கல்வி வெளியீட்டுத் திணைக்கள அபிவிருத்தி பிரிவுகளின் பணிகள்
சிங்கள, தமிழ், ஆங்கில மொழிமூல பாடநூல்கள் மற்றும் மேலதிக வாசிப்பு நூல்களை தயாரித்தல்
பாடநூல்கள் தயாரிக்கப்படும் விதம்
1. பத்திரிகைகளின் மூலம் விளம்பரப்படுத்தி விண்ணப்பங்களைக் கோரி எழுத்து மூல பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் நூலாக்ககுழு தெரிவு செய்யப்படும்.
2. நூலாக்க குழுத் தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நூலாக்க குழுவின் மிகத் தேர்சிபெற்ற ஒருவராக (பொரும்பாலும் பல்கலைக்கழக பேராசியர்கள்) இருப்பதோடு குழுத் தலைவரின் வழிகாட்டலின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அத்தியாயங்கள் எழுதப்படும்.
3. நூலாக்க குழு ஒன்றுகூடி தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிநிதியுடன் இணைந்து தமது அத்தியாயங்கள் பாடத்திட்டத்திற்கமைவானதா, உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் உண்மைத்தன்மையுடையதா என கலந்தாலோசித்து ஏகோபித்த தீர்மாணத்திற்கு வருவதோடு திருத்தங்களை மேற்கொள்ளல்.
4. பின்னர் அவ்வத்தியாயங்கள் திணைக்களப் பாடம் இணைப்பாளரிடம் ஒப்படைக்கப்படும் அதற்கேறப கணனிமயப்படுத்தப்படும்.
5. அப்பிரதிகள் பாடத் திருத்தம் மற்றும் மொழித் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பதிவுசெய்யப்பட்ட பிரதிகள் சரவை பார்க்கப்பட்டு சிரேஷ்ட பாட விரிவுரையாளர்களின் மூலம் இறுதி மதிப்பீட்டுக் குழுவிற்கு முன்வைக்கப்படும்.
6. இறுதி மதிப்பீட்டுக் குழுவின் தீர்மானத்திற்கிணங்க அச்சிடுவதற்கு பொருத்தமானதாக விதந்துரைக்கப்படுகின்ற பாடநூல்கள் உற்பத்திப் பிரிவுக்கு ஒப்படைக்கப்படும்.
அமைப்பு பற்றிய தகவல்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
இசுருபாய, பத்தரமுல்ல
கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தொலைபேசி:+94-112-784815, +94-112-787509, +94-112-785477 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-784815 மின்னஞ்சல்:commissioner_epd@yahoo.com இணையத்தளம்: www.edupub.gov.lk