தேசிய நர்தன தினத்தை முன்னிட்டு தேசிய நர்தன விழா ஒழுங்கு படுத்தப்படும்.
தகமைகளும் நிபந்தனைகளும் கலை நிறுவனங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் கலை அமைப்புகள் இவ் விழாவிற்காக நடன படைப்புகள் வெளியிடுவதற்காக தகமை பெறுவர். இதற்காக முன்வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்று நிருபத்தில் வரும் இரு நடன அம்சங்களில் மாத்திரமே பங்குபெறுவதற்கு அனுமதி உள்ளது. இவ் விழாவிற்கான போட்டிகள், உடரட்ட, பஹத லட்ட, சபரகமு, கிராமிய மற்றும் தமிழ் எனப்படும் ஐந்து பிரிவுகளைக்கொண்டுள்ளதோடு இரு போட்டிச் சுற்றுகளாக நடாத்தப்படும். ஆரம்ப சுற்றிலான போட்டிகள் மாகாண மட்டத்தில் நடாத்துவதுடன் அவற்றிலிருந்து தெரிவாகின்ற நடன அங்கங்கள் இறுதி சுற்றாகிய தேசிய மட்டத்திலான போட்டிக்காக முன்வைக்கப்படும். தேசிய மட்டத்திலான போட்டியிலிருந்து முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் பெற்றுக்கொள்ளும் நடன குழுக்களுக்காக பண பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
(மேலதிக விபரங்கள் அரச நடன விழா தொடர்பான அமைப்புவிதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன)
அரச நடன விழாவிற்காக வெளியிடப்படும் சுற்று நிருபத்திற்கு இணைத்திருக்கும் விண்ணப்பப் பத்திறை இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். நடன அம்சத்திற்காக முன்வரும் போட்டியாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பிறப்புத் திகதியுடன் பெயரட்டவனையை நிறப்பி விண்ணப்பப் பத்திரத்தோடு முன்வைக்கப்படுதல் அவசியம். விண்ணப்பத்தை அனுப்பும் உறையில் இடதுபக்க மேற்பாகத்தில் “தேசிய நடன விழா (தொடர்பான ஆண்டு)” என குறிப்பிடுதல் வேண்டும்.