அவசர நடவடிக்கை மையம எந்த ஒரு அவசரத்திற்கும் தேசிய மட்டத்தில் வலுவானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான பதிலிறுப்புக்கு முக்கியமானதும் முன்னிபந்தனையற்ற சேவையை அளிக்கக்கூடிய தொன்றாகும். கலந்துரையாடல் கூட்டங்களுக்குமான வசதிகள் உட்பட தேவையான சகல உபகரணங்களையும் காடசிப்படுத்தும் முறமையையும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கொண்டுள்ளது. சகல வசதிகளையும் கொண்ட நடவடிக்கை அறை, மற்றும் சகல தொடர்பாடல் உபகரணங்களை முகாமைத்துவம் செய்யக்கூடியதுமான அதாவது 24/7 என்ற அடிப்படையில் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை என்பனவற்றை உள்ளக்கியுள்ளது
பிரதான பொறுப்புக்கள்
- அவசர நடவடிக்கை மையம 24/7 என்ற அடிப்படையில்; தொழிற்ப்படுவதுடன் அனர்த்தங்கள் பற்றிய உடனடி தகவல்களை ஒருங்கிணைத்து முகாமைத்துவத்திற்கான வளங்களையும் அளிக்கிறது. சம்பவங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றும், பகுத்தும், காட்சியும் படுத்தியும் தீர்மானங்களை மேற்கொள்வதை இலகுவாக்குகிறது.
- அவசர நடவடிக்கை மையம் நெருக்கடிகளுக்கான வளங்களைக் கண்டு பிடித்தல், முன்னுரிமைப்படுத்தல், ஈடுபடுத்துதல், அத்துடன் சுவடுபற்றிச்செல்வதனையும் மேற்கொள்கிறது.. தீர்மானம் எடுத்தல் தொடர்பாடல், உடனுழைப்பு, மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியனவற்றையும் மேம்படுத்துகிறது
அவசர வேளைகளில் அறிவிக்க பொது மக்கள் அவசர தொடர்பு இலக்கம் 011-2136136 ,011-2136222 ஐ அழைக்கலாம்
அவசர வேளைகளில் 24/7 அவசரஅழைப்பு மையத்தை நிறுவுதலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்சமயம் முன்னெடுக்கிறது.
அமைப்பு பற்றிய தகவல்அனா்த்த முகாமைத்துவ நிலையம்
ஆர் ஏ டி மெல் மாவத்தை
கொழும்பு 03
திரு.ஸ்ரீமால் சமன்சிறி தொலைபேசி:011-2136136 , 011-2136222, 0112 670 002, 117 தொலைநகல் இலக்கங்கள்:0112-670079 மின்னஞ்சல்:பணிப்பாளா் நாயகம் - dg@dmc.gov.lk, dgdmc@sltnet.lk இணையத்தளம்: www.dmc.gov.lk
|