“தீவர சக்தி” கடன் திட்டம்
மீனவத் தொழிலில் (நன்னீர் / உவர்நீர்) ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் கடன் வசதிகளை வழங்குதல். இது கட்டாயச் சேமிப்பு முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
தகுதி
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
• வங்கி அல்லது கடன் வழங்கும் ஏனைய நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
• செய்திட்டச் செலவில் 25% பங்களிப்பை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
பிணையங்கள்
• கடன் பெறுநர்கள் இருவரது உத்தரவாதம் அல்லது
• வங்கி ஏற்கும் உத்தரவாதிகள் இருவர் அல்லது
• ஏனைய பிணையங்கள்
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• சொத்துக்களை ஈடு வைப்பதாயின் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள்
• உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
• ஏனைய பிணையங்கள்
• சிறு செய்திட்ட அறிக்கை
நன்னீர் மீன் வளர்ப்புக் கடன் திட்டம்
நன்னீர் மீன்வளர்ப்புக் கைத்தொழிலுக்குத் தேவையான நிதிவசதிகளை வழங்குதல்.
தகுதி
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
• வங்கிக்கு அல்லது எவையேனும் நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
• செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
பிணையங்கள்
• இரண்டு நபர்களின் உத்தரவாதம் அல்லது வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏனைய பிணையங்கள்
• செய்திட்டச் சொத்துக்களின் மீது ஈடு வைக்கப்பட்ட ஆதனங்கள்
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
• செய்திட்ட அறிக்கையும் நீரின வளங்கள் அபிவிருத்தியும் தரமேம்படுத்தலும் அதிகார சபையின் சிபாரிசு.
மீன்பிடிக் கடன் திட்டம் ( மானிய உதவி இன்றி )
மீன்பிடிக் கைத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு
தகுதி
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
• வங்கிக்கு அல்லது நிதி நிறுவனங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
• செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
பிணையங்கள்
• ஆதனங்களை பிணையாக வழங்குதல்.
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய எவையேனும் பிணையங்கள்
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• சுவீகரிக்கப்படாமை பற்றிய சான்றிதழ், வீதி ரேகை சான்றிதழ், ஈடுவைக்கப்பட்ட ஆதனத்திற்கான உறுதியும், உரிமையும்
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|