தகுதி
பழுதுபார்க்கும் உரிமம் பெற விரும்பும் நபர்/முகாமை அளவியல் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகளின் திணைக்களம் நடத்தும் எழுத்து மற்றும் செய்முறை பரீச்சையில் தேர்ச்சிப் பெற வேண்டும். உரிமங்கள் இயந்திரப் பழுது மற்றும் மின்னனுபழுது பிரிவுகளின் கீழ் வழங்கப்படும்.
i. எடைகள் மற்றும் அளவுகள்
ii. தராசின் துலாக்கோல்
iii. நீச்சி தராசு
iv. மேடை இயந்திரங்கள்(Spring Platform)
v. கணக்கீட்டு அளவுகோல்
vi. பார எடைப் பொறி(Weighingbridges)
vii. அனைத்து வகையான இயந்திர எடை சாதனங்கள்
viii. அனைத்து வகையான மின்னனு எடை சாதனங்கள்
வேறு ஏதேனும் கூடுதல்.சாதனங்கள்
குறிப்பு:
- எடையிடுதல் மற்றும் அளவிடுதல் கருவிகளைப் பழுது பார்ப்பதற்காக நபர் அல்லது அமைப்பு ஒரு கூட்டுக் குழுவை நியமித்திருந்தால், ஒவ்வொரு கூட்டுக் குழுவும் பதிவுச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். பழுதுக் கூட்டுக் குழு என்பது தனி நபர் அல்லது நபர்களின் குழுவால் கருவிகள் பழுதுப் பார்க்கப்படுவது ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் ஒரு நபருடைய கருவியை பழுது பார்க்கும் செயல்திறன் இயக்குனரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருத்தல் வேண்டும். அதுபோன்ற நபர்களின் எண்ணிக்கைகளையும், பெயர்கள், தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களையும் இயக்குனரிடம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். பதலி ஒரு நபராக இருக்கலாம் அவரின் செயல்திறன் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் இயக்குனரால் ஏற்றுக்கொள்ளப்படும்
- ஒவ்வொரு எடை அளவி அல்லது எடையிடும் கருவி அல்லது அளவிடும் கருவியை பழுதுப்பார்த்த நபர் அல்லது நிறுவனம், சம்பந்தப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்குமுறை உத்தரவின்படி அங்கீகரிக்கப்பட்ட எடைகள், அளவுகள் அல்லது எடையிடும் கருவி / அளவிடும் கருவியை பழுதுப் பார்ப்பதற்கானப் பதிவுச் சான்றிதழ்களை, கொண்டிருத்தல் வேண்டும்.
- ஒரு இடத்திலோ அல்லது நிறுவனத்திலோ உள்ள, அங்கீகரிக்கப்பட்ட எடைகள், அளவுகள் அல்லது எடையிடும் கருவி அல்லது அளவிடும் கருவிகளைப் பழுதுப் பார்ப்பதற்கானப் பதிவுச் சான்றிதழ் கொண்டிருக்கும் தொழில்நுட்ப அலுவலர், வேறு இடத்திலோ அல்லது நிறுவனத்திலோ இந்தப்பதிவை உபயோகிக்ககூடாது.
தகுதியிழப்பு வரையரைகள்
கீழ்க்காணும் காரணங்களுக்காகப் பழுதுபார்க்கும் உரிமம் நிராகரிக்கப்படும்
• தொழில்நுட்ப அலுவலரின் மறைவை ஒட்டி
• நிர்வாகத்திலிருந்து அவருடைய இராஜினாமாவை பொறுத்து
• தொழில்நுட்ப அலுவலர் நோய் அல்லது மனம்/உடல் சம்பந்தப்பட்ட இயலாமையால் தனது அலுவலகக் காரியங்களைச் செய்ய இயலாத நிலை
சமர்ப்பிக்க வேணடிய முறைகள்
1
|
விண்ணப்பப்படிவம் பெறுதல்
- பரீட்சையில் தேர்ச்சிப் பெற்றதை ஒட்டி விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பெறலாம்.
|
விண்ணப்பப்படிவம்
இலக்கம் கிடைக்கப்பெறவில்லை.
|
2
|
தேவையான இணைப்பு ஆவணங்கள்
- க/பொ சாதாரண தரச் சான்றதழ் (பொதுமான முடிவுகளைப் பெற்றிருக்க வேண்டும்.)
- தேசிய அடையாள அட்டை
|
3
|
விண்ணப்பப்படிவம் ஒப்படைத்தல்
- விண்ணப்பதாரர் தேவைப்படும் உரிமத்தின் பிரிவைக் (இயந்திரம்/மின்னனு) குறிப்பிட்டு வேணடுகோள் கடிதத்தைத் தயாரித்தல் மற்றும் அனுப்புதல் அவசியம்.
விண்ணப்பதாரர் பரீச்சையில் தேர்ச்சிப் பெற்றப் பின்பு, அவர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
|
வேலை நாட்கள்
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை.
வேலை நேரங்கள்
மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.
|
படிப்படியான வழிமுறைகள்
படி 1:
விண்ணப்பதாரர்(இயந்திரவியல்/மின்னணுவியல்) வகை உரிமத்திற்கான வேண்டுதல் கடிதத்தை அளவீட்டு அலகுகள், தரம் மற்றும் சேவைத் திணைக்களத்திற்குத் தயார்செய்து அனுப்புதல்.
