ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மன்றத்தில் மற்றும் கலைகூடத்து சாலை வசதிகளை வழங்கல்.
மேடை மற்றும் கலை, கலாசார தேவைகளுக்காக ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மன்றத்தில் மற்றும் தேசிய கலைகூடத்து கிழக்கு மற்றும் மேற்கு சாலைகள் பொது மக்களின் தேவைகளுக்காக பெற்றுக்கொடுக்கப்படும்.
கலைகூடத்தின் கிழக்கு மற்றும் மேற்கு சாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற கண்காட்சிகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்காக இலங்கை கலை சபை மற்றும் கொழும்பு நகரசபையின் அனுமதியை பெற்றிருப்பமை.
விண்ணப்பதாரியினால் நிரப்பப்பட்ட விண்ணப்ப பத்திரிகை இலங்கை கலை சபையின் அனுமதியைப் பெற்ற பத்திரத்தோடு (கலாபவனத்தின் சாலைகள் ஒதுக்குவதற்கு மாத்திரம்) கலாசார அலுவல்கள் பணிப்பாளரிடம் முன்வைத்தல் வேண்டும்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்து கலை பிரிவில் விண்ணப்பப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்.
தேவையான தினத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னராக அலுவலக நேரத்தினுள் நிரப்பிய விண்ணப்பங்களை கையளிக்கலாம்.
ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மன்றபத்துக்காக ஒதுக்கும் கட்டனங்கள்
மூன்று மணித்தியால கால நேரத்திற்கான கட்டணம் ரூபா. 3000/=
மூன்று மணித்தியால சராசரி பயிற்சிக்கான கட்டணம் ரூபா. 2500/=
மூன்று மணித்தியால வெளிச்ச பயிற்சிக்கான கட்டணம் ரூபா. 3000/=
மூன்று மணித்தியால கால நேரத்திற்கான
கருணை அடிப்படையிலான கட்டனம் ரூபா. 1500/=
மேற்படி அனைத்து ஒதுக்குதல்களுக்குமான முற்பணம் ரூபா. 2500/=
கலாபவன கிழக்கு சாலையை ஒதுக்கும் கட்டணங்கள் ஒரு நாளுக்கான கட்டணம் ரூபா. 2000/=
கலாபவன மேற்கு சாலையை ஒதுக்கும் கட்டணங்கள் ஒரு நாளுக்கான கட்டணம் ரூபா. 1500/=
இரு சாலைகளும் கருணை அடிப்படையில்
ஒதுக்குவதற்கான கட்டணம் ரூபா. 1000/=
கிழக்கு-மேற்கு இரு சாலைகளுக்கும்
அறவிடப்படும் வைப்புத் தொகை ரூபா. 2500/=
மூன்று மணித்தியால ஒளி பெருக்கி கட்டணம் ரூபா. 600/=
ஒரு மணித்தியாலத்திற்கான குளிரூட்டு கட்டணம் ரூபா. 550/=
ஒரு மணித்தியாலத்திற்கான வீடியோ பிடிக்கும் கட்டணம் 550/=
பித்தலை குத்து விளக்குக்கான கட்டணம் ரூபா. 100/=
பித்தலை குத்து விளக்குக்கான வைப்புத் தொகை ரூபா. 125/=
மின்சாரக் கட்டணம் உட்பட சேதங்கள் தொடர்பான கட்டணங்கள் வைப்புத் தொகையிலிருந்து கழித்துக்கொள்வதோடு மீதி தொகையை திருப்பி செலுத்தப்படும்.
இக் கட்டணங்கள் 2009 ஆம் ஆண்டில் ஜஂன் மாதத்தில் இருந்து மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / பணிப்பொறுப்பினையைக் கொண்ட நிரைவேற்று உத்தியோகத்தராக துணை பணிப்பாளர் செயற்படுவார்.
நிதி கட்டணங்கள் செலுத்தப்பட்டு சாலை அல்லது அரங்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் திணைக்களத்தின் தேவைகளுக்கமைய தேவையாளரிடம் ஒதுக்கப்பட்டுள்ள தினத்தை இரத்துச் செய்து ஏனைய தினமொன்றை வழங்குவதற்கான அதிகாரம் பணிப்பாளருக்கு உள்ளது.