படி 1 : தொலைபேசி கடிதம் அல்லது தகுந்த பிரிவை சந்தித்து இவ்வழக்கு பற்றி விபரங்களை புகார்கொடுப்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்முறை பிரிவிடம் தெரியபடுத்துதல்.
படி 2 : புகார் கொடுத்தவரின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று புகார் பற்றி பொலிஸ் அலுவலர்கள் விசாரித்தல்.
குறிப்பு : எந்த ஒரு அதிகாரப் பத்திரம் இல்லாமலும் பொலிஸ் அந்த இடத்திற்குச் சென்று விசாரனை செய்யலாம் இருந்தபோதிலும் ஊழியர் திணைக்கள அலுவலர் ஒருவர் கட்டாயம் அழைத்துச்செல்லப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற ஆணையை எடுத்துச் செல்லவேண்டும். இந்த ஆணையானது தகுந்த ஆதாரங்களுடன் சமர்பித்திருந்திருந்தால் மட்டுமே வழங்கப்படும்.
படி 3 : சந்தேகப்படுபவரின் பின்னணியை பற்றி பொலிஸ் விசாரனை செய்து தேவையென்றால் சந்தேகப்படுபவரை தன் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவருதல்.
படி 4 : சந்தேகப்படுபவரை பொலிஸ் அலுவலர் நீதிமன்றத்திற்க்கு கொண்டு செல்லுதல்.
தகுதி வரையறைகள்:
பாதிக்கபட்டவர் 14 வயதுக்கு கீழ்இருக்க வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவிடம் தெரிவித்தல்.
புகார்கொடுப்பவர் தொலைபேசி கடிதம் அல்லது பெண்கள் மற்றும் குழந்தைக்கான பிரிவிற்க்குச் சென்று இவ்வழக்குகளை பற்றி தெரியபடுத்துதல்.
வேலை நேரம்:
பிரிவு மற்றும் பொலிஸ் நிலையம்
24/7/365 நாட்கள்
தேவையான ஆவணங்கள்:
பாதிக்கப்பட்டவரின் பிறப்பு சான்றிதழ்
படிவம்:
பொது மக்களுக்கு விண்ணப்பபடிவங்கள் இல்லை.
விண்ணப்பபடிவங்கள்:
இந்தச் சேவைக்கு விண்ணப்பபடிவங்கள் இல்லை.
காலக்கெடு:
செயல்முறை காலக்கெடு:
சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் வேறுபடும்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கெடு:
• 24 மணி நேரத்திற்க்குள் சந்தேகப்படுபவரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
• குழந்தைகள் வன்கொடுமை வழக்காக இருந்தால் சந்தேகப்படுபவரை நீதிமன்றத்தின் அனுமதியுடன் 72 மணி நேரம் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
வேலை நேரம்:
பெண்கள் மற்றும் குழந்தை வன்கொடுமை பிரிவு மற்றும் பொலிஸ் நிலையம்
24/7/365 நாட்கள்
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
சேவை தொடர்பான கட்டணங்கள் இல்லை.
அபராதங்கள் மற்றும் இதரகட்டணங்கள்:
திணைக்களம் அபராதங்கள் மற்றும் இதரகட்டணங்கள் வரையறுக்கபடவில்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
பாதிக்கபட்டவரின் பிறப்பு சான்றிதழ்
சேவைக்கான பொறுப்புக் குழு:
பெண்கள் மற்றும் குழந்தை பிரிவு (பொலிஸ் தலைமையகம்)
OIC(அலுவலக பொறுப்பாளர்)
ASP(பொலிஸ் துணை கண்காணிப்பாளர்)
பொலிஸ் நிலையம்
பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவின் அலுவலக பொறுப்பாளர் (OIC)
பொலிஸ் நிலையத்தின் அலுவலக பொறுப்பாளர் (OIC)
சிறப்பு வகையறைகள்:
குழந்தையை குழந்தை பாதுகாப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று குழந்தையின் வாக்குமூலத்தை நாடாவில் பதிவுசெய்யதல்.
மாணவர்கள், கிராம சேவை அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மற்றும் வணிக மண்டல ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகர்ழ்ச்சிகள் நடத்தப்படும்.
போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
பாதிக்கபட்டவர் விண்ணப்பபடிவங்கள் பூர்த்திசெய்ய தேவையில்லை.
அமைப்பு பற்றிய தகவல்பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01. Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: https://www.police.lk
|