சிங்கள நாடக கலையின் முன்னேற்றத்துக்கு காரணமாகின்ற பொருள் மற்றும் படைப்புரீதியில் பொருத்தமான மேடை நாடகங்கள் தேர்ந்தெடுத்து அப் படைப்புகள் மற்றும் படைப்பாளர்கள் தேசிய மட்டத்தில் மதிப்பிட்டு பாராட்டுவதற்காக அரச மேடை நாடக விழா ஒழுங்கு செய்யப்படும்.
தகமைகளும் நிபந்தனைகளும்
தனிக்கை சபையின் அனுமதி பெற்று தொடர்ப்புடைய ஆண்டில் ஜனவாரி மாதம் 01 ம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையிலான காலத்தினுள் இலங்கையில் எந்தவொரு நகரத்தில் எந்தவொரு அரங்கில் பகிரங்கமாக (இடைகாலத்தை தவிர்ந்து) அரங்கேற்றி ஆகக்குறைந்தளவில் ஒரு மணித்தியாலமும் ஆகக்கூடியளவில் இரண்டரை மனித்தியாலமும் காட்சிக்காலமாக கொண்டிருக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ளவும்,
மேலதிக விபரங்கள் வருடந்தோறும் அரச நாடக விழாவிற்காக படைப்புகள் கோரப்படுவதற்காக வெளியிடும் அமைப்புவிதிகளில் காணப்படும். அனைத்து விசாரணைகளுக்காக 0112-872385 என்ற தொலைபேசி ஊடாக தேசிய நாடக துணை சபையின் செயலாளரை தொடர்புகொள்ளுக.
விண்ணப்பத்தை நிரப்பி தாம் இயக்கிய நாடகத்தின் ஒழுங்காக அமைக்கப்பட்ட பிரதியொன்றினையும், சுய நாடகமாக இல்லாத போது அந் நாடகத்தின் சிங்கள பிரதியோடு, நாடக படைப்பிற்காக பாதகமாயின வெளிநாட்டு நாடகத்தின் தெளிவான நிழற் பிரதியொன்றினையும் இணைத்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினமோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் படி,
செயலாளர்,
தேசிய நாடக துணைக் குழு,
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
8ஆம் மாடி – செத்சிரிபாய,
பத்தரமுல்லை.
என்ற முகவரிக்கு கொண்டு வந்து கையளித்தலோ பதிவு தபால் மூலம் அனுப்புதலோ செய்யவேண்டும்.
A-4 அளவிலான தாளில் தனிப் பக்கத்தில் பதித்து (தட்டெழுத்து/கணனி மூலம் – நாடகத்தின் கதை பொழிப்பு மற்றும் கதா பாத்திரங்கள் அறிமுகப்படுத்துவதற்காக பக்கங்களை உட்படுத்தி தெளிவாக முன்வைக்க வேண்டியதுடன் கையெழுத்தினால் முன்வைப்பதாயின் அக் கையெழுத்து மிக தெளிவாக இருப்பது அவசியம்.
விண்ணப்பங்கள், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, பத்தரமுல்லை என்ற முகவரியினால் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்.
பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்படுகின்ற படைப்புகள் முன்வைக்கப்பட வேண்டிய இறுதி தினத்திற்கு முன்னர் கடமை காலத்தினுள் படைப்புகளை கையளிக்கலாம்.
சேவையீட்டுவதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது. பொருந்தாது.
முன்வைக்கப்படுகின்ற நாடகத்தின் அரங்கேற்றம் தொடர்புடைய வருடத்தினுள் மேற்கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக,
I. அரங்கேற்றத்திற்காக பயன்படுத்திய சுவரொட்டிகள்
II. நுழைவுச்சீட்டு
III. பத்திரிகை விளம்பரங்கள்
IV. ஞாபக வெளியீடுகள்
V. மாகாண சபை நிருவனங்களுக்காகவோ சாலைகள் ஒதுக்குவதற்காக செலுத்திய பணத்திற்கான பற்றுச்சீட்டுகள்
ஆகியவற்றிலிருந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதாவதொரு ஆவணத்தை விண்ணப்பத்தோடு இணைப்பது அவசியம்.
அரச நாடக விழாவிற்கு ஓர் நாடகத்தை தெரிவு செய்த பின்னர் அந் நாடகத்தின் எழுத்தாளர் அல்லது மொழிபெயர்ப்பாளர் இயக்குனராகாத நிலையில் அரச நாடக விழாவின் அனைத்து நிபந்தனைகளுக்கும் எழுத்தாளர் அல்லது மொழிபெயர்ப்பாளர் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் தொடர்பான நாடகத்தை தயாரிப்பதற்கான விருப்பத்தை இயக்குனருக்கு அறிவிக்கும் ஆவனமொன்று மற்றும் நாடகத்தில் பங்குக்கொள்ளும் அனைத்து கலைஞ்ஞர்களின் பெயர் பட்டியல், அடையாள அட்டை இலக்கங்களோடு தேசிய நாடக துணைக்குழுவின் செயலாளரிடம் கையளித்தல் வேண்டும்.
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை கணிப்பாளர், கலாசார துணைப் பணிப்பாளர்( செயலாளரர், தேசிய நாடக துணைக் குழு) பணிப்பொறுப்பினைக் கொண்ட நிரைவேற்று உத்தியோகத்தர்களாக செயற்படுவர்.
விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திர பிரதியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.