வறுமை ஒழிப்பு நுண் கடன் செயற்திட்டம் (சுழல் நிதி) கடன் திட்டம்..
தகுதி
• ஒரு குழுவாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
• மாத வருமானம் ரூ.15,000/= க்கு குறைவாயிருத்தல் வேண்டும்.
• வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
பிணையங்கள்
• மற்றொரு குழுவின் அங்கத்தவர்கள் இருவரது உத்தரவாதம் அல்லது வங்கி ஏற்கும் ஏனைய பிணையங்கள்.
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
• சிறு செய்திட்டத்தின் செயற்திட்ட அறிக்கை
காந்தா ரண் திரிய
பெண்கள் நடாத்தும் சிறிய / மிகச் சிறிய செய்திட்ட அபிவிருத்திக்கானது.
தகுதி
• வங்கியில் கணக்கொன்றை வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
• வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
பிணையங்கள்
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு உத்தரவாதிகள் அல்லது வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய பிணையம்.
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• ஆதனம் ஈடு வைப்பதாயின் உத்தரவாதிகளின் கூற்றுக்கள் அல்லது ஏனைய ஆவணங்கள்.
சிறு தொழில் முயற்சி அபிவிருத்திக்கான கடன் (சிறிய அளவிலான தொழில்களை ஆரம்பிக்க / விஸ்தரிக்க)
தகுதி
• வங்கியில் கணக்கொன்றை வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
• செய்திட்டச் செலவில் குறைந்தது 20% ஐ மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
• வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
பிணையங்கள்
• கடன் திட்டத்தின் கீழ் கடன்பெறுநர்கள் இருவரது உத்தரவாதம்.
• ஏனைய பிணையங்கள்
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• ஏனைய பிணையங்கள்
• சிறு செய்திட்ட அறிக்கை
“சூக்சம” ( நுண் ) கடன் திட்டம்
வருமானம் ஈட்டும் நிதியியல் இலாபமுடைய நுண்தொழில் முயற்சிகள்.
தகுதி
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
• வங்கி அல்லது கடன் வழங்கும் ஏனைய நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
• செய்திட்டச் செலவில் குறைந்தது 20% பங்களிப்பை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
பிணையங்கள்
• கடன்பெறுநர் இருவரது உத்தரவாதம் அல்லது வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரு உத்தரவாதிகள்.
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
• சிறு செய்திட்ட அறிக்கை
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|