தகுதி
- ஒரு இலங்கைவாசி கோட்ட செயலகத்தின் எல்லைக்குள் இறக்க நேர்ந்தால், இறந்த நிகழ்ந்த இடத்தின் பிரிவிலுள்ள கோட்ட செயலகத்திடமிருந்து இறப்பு சான்றிதழின் நகலை பெற தகுதியுடையவர்கள் ஆவர். இறப்பு வாழ்விட வட்டாரத்திற்கு வெளியில் நடந்தால், இறப்பு நடந்த இடத்தின் கோட்ட செயலகத்திடம் ஒருவர் செல்ல வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
1 விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்
- விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை விசாரணைப் பிரிவிலிருந்தோ அல்லது எந்த ஒரு கோட்ட அலுவலகத்தின் அதற்குண்டான சான்றிதழ் பதிவாளரிடமிருந்தோ பெற வேண்டும்.
- விண்ணப்பப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்தல்.
- இறப்பை நிரூபிப்பதற்காக இணைக்கப்பட வேண்டிய இணைப்பு ஆவணங்கள் பின்வருமாறு:
இறப்பு நடந்த 3 மாதங்கள் முடிந்த பிறகு பதிவு செய்தால் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
• வசிப்பிடத்தில் இறப்பு நேரிட்டால் கிராம சேவகரின் அறிக்கை.
• மருத்துவமனையில் இறப்பு நேரிட்டால் மருத்துவ அலுவலரின் இறப்பு அறிக்கை.
இறப்பு நடந்த 3 மாதங்கள் கழிந்த பிறகு பதிவு செய்தால் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
• வேண்டுதல் கடிதம்
• இறப்பு அறிக்கை
• கண்ணால் கண்ட 2 சாட்சிகளின் வாக்குமூலத்தின் ஆதாரம்.
• பன்சுகுலாவில் பங்கு பெற்ற புத்த துறவி அல்லது புதைக்கும் போது பங்குபெற்ற மதகுரு
• ஈமச்சடங்கு உதவி அமைப்பு இருப்பின், அவ்வமைப்பின் அலுவலரின் வாய்மொழி ஆதாரம்.
• திடிர் இறப்பு நேர்ந்தால், திடிர் இறப்பினை விசாரணை செய்ததற்கான விசாரணை அறிக்கை.
விண்ணப்பபடிவத்தின் இலக்கம் - னுP/யுடுஃவருடம்/மாதம்
சாதாரண பதிவிற்கு- பதிவு 63 யு
தாமத பதிவிற்கு- படிவம் 15
2 விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க தேவையானவை
- விண்ணப்பதாரர் பதிவாளரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பதிவாளரின் முகவரியிடப்பட்ட தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் தபாலில் அனுப்ப வேண்டும்.
3 குறிப்பு:
- விண்ணப்பதாரர் தபாலில் அனுப்புவதென்றால் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பதாரர் இறப்பு நிகழ்ந்தவுடன்; கிராம சேவகரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின் இறப்பு நிகழ்ந்த 5 நாட்களுக்குள் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
- இறப்பு சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நேரம்:
மு.ப. 9.00 – பி.ப. 12.30
பி.ப. 1.00 – பி.ப. 4.45
விண்ணப்பபடிவங்கள்
விண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர்
விளக்கம்
இறப்பு சான்றிதழ் மற்றும்/ அல்லது பதிவை தேடுவதற்கான விண்ணப்பம் - படிவம் B63 யு
இறப்பு சான்றிதழின் பிரதியைப் பெறுதல்
படிப்படியான வழிமுறைகள் (இறப்புச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்)
படி 1: விண்ணப்படிவத்தை விசாரணைப் பிரிவிலிருந்தோ அல்லது கோட்டச் செயலகத்தின் பதிவாளரிடமிருந்தோப் பெறுதல்.
படி 2: விண்ணப்பப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்தல
படி 3: விண்ணப்பதாரர் இணைப்பு ஆவணங்களை தயார் செய்;தல்.
படி 4: விண்ணப்பதாரர் கோட்டச் செயலகத்திற்கு தபாலில் அனுப்புதல் அல்லது கோட்டச் செயலகத்தின் பதிவாளரிடம் நேரடியாகச் சமர்ப்பித்தல்.
