சம்பந்தப்பட்ட தொழிநுட்ப முகவர்களுடனும், தொழில்நுட்பக் குழுக்களிடனும் முன்னெச்சரிக்கைளை ஒருங்கிணைத்தல், அதன் பரம்பல், மற்றும் கடைசிக் கட்ட பரம்பலையும் உறுதிப்படுத்துதல் போன்ற பொறுப்புக்களில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதான பொறுப்புப்புள்ளியாக செயற்படும். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நானாவித அபாய முன்னெச்சரிக்கைப் பிரிவு இயற்கை மற்றம் மனிதனால் உந்தப்படும் ஆபத்துக்களுக்குப் பொறுப்புள்ள சகல தொழிநுட்ப நிறுவனங்களுடனும் ஓயாத ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன், அனர்த்தங்கள் நெருங்கி வர உள்ள சந்தர்ப்பங்களில் அப் பிரிவு இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தினருக்கு அறியத்தரப்பட்டு அவர்களுடாக உபதேசிய மட்டத்திலும் சமூகங்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்திகள் பரப்பவும் செய்கின்றது
முக்கிய பொறுப்புக்கள்
- முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள் மற்றும் ஏனைய முன்னெச்சரி க்கைப் பரம்பல் உபகரணங்களை பராமரித்தல் மற்றும் இயக்குதல்.
- முன்னெச்சரிக்கை செய்திகளைப் பரம்பல் மற்றும் எட்டத்திலுள்ள தாக்கத்திற்குள்ளாகும் ஊர்களுக்கு இச் செய்திகள் சென்றடைவதனை உறுதிசெய்தல்
- தொழிநுட்ப முகவர்களின் இயலுமையைப் பலப்படுத்த நன்கொடை உதவிகளை ஒருங்கிணைத்தல்,
- செயற்பாடுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு யூக்திகள் மற்றும் கொள்கைகளை வகுத்தல்
- வெவ்வேறு முகவர்கள் மற்றும் பொது மக்களுக்கிடையில் செயற்பாடுகள் தொடர்பான விழிப்பூட்டலை ஆரம்பித்தல்
- மாகாண, மாவட்ட, உள்ளுராட்சி, பிரதேச, கிராம சேவையாளர. பிரிவுகளிலும், சமூக மட்டங்களிலும், முன்னெச்சரிக்கை தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், நடைமுறைப்படுத்தலுக்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளுக்கு வழிகாட்டல்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னெச்சரிக்கைப் பரம்பல் பிரிவின் ஏனைய பொறுப்புக்கள்:
- வெவ்வேறு அபாயங்கள் பற்றிய முன்னறிவிப்புகளுக்கப் பொறுப்- பான உள்ளுர் தொழில்நுட்ப முகவர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்
- நம்பிக்கையான தொடர்பாடல் முறமையை ஸ்தாபித்தல் (தொலைபேசி, வானொலி, தொடர்பாடல் போன்றவை) தொழிநுட்ப முகவர்களிடமிருந்து அவசர நடவடிக்கை மையம் (அ.ந.மை) தலைமை அலுவலகத்திற்கும், மாகாண, மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கும் நேரடியாகவோ அல்லது அ.ந.மை ஊடாகவோ). பிரதான தொடர்பாடல் முறமையில் திடீர் கோளாறு ஏற்படுமிடத்து மாற்றீடான தொடர்பாடல் முறமைகளை வைத்திருத்தல்
- அம்முறமை ஊடகத்துடன் சம்பந்தப்படுத்தி அதனுடாக தகவல் பரம்பலை உறுதிப்படுத்தல்
- சமூகங்கள் மற்றும் சகல சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பொலீஸ் அடங்கலாக, பாவனையிலுள்ள தொடர்பாடல் முறமை பற்றி முனனெசசரிக்கை மற்றும் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விசேடமாக வேகமாகத் தாக்கும் அனர்ததங்களின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
அமைப்பு பற்றிய தகவல்அனா்த்த முகாமைத்துவ நிலையம்
ஆர் ஏ டி மெல் மாவத்தை
கொழும்பு 03
திரு.ஸ்ரீமால் சமன்சிறி தொலைபேசி:011-2136136 , 011-2136222, 0112 670 002, 117 தொலைநகல் இலக்கங்கள்:0112-670079 மின்னஞ்சல்:பணிப்பாளா் நாயகம் - dg@dmc.gov.lk, dgdmc@sltnet.lk இணையத்தளம்: www.dmc.gov.lk
|