இந்த நிகழ்ச்சியின் மூலம் சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட கூட்டத்தினரின் பிரச்சனைகளை கண்டுணர்ந்து, அவர்களின் பொருளாதார தரத்தை உயர்த்தி மேன்பாட்டிற்க்கு பாடுபடுவது இலங்கை சமுர்த்தி அதிகார குழுமத்தின் நோக்கமாகும் மற்றும் இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்வுசெய்து மற்றும் மக்களின் ஆன்மநிலையையும் நீதி மதிப்பையும் அபிவிருத்தி செய்யப்படும்.
A) போதை மருந்து கட்டுப்பாட்டு நிகழ்ச்சி
போதை மருந்து உபயோகபடுத்துவதால் ஏழை குடும்பத்தினரின் பொருளாதார வாழ்க்கை மேலும் சீர்கெடுகிறது மற்றும் இதனால் ஏற்படும் பிரச்சனைகளின் இறுதி முடிவு வறுமையை அதிகரிப்பதாகும். போதை ஒழிப்பு நிகழ்ச்சி 1996 முதல் தொடங்கி வறுமையை குறைத்து மற்றும் போதை மருந்து உபயோகிப்பதை குறைக்கும் வரை நடத்தப்படும்.
B) குழந்தை வன்கொடுமையை தடுத்தல் மற்றும் குழந்தை நலம் பேணும் நிகழ்ச்சிகள்
குழந்தை உரிமையை பாதுகாத்தல் மற்றும் குழந்தையை வன்கொடுமையில் இருந்து தடுத்தல் போன்றவற்றிற்காக இலங்கை சமுர்த்தி அதிகார சபை மற்றும் தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகார சபைகள் சேர்ந்து பலவிதமான முகாம்களை நடத்துகிறது. தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகார சபை உடல்ரீதியான தண்டனை என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தின் 10,000 பிரதிகளை இலங்கை சமுர்த்தி அதிகார சபையிலிருந்து வாங்கி பள்ளிக் குழந்தைகளை வன்கொடுமையில் இருந்து தடுப்பதற்காகவும் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இடையே விழிப்புணர்வு ஏர்படுத்துவதற்காகவும் கோட்ட செயலகம், பொது சமுகம், வங்கிச் சமுகங்கள் அளவில் இப்பிரதிகளை வினியோகிக்கிறது. உடல் ரீதியான தன்டனைகளை குறைக்கவும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களிடையே பொறுப்பை வளர்ப்பதுமே இதனுடைய முக்கிய நோக்கமாகும்.
C) தற்கொலை போக்குகளை தடுப்பதற்க்கான நிகழ்ச்சிகள்
இலங்கை சமுர்த்தி அதிகார சபை இலங்கை சுமித்ரயுடன் இணைந்து பின்வரும் செயல்களான மக்களை தற்கொலை முடிவிலிருந்து தடுப்பதற்க்காக மாவட்டங்கள் மற்றும் கோட்ட செயலகங்கள் மற்றும் பொது சமுதாய நிலைகள் நடைமுறைப்படுத்துகிறது. “இலங்கை சுமித்ரயுடன்” இணைக்கப்பட்ட இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமுர்த்தி மேலாளர், சமுர்த்தி வடிவமைப்பின் மூலம் முழுமையான பங்களிப்பு வழங்குகின்றது
D) ஞாபகார்த்தமாகக் கொண்டாடபடும் சர்வதேச தினங்கள்
ஒவ்வொரு வருடத்தின் காலாண்டிற்க்கு ஒன்று என்ற விகிதத்தில் 04 சர்வதேச தினங்களை சமுதாய அபிவிருத்தி தீவு முழுவதுமான நிகழ்ச்சியாளர்களை கொண்டு நடத்துகிறது.
