தகைமைகள் :
• காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ், அனுமதிப் பத்திரம் மூலமாகக் காணித்துண்டு பெற்றிருத்தல்
• குறித்த காணி சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டிருத்தல்
• வதிவிடத்திற்கு வழங்கப்பட்ட காணியெனில், குறித்த காணியில் வீடொன்று நிர்மாணித்து அதில் வசித்தல் வேண்டும்
• அரசுக்குச் செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்பட்டு நிறைவு அடைந்திருத்தல் (கொள்விலை)
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
விண்ணப்பக் கடிதத்தைக் கிராம அலுவலர் அல்லது வெளிக்களப் போதனாசிரியரிடம கையளித்தல் (காணி அமைந்துள்ள பிரிவின் பிரதேசச் செயலாளரிடம் கையளித்தல் வேண்டும்)
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
விசேட விண்ணப்பப் படிவங்கள் இல்லை. தாங்களே தயாரித்துக் கடித அமைப்பிலான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை.
விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை :
அரச விடுமுறையாக இல்லாத எந்த ஒரு தினத்தில் அலுவலக நேரங்களினுள்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
100/= ரூபாய்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை):
தவறுகளின்றித் தயாரிக்கப்பட்ட அளிப்புப் பத்திரங்கள் (சுவடு வரைதலுடன்) எமக்குக் கிடைக்கப் பெற்ற பின்னர் குறைந்தது சுமார் 3 மாத காலப் பகுதியினுள்
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
காணி ஆணையாளர் நாயகத்தின் 2008/1 ஆம் இலக்கச் சுற்றறிக்கைக்கு ஏற்ப விதப்புரை அறிக்கை
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இயைப்புடையதல்ல
விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு
இல்லை
பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம்
இயைப்புடையதல்ல
அமைப்பு பற்றிய தகவல்காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.
திருமதி. த . முருகேசன் தொலைபேசி:0112-797400 தொலைநகல் இலக்கங்கள்:0112-864051 மின்னஞ்சல்:info@landcom.gov.lk இணையத்தளம்: www.landcom.gov.lk
|