தகைமைகள்
(அ) சிங்களம், தமிழ்மொழி, கணிதம் மற்றும் விஞ்ஞானம் என்ற 3 பாடங்களில் கட்டாயமாக திறமைச் சித்தியும், சமூகக் கல்வி அல்லது விவசாயம் என்ற இரு பாடங்களில் ஒன்றிற்காவது திறமைச் சித்தியுடன் (இதற்கேற்ப மொத்தமாக 4 திறமைச் சித்திகள் இருத்தல் வேண்டும்). இரண்டு தடவைகளிற்கு மேற்படாதவாறு 6 பாடங்களில் க.பொ.த. (சா/த) சித்தியடைந்திருத்தல். இதில் கட்டாயமாக்கப்பட்ட பாடங்களில் 3 திறமைச் சித்திகளுடன் ஆகக் குறைந்தது 5 பாடங்கள் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல். அத்துடன்
(ஆ) க.பொ.த. உ/த பரீட்சையில் உயிரியல் பிரிவில் கற்று தாவரவியல்இ இரசாயனவியல், பௌதீகவியல், விலங்கியல், விவசாயம், உயிரியல் என்ற 6 பாடங்களில் ஒரு பாடத்திலாவது சித்தியடைந்திருத்தல். (உயர்தர கணிதப் பிரிவில் கற்ற மாணவர்கள் இரசாயனவியல் அல்லது பௌதீகவியல் சித்தியடைந்திருத்தல் இந்தப் பாடநெறிக்கு தகைமை பெற்றிருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
(இ) ஆங்கில மொழி பாடநெறியைத் தொடருவதாயின் க.பொ.த (சா/த) ஆங்கில மொழியில் திறமைச் சித்தி காணப்படல் வேண்டும்.
(ஈ) வயது
வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தினத்தன்று 17 வயதிற்கு குறையாதவராகவூம் 25 வயதிற்கு மேற்படாதவராகவூம் இருத்தல் வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை
பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் போட்டிப் பரீட்சை பெறுபேறுகளிற்கேற்ப மாவட்டங்களில் கூடிய திறமையுள்ள விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சை மூலம் கல்வித் தகைமைகள் பற்றிய மூல சான்றிதழ்களைப் பரிசீலிப்பதன் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
ஆகஸ்ட், செப்தெம்பர் மாதங்களில் போட்டிப் பரீட்சை பெறுபேறுகளிற்கேற்ப மாவட்ட அடிப்படையின் மீது அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்களிற்காக அடுத்த வருட ஜனவரி மாதத்தினுள் நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும். புதிய மாணவர்கள்; அடுத்த வருட மார்ச் மாத இறுதியளவில்; சேர்த்துக்கொள்ளப்படுவர்.
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
1) வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், ஜூன் வரையான காலப்பகுதியில் பாட நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.
2) வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விண்ணப்பிக்க முடியும்
3) பரீட்சைக் கட்டணம் ரூ.250/-
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவம் மற்றும் அறிவூறுத்தலின் பிரகாரம் விண்ணப்பப் படிவத்தை தாமே தயாரித்துக் கொள்ளல் வேண்டும்.
பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்திசெய்யப்பட்ட மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)
அமைப்பு பற்றிய தகவல்விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை. கலாநிதி. ரொஹான் விஜேகோன் தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334 தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333 மின்னஞ்சல்:dgagriculture@gmail.com இணையத்தளம்: www.agridept.gov.lk
|