சர்வதேச மகளிர் தினம் (08வது மார்ச்)
சர்வதேச புகை ஒழிப்பு தினம் (31வது மே)
சர்வதேச எழுத்தறிவு தினம் (08வது செப்டம்பர்)
சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் (17வது அக்டோபர்)
E) முதியோர்கள் நலன்
அக்டோபர் 1ல் தொடங்கிய சர்வதேச முதியோர்கள் தினத்தை ஞாபகார்த்தமாகக் கொண்டாடுவதற்காக சமுக அபிவிருத்தி நிகழ்ச்சிகளை செயல்படுத்தி நடத்தி வருகிறது.
F) வீட்டுவசதி ஏற்படுத்தும் முகாம்
கிராம சேவகர், மண்டலம் மற்றும் கோட்ட நிலைகளில் உள்ள உதவியற்ற மற்றும் வீடு இல்லாத ஏழை மக்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சமுதாய அபிவிருத்தி தர்மஸ்தாபனம் வீடுகட்டி தருகின்றது.
G) போர் வீரனின் குடும்பங்கள் மற்றும் போரில் ஊனமுற்றோர்கான நல்வாழ்வு
மண்டலம் மற்றும் மாவட்ட நிலையில் ஊனமுற்றோர்கான நலவாழ்வு நிகழ்ச்சிகளை செயல்படுத்தி ஊனமுற்ற நபருக்கான நலவாழ்வு சமுதாயத்தை அபிவிருத்தி செய்யப்படும்.
H) சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பங்களுக்கான நலவாழ்வு
மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சமுதாய பிரச்சனைகளை சந்தித்தவர்களின் குடும்பத்தை மேன்படுத்தி, சமுதாயம் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக அவர்களை மாற்றுவதற்க்காக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
I) நலவாழ்வு முகாம்
மற்றத் தலைப்புகளில் குறிப்பிடப்படாத நிகழ்ச்சிகளை கோட்டம் மற்றும் மாவட்ட நிலையில் நடத்தப்படுகிறது. சமுதாயம் மற்றும் நற்பண்பு சார்ந்த நிகழ்ச்சிகள், சுற்றுப்புற நிகழ்ச்சிகள், ஊட்டசத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நேரத்திற்க்கு ஏற்ப மற்ற நிகழ்ச்சிகள் நடத்துகிறது
J) சிறு தொழில் முனைதலுக்கான பயிற்ச்சி மற்றும் வணிக வரைபடம் வரைதலுக்கான விளக்கம்.
சமுதாய அபிவிருத்தியின் நோக்கத்தை அடைவதற்க்காக மற்றும் குடும்பத்தில் ஒருவர் சிறையில் இருப்பதால் குடும்பத்திற்க்காக வேலை செய்யும் நிலையில் இருக்கும் மக்களுக்காக சமுதாய அபிவிருத்தியின் உதவியாளர்கள் 2001ல் 18 மாவட்டங்களில் தொழில் முனைதலுக்கான பயிற்சி முகாம்களை செயல்படுத்தி மக்களுக்கு பயிற்சி அழிக்கின்றனர்.
K) “சமாஜா” பத்திரிக்கை வெளியீடு
நடப்பு நிகழ்ச்சிகள், நேர்கானல், தனிச்சிறப்புகள் மேலும் இதுபோன்றவற்றை பற்றி விவாதிப்பது மற்றும் பத்திரிக்கை மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குதல் மற்றும் சமுர்த்தி சமுதாய அபிவிருத்தியின் முக்கிய கருப்பொருளிற்க்கான சமுதாய அபிவிருத்தி முகாமின் வருடாந்திற இலக்கை அடைவதற்க்கு உதவி செய்தல் போன்ற இவ்விரண்டும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
அமைப்பு பற்றிய தகவல்Department of Divinaguma Development
4th Floor, Sethsiripaya,
Battaramulla.
Mr.M.A.Hiran Prasanna தொலைபேசி:+94-11-2872202 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889002 மின்னஞ்சல்:samurdhidg@gmail.com இணையத்தளம்: -
|