குறிப்பு:
விண்ணப்பம் தபால் மூலம்/நேரடியாகவோ தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
படி 5: கோட்டச் செயலகம் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று உண்மைப் பதிவைப் பதிவேடுகளில் சரிப்பார்த்தல்;.
படி 6: விண்ணப்பதாரர் திருமணச் சான்றிதழைத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோப் பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு :
விண்ணப்பதாரர் தகுதியிழந்தால் பதிவாளர் விண்ணப்பத்தை விண்ணப்பதாரருக்கு தகுதி நீக்கம் செய்யபட்டதற்கானக் காரணத்துடன் திருப்பி அனுப்புவார்.
காலக் கோடு
செயல்முறை காலக் கோடு
ஆவணங்களை எளிதாக தேடுவதற்காக விண்ணப்பதாரர் உண்மைத் இறப்புச் சான்றிதழின் பதிவிலக்கம் அல்லது பதிவிலக்கத்தை தரும் பட்சத்தில் புதியத் இறப்புச் சான்றிதழ் 2 லிருந்து 3 நாட்களுக்குள் தயார் செய்து விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். தேடுகின்ற தகவல்கள் கிடைக்காதப் பட்சத்தில் விண்ணப்பத்தின் செயல்முறைக் காலம் கிடைக்க கூடிய மனிதவளத்தைப் பொறுத்து சாதரணமாக ஆகக்கூடிய நேரத்தைவிட அதிக நேரம் தாமதமாகும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
படி 1: விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்.
விண்ணப்பபடிவங்களை விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலகத்தில் உள்ள பதிவாளரின் வேலை நேரத்தில் சமர்ப்பிக்கலாம்.பணிநாட்கள் – திங்கள் கிழமை – வெள்ளிக் கிழமை (திங்கள் கிழமை ரூ புதன் கிழமை விரும்பத்தகுந்த நாட்கள்)
கருமப்பீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப. 9.00 முதல் 12.30 பி.ப.இ பி.ப. 1.00 முதல் பி.ப. 3.00
விடுமுறைகள் – பொது மற்றும் அனைத்து வணிக நாட்கள்;
படி 2: விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல்
விண்ணப்பம் நேரடியாக சமர்ப்பித்தால், நேரம் வீணாவது இல்லை. விண்ணப்பம் அஞ்சல் மூலமாக அனுப்பினால் அஞ்சல் நேரத்தைப் பொறுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை சென்றடையும்.
பணிநாட்கள் – திங்கள் கிழமை – வெள்ளிக் கிழமை (திங்கள் கிழமை ரூ புதன் கிழமை விரும்பத்தகுந்த நாட்கள்)
கருமப்பீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப. 9.00 முதல் 12.30 பி.ப.இ பி.ப 1.00 முதல் பி.ப. 3.00
விடுமுறைகள் – பொது மற்றும் அனைத்து வணிக நாட்கள்;
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
நீடித்து நிற்கும் கால அவகாசம்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
பிரதியைப் பெறுவதற்கான முத்திரைக் கட்டணங்கள் பின்வருமாறு:
1. பதிவுத் திகதி அல்லது சான்றிதழ் இலக்கம் தெரிந்திருந்தால் பிரதியைப் பெறுவதற்கானக் கட்டணம் ரூ. 5
ஒவ்வொருப் பிரதிக்கும் ரூ. 5 செலுத்தி மேலும் இரு பிரதிகள் பெற்றுக் கொள்ளலாம்.
2. பதிவுத் திகதித் தெரியாதப் பட்சத்தில் ஏடுகளில் 3 மாதங்கள் தேடி ஒரு பிரதியைப் பெறுவதற்கு முத்திரைக் கட்டணம் ரூ. 10. ஒவ்வொருப் பிரதிக்கும் ரூ. 5 செலுத்தி மேலும் இரு பிரதிகள் பெற்றுக் கொள்ளலாம்;.
3. இறப்பிலிருந்து 2 வருடக் காலங்களுக்கு ஏடுகளில் தேடப்பட வேண்டியிருப்பின் முத்திரைக் கட்டணமாக ரூ. 20 செலுத்த வேண்டும்.
ஒவ்வொருப் பிரதிக்கும் ரூ. 5 செலுத்த வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.