படி 1 : சம்பந்தப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
படி 2 : பெலிஸ் அதிகாரியால் வாக்குமூலம் எழுதப்பட்டால் நபர் புகார் படிவத்தின் நகலை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு 01 : புகார் படிவ நகலின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ரு: 25.00 ஐ பொலிஸ் நிலையம் வசூலிக்கும்.
படி 3 : பெலிஸ் அதிகாரி புகார் படிவத்தின் ஒரு பகுதியை நபரிடம் வழங்குதல்.
படி 4 : மோட்டார் வாகன திணைக்களத்திலிருந்து நபர் பெற்ற படிவத்தை பூர்த்தி செய்து இணைப்பு ஆவணங்களுடன் இணைத்து மோட்டார் வாகன திணைக்களத்தில் ஒப்படைக்கவும்.
குறிப்பு 01 :
திணைக்களத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் இணைப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது.
படி 5 : விண்ணப்பபடிவ வேண்டுகோளுக்கு சான்றளிக்கும் முன் மோட்டார் வாகன திணைக்களத்தின் அலுவலர் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் விண்ணப்பங்களை சரி பார்ப்பார்.
படி 6 : சம்பந்தப்பட்ட நபர் ஒட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகன திணைக்களத்தில் பெற்று கொள்ளலாம்.
தகுதிக்கான வரையறைகள்:
இலங்கையை அடிப்படையாக கொண்டு வசிக்கும் வெளிநாட்டவரோ அல்லது வேறு குடிமகனோ தேவையேற்படும் போது இச்சேவையை பெறலாம்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல்,
பாதிக்கப்பட்ட நபர் புகார்களை தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுதல்.
பொலிஸ் நிலையம் வேலைப் பார்க்கும் நேரம்:
24/7/365 நாட்கள்
புகாரிலிருந்து எடுக்கப்பட்ட பிரதியைப் பெறுதல்:
பாதிக்கப்பட்ட அவன்/அவள் தான் இழந்த பொருள் சம்பந்தமான சரியான புகார் பிரதியை உள்ளூர் பொலிஸ் நிலையத்திலிருந்து பெற வேண்டும்.மேலும் அவன்/அவள் அப்புகார் தனது தானா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சில திணைக்களத்திற்கு தேவையான சரியான புகார்களுக்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தேசிய அடையாள அட்டை : கிராம சேவகர் ஆட்பதிவுத் திணைக்களம்
கடவுச்சீட்டு : குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
ஓட்டுநர் உரிமம் : மோட்டார் வாகனத் திணைக்களம்
குறிப்பு 01: இதே போன்று மற்ற திணைக்களங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தேவையான சரியான தகவல்களின் புகார் பிரதியை சம்பந்தப்பட்ட நபர்கள் செயல்முறைகள் முடிவடைவதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
• தேசிய அடையாள அட்டை(முந்தைய தேசிய அடையாள அட்டையின் இலக்கம்)
• கடவுச்சீட்டு (முந்தைய கடவுச்சீட்டின் இலக்கம்)
• ஓட்டுநர் உரிமம் (முந்தைய ஓட்டுநர் உரிமத்தின் இலக்கம்)
சமர்பிக்க வேண்டிய விண்ணப்பம்:
• மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடனும் தகவல் புகாரின் பிரதியுடனும் மோட்டார் வாகனத் திணைக்களத்திடம் சமர்பிக்கவும்.
விண்ணப்பப்படிவம்:
பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய தேவையில்லை,ஆனால் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க படிவங்களை வழங்கும்.
பொலிஸ் நிலையத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கான புகார் படிவம் கீழே காண்பிக்கபட்டுள்ளன (தேசிய அடையாள அட்டை,கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம்).
குறிப்பு : சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையம் புகார்களுக்காக பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களின் பிரதியை (DOP F424) பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கும்.
காலக்கெடு:
தொலைந்து போன தேசிய அடையாள அட்டை,ஓட்டுனர் உரிமம்,கடவுச்சீட்டு மற்றும் வேறு ஆவணங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் அதனுடன் தொலைந்து போன மின்சாதனங்களின் மீதான புகார்களை கையாளுவதற்கான காலக்கெடானது பின்வருவனவற்றை போலவே ஒத்திருக்கும்.
செயல்முறைக் காலக்கெடு:
புகாரை தனித்துப் பிரித்தல்: ஒரு நாளுக்குள்
விவகாரங்கள் அளிக்கப்பட்ட திணைக்களத்தின் திறமையை பொறுத்தே மொத்த செயல்முறைக் காலக்கெடு அமையும்.
(ஆட் பதிவுத் திணைக்களம்,மோட்டார் வாகன திணைக்களம்,குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் வேறு தொடர்புடைய அமைப்புகள்)
வேலை நேரங்கள்:
பொலிஸ் நிலையம் - 24/7/365 நாட்கள்
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
தேசிய அடையாள அட்டை,கடவுச்சீட்டு ,ஓட்டுனர் உரிமம் மற்றும் வேறு காரணங்களுக்கான புகாரை தனித்து பிரித்தலுக்கான செலவீனம் ஒவ்வொரு பக்கத்திற்கும் ரு: 25.00
அபராதங்கள் மற்றும் இதரக் கட்டணங்கள்:
சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து தொலைந்த பொருட்களுக்கான புதுப்பித்தலுக்கு சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் மூலம் அபாராதம் வசூலிக்கப்படும்.
குறிப்பு 01: விண்ணப்பதாரர் தன்னுடைய வேலை முடிவடைய சம்பந்தப்பட்ட திணைக்களகங்களுக்கு அபராதம் அல்லது செலவீனத்தை செலுத்தியிருக்க வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
ஓட்டுனர் உரிமத்திற்காக பொலிஸ் நிலையத்தில்,
சம்பந்தப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிப்பதுடன் தன்னுடைய ஓட்டுனர் உரிமத்தின் தற்போதய இலக்கத்தையும் வழங்க வேண்டும்.
குறிப்பு 01:புதிய ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கு மோட்டார் வாகன திணைகளத்தினால் வேண்டப்பட்ட தொடர்புடைய இணைப்பு ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு :ஒவ்வொரு திணைகளத்திற்கும் தேவையான இணைப்பு ஆவணங்கள் வேறுபடும்.மேலே குறிப்பிடப்பட்ட வேறு திணைகளங்களும் மற்றும் அமைப்புகள் வேண்டும்.தேவையான இணைப்பு ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பிக்க் வேண்டும்.
சேவை பொறுப்புக் குழு:
இத் திணைக்களத்துடன் தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் சம்பந்தப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பு அலுவலரிடம் அறிவிக்கவும்.
குறிப்பு: உண்மையின் அடிப்படையில் தீவு முழுவதுமாக 401 பொலிஸ் நிலையங்கள் உள்ளன.ஒரு தனி நபருக்காக சேவையை ஒதுக்கி அந்த வேலையை செய்ய முடியாது.
சிறப்பு வரையறைகள்:
இச் சேவைக்கு பொருந்தாது.
போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
இரகசிய தகவல்களாய் இருப்பதன் காரணமாக பொலிஸ் நிலையம் வழங்கவில்லை.
அமைப்பு பற்றிய தகவல்பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01. Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: https://www.police.lk
|