கி கணக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
4. குழு சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்
சமர்ப்பிக்கும் முறைகள்
• விண்ணப்பத்தை எங்கு பெறலாம் வேண்டப்படும் இடங்கள்
விண்ணப்பத்தை சமுர்த்தி சேவகர் அல்லது சமுர்த்தி வங்கிக்கு சென்று பெற்று கொள்ளலாம்
• யாருடைய கையெழுத்து விண்ணப்பத்தில் இருக்க வேண்டும் விண்ணப்பதாரருடைய கையெழுத்து
• விண்ணப்பத்தை எங்கே சமர்பிப்பது
விண்ணப்பங்கள் சமுர்த்தி சேவகரிடம் அல்லது சமுர்த்தி வங்கிக்கு சென்று சமர்பிக்கபடலாம்.
• யாரிடம் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்
சமுர்த்தி வங்கி மேலாளரிடம் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்
குறிப்பு:
இணைப்பு ஆவணங்கள் பகுதியைப் பார்க்கவும்
1.உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 8
2.உறுப்பினர் அல்லாதவர்களின் சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 1
3.குழு சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள் ----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 5
4.குழந்தைகள் சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 4
5.உறுப்பினர்கள் அல்லாதவர்கள் கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 2/3
6.சிசுரக்கா– பள்ளி சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல -
7.திரியமாதா சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 6/7
8.அமைப்பு/சமூக/குழு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 9
9.கட்டாயசேமிப்பு கணக்கு----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல10
படிப்படியான வழிமுறைகள்:
படி 1: சமுர்த்தி சேவகரிடமிருந்தோ அல்லது சமுர்த்தி சமுதாயங்களின் கூட்டங்களில் பங்கு பெறுவதன் மூலமாகவும் பல்வேறுபட்ட சேமிப்பு கணக்குகளின் தகவல்களை விண்ணப்பதாரர் பெறலாம்
படி 2: அனைத்து விண்ணப்பங்களையும் சமுர்த்தி வங்கி அல்லது சமுர்த்தி சேவகரிடமிருந்து பெற்று கொள்ளலாம்.
படி 3: சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமுர்த்தி வங்கியில் அல்லது சமுர்த்தி சேவகரிடம் சமர்பிக்கலாம்.
படி 4: விண்ணப்பதாரர் வைப்பு நிதியை ரூ. 5.00 முதல் தொடங்கி அந்த தொகையானது, ரூ 500.00 ஆக மாறிய பிறகு அந்த சேமிப்பு கணக்கை வைத்திருப்பவர் வங்கியின் ஒரு பங்கை பெறுவார். இதே போன்றே சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் தொகையானது அதிகரிக்கும் பொழுது அந்த தொகைக்கு ஏற்றவாறு பங்குகள் அதிகரிக்கப்படும்
படி 5: விண்ணப்பதாரர் இரசீதை பூர்த்தி செய்வதன் மூலம் சமுர்த்தி வங்கியில் பணத்தை சேமிப்பு கணக்கில் வைக்கவோ அல்லது எடுக்கவோ முடியும்.
படி 6: சேமிப்பு கணக்கு வைப்பவர் பணத்தை வைப்புநிதியில் வைக்கப்பட்டதற்கும் அல்லது எடுக்கப்பட்டதற்கும் சமுர்த்தி வங்கி அல்லது சமுர்த்தி சேவகர் இரசீது வழங்குவார்.
படி 7: விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட சமுர்த்தி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறாரோ பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து அல்லது எடுக்கவோ முடியும்.
குறிப்பு:
எதிர்மறையான நிபந்தனைகள் பற்றிய விளக்கங்கள் படிப்படியான வழிமுறைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன
• விண்ணப்பதாரர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சமுர்த்தி வங்கியை தவிர வேறு சமுர்த்தி வங்கியிலிருந்து பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து வைக்கவோ அல்லது பணத்தை வங்கியிலிருந்து எடுக்கவோ முடியாது.
• சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் சேமிப்பு கணக்கை ஒரு சமுர்த்தி வங்கியிலிருந்து வேறு சமுர்த்தி வங்கிக்கு மாற்றம் செய்ய இயலாது.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
விண்ணப்பதாரர் சேமிப்பு கணக்கு புத்தகத்தை செயல்முறைகள் முடிந்த 4 நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவத்தை பெறுதல்
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப9.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்தல்
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப9.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
குறிப்பு:
பகுதியின் அடிப்படையில் சில சமுர்த்தி வங்கிகளின் மூடும் திகதி மாறுபடும்.
ந.ப.: சில சமுர்த்தி வங்கிகள் வார வேலை நாட்களுக்கு பதிலாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்கும்.
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
சேவை காலவாதியாகும் திகதி இல்லை
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்
விண்ணப்பங்களை பெறுவதற்கு செலவினம் ஏதுமில்லை
கட்டணம்
இந்த சேவையை பெறுவதற்கு செலவினம் ஏதுமில்லை
அபராதங்கள்
அபராதங்கள் ஏதுமில்லை.
இதரகட்டணம்
கூடுதல் செலவினம் ஏதுமில்லை
குறிப்பு:
கணக்கு வைத்திருப்பவரின் வங்கி கணக்குப் புத்தகம் எந்த சூழ்நிலையாவது தொலைந்து அல்லது சிதைந்து போகும் பட்சத்தில் அதற்குரிய கட்டணம் அளவிடப்படும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
•பொருந்தாது
சேவைக்கானப் பொறுப்புக் குழு
நபரின் பதவி கோட்டத்தின் பெயர்
சமுர்த்தி மேலாளர் சமுர்த்தி வங்கி
சமுர்த்தி சேவகர் சமுர்த்தி வங்கி
சிறப்பு வகையறைகள்
விண்ணப்பதாரர் சமுர்த்தி வங்கியிடமிருந்து கடன் பெற்றிருந்தால், கடனின் குறிப்பிட்ட சதவீதமானது கடனை திரும்பப் பெறுவதற்காக அவருடைய சேமிப்பு கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
சமுர்த்தி வங்கியின் மூலம் பயன் பெறுபவர் உடல்நலம் சார்ந்த பயன்பாட்டிற்கு தவிர ஒரு குறிப்பிட்ட காலம் வரை கட்டாய சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுக்கமுடியாது.
போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்
(பதிப்பிற்கான விண்ணப்பப்படிவங்கள் போலி தகவல்களுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன)
அமைப்பு பற்றிய தகவல்
Department of the Commissioner General of Samurdhi
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.