படி 2:
மாவட்ட ஆய்வாளர் பணிமனை அறிக்கையை வழங்குவதற்காக திணைக்களமானது கடித்தை மாவட்ட ஆய்வாளருக்கு அனுப்புதல்
படி 3:
மாவட்ட ஆய்வாளர் விண்ணப்பதாரரின் பணிமனைக்குச் சென்று பணிமனையானது பழுதுப்பார்க்கும் கருவிகளைக் கொண்டுள்ளதா என்று பார்வையிடுதல்.
படி 4:
விசாரணை முடிவை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட ஆய்வாளர் பணிமனை அறிக்கையைத் தயாரித்து அதனை அளவீட்டு அலகுகள், தரம் மற்றும் சேவைத் திணைக்களத்திற்கு அனுப்புதல்.
படி 5:
திணைக்களமானது எழுத்து முறை மற்றும் செயல்முறை தேர்வுகளுக்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் வருமாறு விண்ணப்பதாருக்கு தெரிவித்தல்.
படி 6:
விண்ணப்பதாரர் தேர்வில் தேர்ச்சிப் பெற்றால், விண்ணப்பபடிவமானது அஞ்சல் மூலமாக விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
படி 7:
விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தைப் பூர்த்திச் செய்து அளவீட்டு அலகுகள், தரம் மற்றும் சேவைத் திணைக்களத்திடம் ஒப்படைத்தல்.
படி 8:
பிறகு விண்ணப்பதாரருக்கு பழுதுப்பார்க்கும் உரிமம் வழங்கப்பட்டு அவருக்குச் சான்றிதழை வழங்குதல்.
குறிப்பு 1
பணிமனையின் சூழ்நிலைகள் மாவட்ட ஆய்வாளருக்கு திருப்திகரமாக இல்லை என்றால், அவன்/அவளின் விண்ணப்பம் பழுதுப்பார்க்கும் உரிமத்திற்கான வேண்டுதல் நிராகரிக்கப்படும். திணைக்களம் நிராகரித்தலுக்கான காரணங்களை விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கும். பணிமனைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின் மீண்டும் அவர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு 2
விண்ணப்பதாரர் தேர்வில் தோல்வியடைந்தால் அவர் மறுத்தேர்வு எழுதலாம்.
குறிப்பு 3
பதிவிற்குப் பின்னர் பருவந்தோறும் ஆய்வு நடைபெறும்.
காலக்கோடு
செயல்முறைக் காலக்கோடு
விண்ணப்பதாரர் 3 முதல் 6 மாதக்காலத்திற்குள் உரிமத்தைப் பெறலாம்.
தேர்வுக் காலம் : எழுத்து முறைத் தாள் 1 மணி நேரம் செயல்முறைத் தேர்வு: 1 மணி நேரம்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல்
வேலை நாட்கள்– திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை.
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.
விடுமுறைநாட்கள் – அனைத்துப் பொது மற்றும் வணிக விடுமுறைநாட்கள்
ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு
பழுதுப்பார்க்கும் உரிமத்திற்கான ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலம் ஒரு வருடம் ஆகும். அதன் பின் அதனைக் கட்டாயமாகப் புதுப்பித்தல் வேண்டும்.
சேவைத்தொடர்பானக்கட்டணங்கள்
செலவினம்
இந்த சேவையைப் பெறுவதற்கான செலவினத்தை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கட்டணம்
பழுதுப்பார்ப்பவருக்கான பதிவுக் கட்டணம்
|
ரூபாய்
|
எடை மற்றும் அளவீடுகளை பழுதுப்பார்த்தல்.
|
250.00
|
தராசின் அளவுகோல் பழுதுப்பார்த்தல்
|
300.00
|
நீச்சி தராசுகளைப் பழுதுப்பார்த்தல்
|
300.00
|
மேடை இயந்திரத்தைப் பழுதுப்பார்த்தல்
|
350.00
|
கணக்கீட்டு அளவுகோலைப் பழுதுப்பார்த்தல்
|
350.00
|
பார எடைப் பொறியைப் பழுதுப்பார்த்தல்
|
1000.00
|
அனைத்து வகை இயந்திர எடை கருவிகளைப் பழுதுப்பார்த்தல்
|
1500.00
|
அனைத்து வகை மின்னனு எடை சாதனங்களைப் பழுதுப்பார்த்தல்
|
1500.00
|
ஏதேனும் கூடுதல் பழுதுப்பார்த்தல்.
|
300.00
|
Class II scales |
350.00 |
அபராதங்கள்
எந்த ஒரு நபராவது இயக்குனரால் பதிவு செய்யபடாமல் இருந்தால், அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டு அவருக்கு ரூ.1000/-க்கு மிகாமல் அபராதமோ அல்லது ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைதண்டணையோ அல்லது. இவ்விரண்டும் விதிக்கப்படும்
* மேலும் குற்றம் மற்றும் அபராதப் பிரிவை பார்க்கவும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை
• சாதாரண தரச் சான்றிதழ்
• தொழில் சார்ந்த தகுதிக்கானச் சான்றிதழ்
சேவைக்கானப் பொறுப்புக் குழு
நபரின் பதவி
|
நபரின் பெயர்
|
பிரிவின் பெயர்
|
இயக்குனர்
|
திரு. குணசோமா
|
அளவீட்டு அலகுகள் தரம் மற்றும் சேவைத் திணைக்களம்.
|
சிறப்பு வகையறைகள்
பொருந்தாது.
அமைப்பு பற்றிய தகவல்அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
இலக்கம்: 101,
பார்க் வீதி,
கொழும்பு-05 இயக்குனர் தொலைபேசி:+94-11-2182250 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2182259 மின்னஞ்சல்:metrolad@sltnet.lk இணையத்தளம்: www.measurementsdept.gov.lk
|