The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Education & Training Vocational Education & Training தொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்
கேள்வி விடை வகை முழு விபரம்


தொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்

PDF Print Email

தொழில் பயிற்சியின் மூலம் அல்லது தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தற்போது பெற்றுள்ள தேர்ச்சிகளை மதிப்பீட்டிற்கு உட்படுத்தி (Recognition of Prior Learning - RPL) தேசியத் தொழில் தகைமைகள் (NVQ) சான்றிதழ்களை வழங்கல் இதன் நோக்கமாகும்.
சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை :
•    தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள பின்வரும் தொழினுட்பக் கல்லூரிகளின் மூலம் இனங்காணப்பட்ட துறைகளுக்காக RPL இன் கீழ் NVQ சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து ரூ. 250.00 ஐச் செலுத்திப் பதிவுசெய்ய வேண்டும். 

நிலையம்    சான்றிதழ் பெறப்படத்தக்க தொழில்கள்
தொழினுட்பவியல் கல்லூரி – மருதானை    ரூபவாகினி, வானொலி ஆகியவற்றுடன் தொடர்புபட்ட பொருள்களைப் பழுதுபார்த்தல்
தொழினுட்பக் கல்லூரி – களுத்துறை    தச்சுத் தொழில் (தளவாட) நுட்பம், நீர்க்குழாய்த் தொழினுட்பம்
தொழினுட்பவியல் கல்லூரி - கண்டி    வளிச்சீராக்க, குளிரேற்றல் நுட்பம்
தொழினுட்பக் கல்லூரி - பாததும்பற    வீட்டு மின், இலத்திரன் உபகரணங்களைப் பழுதுபார்த்தல்
தொழினுட்பவியல் கல்லூரி – காலி    நீர்க்குழாய்த் தொழினுட்பம்
தொழினுட்பக் கல்லூரி - பலப்பிட்டியா    உருகிணைத்தல் தொழினுட்பம்
தொழினுட்பக் கல்லூரி – வாரியப்பொல    உருகிணைத்தல் தொழினுட்பம், மேசன் தொழினுட்பம்
தொழினுட்பக் கல்லூரி – கேகாலை    வளிச்சீராக்க, குளிரேற்றல் தொழினுட்பம்
தொழினுட்பக் கல்லூரி – வரக்காப்பொல    நீர்க்குழாய்த் தொழினுட்பம்
தொழினுட்பக் கல்லூரி – குருநாக்கல்    மேசன் தொழினுட்பம்
தொழினுட்பவியல் கல்லூரி - அனுராதபுரம்    உருகிணைத்தல் தொழினுட்பம்
தொழினுட்பக் கல்லூரி - தெஹியத்தகண்டி    உருகிணைத்தல் தொழினுட்பம், நீர்க் குழாய்த் தொழினுட்பம்

(எதிர்காலத்தில் வேறு துறைகளும் நிலையங்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படும்)

•    இதன் பின்னர் மதிப்பீட்டு அலுவலரும் (Assessor)  நீரும் ஒன்று சேர்ந்து வசதியான ஒரு தினத்தில் தேர்ச்சி பற்றிய சான்றுகள், கோப்புகளைப் பரிசோதித்தல், செய்முறை வேலை செய்தலை அவதானித்தல், சான்றுகள் பலமிக்கனவாக இராத சந்தர்ப்பங்களில் செய்முறைப் பரீட்சையையும் அறிமுறைப் பரீட்சையையும் நடத்தல் ஆகியன மேற்கொள்ளப்படும்.  செய்முறைப் பரீட்சையை நடத்தத் தேவையான மூலப்பொருள்கள், அவற்றுக்கான செலவுகள் என்பன பற்றி விண்ணப்பகாரருக்கு அறிவிக்கப்படும்.  அப்பணத்தைத் தொழினுட்பக் கல்லூரிக்குச் செலுத்த வேண்டும்.

(இப்பரீட்சையை நடத்துமுன்பாக விண்ணப்பதாரருக்குத் தேவையெனின் உரிய கல்லூரியின் மூலம் செய்முறைப் பரிச்சயக் கற்கையைப் பெறலாம்.  அதற்காகக் கல்லூரியின் மூலம் விதிக்கப்படும் கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டியிருக்கும்.

•    இம்முன் கற்றல் மதிப்பீட்டின் பின்னர் அதன் பேறுகள் தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்தின் பரீட்சைப் பிரிவுக்கும் தேசிய தொழில் பயிலுநர், தொழினுட்பப் பயிற்சி அதிகாரசபைக்கும் (NAITA) சமர்ப்பிக்கப்படும்.
•    மூன்றாம் நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவினாலும் (TVEC) NAITA  யின் பணிப்பாளர் (மதிப்பீடு) கையொப்பத்துடனும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
•    இப்பரீட்சைக்கான முழு அதிகாரசபை NAITA ஆகையால், மேலதிக விவரங்களுக்கு NAITA இன் NVQ பிரிவை அணுகுக.


அமைப்பு பற்றிய தகவல்

Department of Technical Education & Training(Under Construction)

P.O.Box 557,
Olcott Mawatha,
Colombo 10.


Mr. H.K.N. Thusharika
தொலைபேசி:+94 112 421 580
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 449 136
மின்னஞ்சல்:info@dtet.gov.lk
இணையத்தளம்: www.dtet.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:36:23
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 112
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty