வருடந்தோறும் ஒழுங்கு செய்யப்படுகின்ற இந் நாட்டிய நாடக விழாவின் போட்டித் தொடர் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு அதனை மூன்று சுற்றுகளின் கீழ் நடாத்தப்படும். சிறுவர்களுக்கான குறு நாட்டிய நாடகம்– திறந்த, வளர்ந்தோருக்கான குறு நாட்டிய நாடகம் - திறந்த, மற்றும் வளர்ந்தோருக்கான நீண்ட நாட்டிய நாடகம் - திறந்த, என்பன இப் போட்டித் தொடரிலான பிரிவுகளாகின்றன.
சுற்றறிக்கையில் வரும் தகுதிவாய்ந்த கலைஞர்களுக்கு இவற்றில் பங்குபெறலாம். ஒலிபதிவு நாடா மூலமாகவோ இசைக்கலைஞர்களைக் கொண்டோ இசை வழங்க முடியுமானதுடன் பங்குபற்றும் பாத்திரங்களின் எண்ணிக்கை 25க்கு உட்பட்டிருத்தல் வேண்டும். எமது கலாசாரத்திற்கோ அல்லது பண்பாட்டிற்கோ எவ்வித தீங்கும் ஏற்படாத சுய தயாரிப்பாக இருத்தல் வேண்டும். இதற்கு முன் கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சியாக இருத்தல் கூடாது.
போட்டியில் பங்குபற்றும் விண்ணப்பதாரிகள் மேற்படி நிபந்தனைகளை ஏற்று சுற்றறிக்கையோடு தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நாட்டிய நாடகத்தின் பிரதியுடன் விண்ணப்பஙகள் ஏற்றுக்கொள்ளும் திகதிக்கு முன் தபால் மூலமாவோ அல்லது நேரிலோ
செயலாளர்,
தேசிய நாடக துணைக் குழு,
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
8ஆம் மாடி – செத்சிரிபாய,
பத்தரமுல்லை.
எனப்படும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். தபால் மூலமாக அனுப்பும் போது தபால் உறையின் இடது பக்க மூலையில் “தேசிய நாட்டிய நாடக விழா - (தொடர்பான வருடம்) என குறிப்பிடவும்.
விண்ணப்பங்கள், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செசிரிபாய, பத்தரமுல்லை என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய நடன, நாட்டிய நாடக பொம்மலாட்ட துணைக் குழுவினால் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதிக்கு முன்னர் அலுவலக நேரத்தினுள் ஒப்படைத்தல் வேண்டும்
சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை கணிப்பாளர், இப்பணி பொறுப்பினைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராவர்.
விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது
பூர்த்தி செய்துள்ள விண்ணப்ப படிவம் ஒரு பிரதியை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.