படி 1 : விண்ணப்பதாரர் ரு:500.00 யை பொலிஸ் தலைமையகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறுதல்.
படி 2 : விண்ணப்பதாரர் படிவத்தை பூர்த்தி செய்து பொலிஸ் தலைமையகம்,கொழும்பு என்ற முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
படி 3 : கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை பார்த்து மற்றும் பகுதி பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரர் எங்கே வசித்தார் என்ற தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க இசைவர்.
குறிப்பு 01 :விண்ணப்பதாரர் இலங்கையில் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் பொலிஸ் தலைமையகம் அந்த பகுதி தொடர்பான பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரரை பற்றி விபரங்களை தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுவர்.
படி 4 : பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை குற்றப் புலனாய்வு அதிகாரியை (CID) பார்க்க வைக்கும். உள்துறை இண்டலிஜன்ஸ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திணைகளத்திற்கும் சரிபார்க்க செய்வர்.
படி 5 : விபரங்கள் திருப்தி அளித்தால் விண்ணப்பதாரர் பொலிஸ் தலைமையகத்தில் இசைவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி வகையறைகள்:
இலங்கையினர் இலங்கை அல்லது வெளிநாட்டில் வேலை தேடுதல்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
விண்ணப்ப படிவம் பெறுதல்.
விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை (DOP APCC) பொலிஸ் தலைமையகம்,கோட்டை,கொழும்பு 1 இலிருந்து பெற வேண்டும்.
விண்ணப்பம் ஒப்படைக்கப்படுதல்:
விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை (DOP APCC) பொலிஸ் தலைமையகம்,கோட்டை,கொழும்பு 1 ல் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம்
படிவத்தின் பெயர் : பொலிஸ் இசைவுசான்றிதழுக்கான விண்ணப்பம் (DOP APCC)
வரைவு விண்ணப்ப படிவம்.(DOP APCC படிவம்)
குறிப்பு 01: விண்ணப்பபடிவம் பொலிஸ் தலைமையகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
குறிப்பு 02: சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்குவதில்லை.சமர்பிக்கும் நேரத்தில் கையினால் எழுதப்பட்ட வேண்டுகோள் கடிதத்தை சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைக்குமாறு வேண்டப்படுவர்.
குறிப்பு : சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்படும் இசைவு சான்றிதழின்(DOP APCC)நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக கிருளைப்பனை பொலிஸ் நிலையம்.
காலக்கெடு:
செயல்முறை நேரம்:
3 மாதத்திற்குள்
வேலை நேரங்கள்:
மு.ப 8.30 முதல் பி.ப 4.30 வரை
திங்கள் முதல் வெள்ளி வரை
சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்:
பொலிஸ் தலைமையகத்தில் விண்ணப்பப்படிவத்திற்கு விண்ணப்பதாரர் ரு: 500 யை கட்ட வேண்டும்.
அபராதம் மற்றும் இதரக் கட்டணங்கள்: இந்த சேவைக்கு பொருந்தாது.
இணைப்பு ஆவணங்கள்:
இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை.
சேவையின் பொறுப்புக் குழு:
பொலிஸ் தலைமையகம் : இயக்குனர் - பொலிஸ் பொதுமக்கள் தொடர்புப் பிரிவு
சிறப்பு வரையறைகள்:
இச்சேவைக்குப் பொருந்தாது.
போலித் தரவுகளுடன் கூடிய மாதிரி படிவம்:
விண்ணப்பபடிவம் (DOP APCC)
அமைப்பு பற்றிய தகவல்Department of Police (Under Construction)
Police Head Quarters,
Colombo 01.
Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: www.police.lk
|