The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுசரணை, பயிற்சி மற்றும் அபிவிருத்தி நீண்ட காலக் குத்தகை முறிகள்
கேள்வி விடை வகை முழு விபரம்


விசேட செயற்திட்டங்களுக்கென நீண்ட காலக் குத்தகை முறிகள் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள் :
•    அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டுள்ள செயற்திட்டமாக இருத்தல்
•    முதலீட்டுச் சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ள செயற்திட்டமாக இருத்தல்.
•    கைத்தொழில் அமைச்சினால் அனுமதிக்கப்பட்டுள்ள செயற் திட்டமாக இருத்தல்.
•    பணிப்பாளர் சபையில் குறைந்தது ஒரு உறுப்பினராவது இலங்கைப் பிரசையாக இருத்தல்

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
எழுத்திலான விண்ணப்பத்தைப் பிரதேசச் செயலாளர்/ மாகாணக் காணி ஆணையாளர்/ காணி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல்

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
விசேட விண்ணப்பப் படிவங்கள் இல்லை. தாங்களே தயாரித்துக் கடித அமைப்பிலான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
இயைப்புடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை
அரச விடுமுறையாக இல்லாத எந்த ஒரு தினத்தில் அலுவலக நேரங்களினுள்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
•    சேவைக் கட்டணம் அறவிடப்படமாட்டாது
•    காணியைக் குத்தகைக்கு வழங்குவதினால் வருடாந்தக் குத்தகைப் பணம் அறவிடப்படும்.
•    குத்தகைப் பணம் அறவிடும் முறைமை :
காணியைக் கையளித்த வருடத்தில், காணியின் வர்த்தகப் பெறுமதியின் 4% வருடாந்தக் குத்தகையாகச் செலுத்த வேண்டும். ஒவ்வொறு 5 வருடங்களுக்குமொரு தடவை குத்தகைப் பணம் 50% ஆல் மீள் திருத்தம் செய்யப்படும்.

மேற்கூறப்பட்டுள்ள அனைத்துத் தருணங்களிலும் ஒரு முறை மட்டும் செலுத்தப்பட வேண்டிய தவணைப் பணம் குத்தகை ஆரம்பிக்கும் போது அறவிடப்படும்.

தவணைப் பணம்     :  வருடாந்தக் குத்தகைப் பணத்தின் மூன்று மடங்குகள்

குத்தகைப் பணத்தைத் தீர்மானித்து அறவிடப்படுவதற்குக் கையாளப்படும் அனைத்துப் பெறுமதி மதிப்பீடுகளும் அரச பிரதான பெறுமதி மதிப்பாளரின் மதிப்பீடுகளுக்கமையவே மேற்கொள்ளப்படும்.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை :
குறைந்தது 06 மாதங்கள்
 

தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
•    விண்ணப்பம்
•    செயற்திட்ட அறிக்கை
•    செயற்திட்டம் தொடர்பாக முதலீட்டுச் சபை/ கைத்தொழில் அமைச்சு/ வெறு ஏற்புடைத்த நிறுவனத்தின் அங்கீகாரம்
•    வர்த்தகப் பதிவுச் சான்றிதழ்
•    கூட்டு வர்த்தகமெனில் பணிப்பாளர்களின் விபரங்கள்
(கம்பெனிப் பதிவுச் சட்டத்தின் கீழான விளக்கங்கள்)
•    நிள அளவை வரைபடம் அல்லது கிட்டத்தட்டச் சரியான சுவடு வரைதல் (இருக்குமானால்)

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவிநிலை அலுவலர்கள் :
பதவி         :    பிரதிக் காணி ஆணையாளர்  (காணி)
பெயர்        :    திருமதி. பி.டி.ஐ.எல். விஜேகுணவர்தன
பிரிவு        :    காணி    
தொலைபேசி    :    011 - 2675571   
தொலைநகல்     :    011 – 2684051
மின்னஞ்சல்    :    landcommdept@gov.lk

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இயைப்புடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு (விண்ணப்பப்படிவம்  ஒன்றை இணையுங்கள்) :
இல்லை

பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம் (பூரணப்படுத்தப் பட்ட மாதிரியுரு பத்திரமொன்றை இணையுங்கள் :
இயைப்புடையதல்ல

 


அமைப்பு பற்றிய தகவல்

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.


திருமதி. த . முருகேசன்
தொலைபேசி:+94-11-2797400
தொலைநகல் இலக்கங்கள்:0112 - 864051
மின்னஞ்சல்:info@landcom.gov.lk
இணையத்தளம்: www.landcom.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 18:29:19
ICTA Awards

தொடர்பு

Prerequisites


Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 197