The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை ஆட்சேர்த்தல்.
கேள்வி விடை வகை முழு விபரம்


தொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை ஆட்சேர்த்தல்.

PDF Print Email

தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடநெறிகள், உரிய கல்வித் தகைமைகள், அவை நடத்தப்படும் தொழினுட்பவியல் கல்லூரிகள் / தொழினுட்பக் கல்லூரிகள் ஆகியன கீழே காட்டப்பட்டிருக்கும் அதே வேளை அப்பாடநெறிகள் ஒவ்வொன்றுக்கும் பிரவேசிக்கத் தேவையான குறைந்தபட்சக் கல்வித் தகைமைகளுக்கேற்ப இப்பாடநெறிகள் பாகுபடுத்தப்பட்டுள்ளன.  இப்பாடநெறிகள் பின்வரும் பாகுபாட்டிற்கேற்பக் காட்டப்பட்டுள்ளன.

•    எந்திரவியல் தொழினுட்பவியல் பாடநெறிகள் (முழு நேரம் / பகுதி நேரம்)
•    எந்திரவியல் நுட்பப் பாடநெறிகள் (முழு நேரம் / பகுதி நேரம்)
•    வியாபாரக் கற்கைப் பாடநெறிகள் (முழு நேரம் / பகுதி நேரம்)
•    சாதாரண கற்கைப் பாடநெறிகள் (முழு நேரம் / பகுதி நேரம்)
 
க. பொ. த. (சா. த.) பரீட்சையில் நான்கு (4) திறமைச் சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்துள்ள மாணவர்களுக்கான பாடநெறிகள்

க. பொ. த. (சா. த.) பரீட்சையில் ஊடக மொழி, கணிதம் ஆகியன உட்பட ஆறு (6) பாடங்களில் சித்தியடைந்திருக்கும் மாணவர்களுக்கான பாடநெறிகள்

க. பொ. த. (சா.த.) பரீட்சையில் நான்கு (4) பாடங்களில் சித்தியடைந்துள்ள மாணவர்களுக்கான பாடநெறிகள்

தரம் 10 இல் சித்தியடைந்துள்ள மாணவர்களுக்கான பாடநெறிகள்

தரம் 9 இல் சித்தியடைந்துள்ள மாணவர்களுக்கான பாடநெறிகள்


தொழினுட்பவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் தேசியத் தொழில் தகைமைகள் (level 5 and 6) பாடநெறிகள்


மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறை
•    பாடநெறிக் கற்கை ஆண்டு ஒவ்வோர் ஆண்டிலும் யனவரி மாதம் தொடங்கி திசெம்பர் மாதம் முடிவடையும்.
•    ஒவ்வோர் ஆண்டிலும் செப்ரெம்பர் / ஒக்ரோபர் மாதத்தில் வெளியிடப்படும் அரசாங்க வர்த்தமானியின் மூலம் பாடநெறிகளின் விவரமும் அவை நடத்தப்படும் தொழினுட்பக் கல்லூரிகள் இடம்பெறும் தகவல்களும் வெளியிடப்படும்.  அதில் வெளியிடப்படும் மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த இறுதித் தேதிக்கு முன்பாக உரிய தொழினுட்பக் கல்லூரியின் அதிபருக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
•    ஒருவர் தமக்கு விருப்பமான எந்தப் பாடநெறிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
•    உளச்சார்புப் பரீட்சையின் அதோடு / அல்லது நேர்முகப் பரீட்சையின் பேறைக் கொண்டு விண்ணப்பகாரர்கள் தெரிந்தெடுக்கப்படுவர்.
•    மாணவர்களை அனுமதித்தல் தொடர்பாக மேலதிக விவரங்களை விண்ணப்பகாரர் அண்மையில் உள்ள தொழினுட்பக் கல்லூரியில் இருக்கும் தொழில் வழிகாட்டல் நிலையத்திலிருந்து பெறத்தக்கதாக இருக்கும் அதே வேளை தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் தகைமைகளுக்கேற்பப் பாடநெறிகளுக்குப் பிரவேசிப்பதற்குப் பதிவுசெய்யலாம் (தொழினுட்பக் கல்லூரிகளில் அமைந்துள்ள தொழில் வழிகாட்டல் நிலையங்களின் தொலைபன்னி எண்கள் பக். 00 இல் தரப்பட்டுள்ளன).

