தனியார் கலை நிறுவனங்கள், கலாசார அலுவல்கள் திணைக்களத்து பதிவு செய்யும் புதிய சட்ட அமைப்பின் இல. 05ன் கீழ் வரும் விதத்தில் தகுதிவாய்ந்தொருவரினாலோ அல்லது அவ்வாறான தகுமைவாய்ந்த ஆசிரியக் குழுவொன்றை வைத்து ஏனைய ஒருவராலோ அல்லது சபையொன்றினாலோ நடாத்தப்படும், 20 மாணவர்கள் அன்றன்று தொடர்ந்து வருகின்ற, சட்டமைப்பின் இல.02 கீழ் இருக்கின்ற விதந்துரைக்கப்பட்டுள்ள கலையம்சங்களின் ஒன்றின் பாடங்களை கற்பிக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும்.
பதிவுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
a. கலை நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான புதிய சட்டமைப்பில் வருமாறு கீழ் வகைப் படுத்தலுக்கு சார்புடையதாக இருந்தல் வேண்டும்.
உட்டரட்ட நடன கலை நிறுவனம்
பகதரட்ட நடன கலை நிறுவனம்
சபரகமுவ நடன கலை நிறுவனம்
இசை கலை நிறுவனம்
நாட்டிய நபடக/ சிறுவர் நாடக/நாடக கலை நிறுவனம்
கோளம் நாடக கலை நிறுவனம்
கூத்து கலை நிறுவனம்
பாவையாட்ட நடன கலை நிறுவனம்
இந்திய நடன கலை நிறுவனம்
ஓவியம் மற்றும் சிற்பம் கலை நிறுவனம்
மல்போர் கலை நிறுவனம்
b. நிறுவன காரியாலயம், கலை நிறுவனத்தை நடாத்திப் போகின்ற இடத்திற்கு அண்மையான ஒரு நிலையான கட்டத்திலோ அல்லது வீடொன்றிலோ இயக்கிச் செல்வதும் அவ்விடத்தில் கலை நிறுவனத்தின் பெயர் பலகையை பொருத்தியிருப்பதும் சார்பான ஏனைய பொருட்களை அங்கே வைத்திருப்பதும் அவசியம். (தனியார் கட்டடமொன்றில், அரச கட்டடமொன்றில், அல்லது ஏனைய நிறுவனமொன்று வெற்றிடமாக இருக்கின்ற சந்தர்பங்களில் உரிமையாளரின் அல்லது நிறுவனத்து தலைவரின் அனுமதியை பெற்று ஒரு கலை நிறுவனத்தை நடாத்திச் செல்லலாம்.)
c. அயலவர்களுக்கு எவ்வித இடையூரறுகளும் ஏற்படாமல் கலை நிறுவன சாலை ஓரளவு தூரமாக அமைந்திருந்தல்.
d. சட்டமைப்பில் காட்டப்பட்டுள்ளவாறு அந்தாந்த கலை நிறுவன வகையை சார்த கருவிகள் கண்டிப்பாக தேவையாகின்ற அளவிலாவது இருத்தல் வேண்டும்.
e. அமைப்புவிதித்தொடரில் காணப்படும் காரியாலய உபகரணங்கள் இருத்தல் வேண்டும்.
f. பதிக்வுக்காக எதிர்பார்க்கின்ற கலை நிறுவன வகையை சார்த பாடநெறியை கற்பிப்பதற்கான தகுதிவாய்ந்த ஒரு ஆசிரியராவது இருப்பது அவசியம்.
g. அமைப்புவிதித்தொடரில் இல. 02 ன் கீழ் காட்டப்பட்டுள்ள கலை நிறுவன வகைப்படுத்தலின் படி பதிக்வுக்காக எதிர்பார்க்கின்ற கலை நிறுவன வகையின் பாடநெறி தொடர்பில் பல்கலைக்கழக இறுதி பரீட்ச்சையில் கலை நிறுவன தலைவர் சித்திப்பெற்று இருக்க வேண்டும், அவ்வாரு இல்லையென்றால் பாரம்பரிய கலைஞராக கற்றலை மேற்கொண்டுள்ள குருகுலங்கள் தொடர்பான வரலாறை தெளிவுபடுத்தி அவை உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். மேலும் தொடர்புடைய பாடம் கற்பித்தல் தொடர்பில் இரண்டு வருடகாலம் அனுபவம் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் சமர்பித்தல்.
h. சுமாராக ஒரு தினத்திற்கு ஐந்து மணத்தியாலங்களுக்கு குறையாமல் ஒரு வாரத்திற்கு இரண்டு நாற்கள் உள்ளடங்கும் விதத்தில் வாரத்திற்கு 10 மணித்தியாலங்கள் பாடம் நடாத்துதல்.(சித்திரைப் பெருநாள், சமய பண்டிகைகள் மற்றும் விவசாயம் போன்ற விடயங்கள் காரணமாகக் கொண்டு நீண்ட விடுமுறைகள் வழங்குவதற்கு கலை நிறுவனத்திற்கு அனுமதி கிடையாது.)
i. பதிவுக்காக விண்ணப்பிக்க முன் குறைந்த அளவில் ஒரு வருடகாலமாவது தொடந்து இயங்கியிருக்கின்றமை.
கலை நிறுவன அதிபரினால் நிரப்பிய விண்ணப்பப் படிவம் அக் கலை நிறுவனம் உற்படும் கிராமசேவகரின், பிரதேச கலாசார உத்தியோகத்தரின் அல்லது கலாசார அபிவிருத்தி துணை உத்தியோகத்தரின் மற்றும் பிரதேச செயலாளரினது சிபார்சையும் உட்படுத்தி கலாசார அலுவல்கள் பணிப்பாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தொடர்புடைய பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப் பத்திரிங்கள் இலவசமாக வழங்கப்படும்
விண்ணப்பப் பத்திரிக்கைகளை அலுவலக நேரத்தினுள் ஆண்டு முழுவதும் கையளிக்க முடியும்
இச் சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்படமாட்டாது.
அனைத்து ஆவணஙகள் உட்பட ஏனைய தகமைகள் பூர்த்தியான நிலையில் இருப்பின் ஒரு நாளினுள் சேவையை வழங்கலாம்.
01. கலை நிறுவனத்தை நடாத்துவது ஏனைய ஒருவரின் கட்டடத்திலாயின் உரியவரின் விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதமொன்று.
02. ஆசிரியக் குழுவின் தகமைகள் உறுதிப்படுத்துகின்ற சான்றிதழ்கள்.
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / பணிப்பொறுப்பினையைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராக துணை பணிப்பாளர் செயற்படுவர்.
அந்தந்த கலை நிறுவன வர்கங்களின் பாடநெறியை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்படும்.
தொடர்ப்பான பாடநெறியை கற்ற மாணவர்களுக்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடம் தோறும் பரீட்சைகள் நடாத்தப்படும். எழுத்து, செயன்முறை என இரு பகுதிகளாக பரீட்சை அமைந்திள்ளன.