பாடநெறிக் கட்டணங்கள்
•    முழு நேரப் பாடநெறிகளுக்காக எக்கட்டணமும் அறவிடப்படமாட்டாது.  எனினும், பகுதி நேர / மாலை நேரப் பாடநெறிகளைக் கற்பவர்களிடமிருந்து பின்வருமாறு கட்டணம் அறவிடப்படும்.
    ஓர் ஆண்டிற்குக் கூடிய பகுதி நேர / மாலை நேரச் சான்றிதழ்ப் பாடநெறிகளுக்காகக் கற்கை ஆண்டுக்கு ரூ. 2000.00.
    ஓர் ஆண்டு அல்லது அதற்குக் குறைந்த குறுகிய காலப் பகுதி நேர / மாலை நேரப் பாடநெறிகளுக்காகக் கற்கை ஆண்டுக்கு ரூ. 1500.00.

பயிற்சி பெறும் காலவெல்லையினுள்ளே பயிற்சிபெறுபவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்
•    ஒரு நாளுக்கு ரூ. 20 படி (ஒரு மாதத்திற்கு ரூ. 450 என்னும் உயர்ந்தபட்சத்தின் கீழ் முழு நேரப் பகல் பாடநெறிகளுக்காக மாத்திரம்)
•    குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளுக்கு ரூ. 2500 வீதம் என்னும் ஆண்டுப் புலமைப் பரிசில்
•    தேசியத் தொழில் தகைமைச் சான்றிதழைப் (NVQ) பெறுவதனூடாக டிப்ளோமா, உயர் டிப்ளோமா, தொழினுட்பவியல் பட்டம் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தல்.
•    தேர்ச்சியை அடிப்படையாய்க் கொண்ட பயிற்சியின் (CBT) கீழ் பாடநெறிகளைக் கற்கத்தக்கதாக இருத்தல்
•    நிவாரணப் பணத்திற்கு இ.போ.ச. சலுகைப் பயணச் சீட்டுகளைப் பெறும் உரிமை கிடைத்தல்
•    தொழில் ஆலோசனைச் சேவையையும் தொழில் ஆங்கில அறிவையும் பெற்றுக்கொள்ளல்.
•    முயற்சி அறிவைப் பெற்றுக்கொள்ளல்
•    நுட்ப விருத்தி அறிவைப் பெற்றுக்கொள்ளல்

பயிற்சியின் பின்னர் பயிற்சிபெறுநர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்
•    அரசாங்க, தனியார் நிறுவகங்களில் மேலதிகப் பயிற்சி
•    அன்னியத் தொழில்களுக்கு வழிப்படுத்தல்
•    சுய தொழில்களுக்கு வழிப்படுத்தல்
•    சிறிய, நடுத்தர அளவிலான வியாபாரங்களை ஆரம்பிக்கத் தேவையான முயற்சிப் பயிற்சியுடன் கடன் வசதிகளுக்கு வழிப்படுத்தல்
•    வியாபார ஆலோசனைச் சேவைகள்
•    தனியார் துறையில் உள்ள தொழில்களுக்கு வழிப்படுத்தல்.



 

 


அமைப்பு பற்றிய தகவல்

தொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்

தபால் பெட்டி இல்.557
ஒக்கொட் மாவத்தை
கொழும்பு 10


எச்.எள்.ஒபெயசெகர
தொலைபேசி:+94 112 421 580
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 449 136
மின்னஞ்சல்:info@dtet.gov.lk
இணையத்தளம்: www.dtet.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:36:16
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty