விசேட அவசியப்பாடுகள்:- கிடையாது.
சேவை பற்றிய விபரம்
கொழும்பில் இருந்து வவூனியா கண்டி மற்றும் நானுஓயா ஆகிய நகரங்களுக்கான நகரங்களுக்கிடையிலான புகையிரதங்கள் உள்ளன. இப்புகையிரதங்களில் இரண்டாம் வகுப்பு ஒதுக்கப்பட்;ட ஆசனங்களே உள்ளதோடு ஒதுக்கப்படாத மூன்றாம் வகுப்பு ஆசனங்களைக் கொண்ட ஒரு புகையிரத கூடம் (பெட்டி) மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளது. வவூனியாவூக்கான நகரங்களுக்கிடையிலான புகையிரதத்தில் ஒரு குளிரூட்டப்பட்ட கூடம் உள்ளது. இதற்கு மேலதிகமாக நாள் தோறும் பயணிக்கின்ற 45 தொலைப் பயணச் சேவைப் புகையிரதங்களில் உள்ள ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 2000 ஆகும்.
சேவையைப் பெற வேண்டிய விதம் (வழிமுறை):-
புகையிரதப் பயணம் தொடங்குகின்ற மற்றும் முடிகின்ற புகையிரத நிலையங்களிலும் அவை நிறுத்தப்படுகின்ற இடங்களிலும் மாத்திரமே ஆசனங்களை ஒதுக்கிக்கொள்ள முடியூம்.
இப்புகையிரத நிலையங்களுக்கு புகையிரதத்தில் மட்டுப்படுத்திய எண்ணிக்கை கொண்ட ஆசனங்களை ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடுஇ அந்த ஆசனங்களைப் புகையிரத நிலைய அதிபரைச் சந்தித்து ஒதுக்கிக்கொள்ள முடியூம்.
விண்ணப்பப் பத்திரத்திற்காக செலுத்த வேண்டிய பணம்:
விண்ணப்பப் பத்திரங்கள் தேவையில்லை.
ஆசனங்களை ஒதுக்கிக்கொள்ளக்கூடிய நேரங்கள்:
கிழமை நாட்களில் - காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
நீங்கள் பயணம் செய்ய எதி
பார்க்கும் திகதிக்கு 10 நாட்களுக்கு முந்திய தினத்தில் ஆசன ஒதுக்கீடு ஆரம்பிக்கப்படும்.
(உ+ம்): 2009.02.20 ஆம் திகதி பயணம் செய்வதாயின் 2009.02.10 ஆந் திகதியில் இருந்து ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளலாம்.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
பயணத்திற்காகச் செலுத்த வேண்டிய சாதாரண கட்டணம் (ஏற்புடைய வகுப்புக்காக)
அத்துடன் மேலதிகமாக
ரூ.125.00 காட்சிகாண் கூடம் மற்றும் குளிரூட்டப்பட்ட கூடம்
ரூ.100.00 இரண்டாம் வகுப்பு
ரூ.75.00 மூன்றாம் வகுப்பு
ஒதுக்கிய தருணத்திலேயே பணத்தைச் செலுத்தி அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியூம். பகிரங்க அலுவலர்கள் புகையிரத ஆணைச்சீட்டினைப் பயன்படுத்தி ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளலாம். சாதாரண கட்டணங்களை அறிந்து கொள்ள புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான றறற.சயடைறயல.பழஎ.டம மூலமாகவோ 1919 தொலைபேசி இலக்கத்துடன் தொடபு கொள்வதன் மூலமாகவோ அல்லது புகையிரத நிலைய அதிபரொருவருடன் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ள முடியூம்.
சேவையைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் காலம்
புகையிரதங்களில் உள்ள ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால் ஆசன ஒதுக்கீடானது வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற வரிசைக் கிரமத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவேஇ கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இதற்காக நீண்ட வரிசையில்கூட இருக்க வேண்டிய நிலையேற்படுவதோடு ஆசன ஒதுக்கீடு தொடங்கும் தினத்திலேயே உங்களின் பயணத்திற்கான ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதே பொருத்தமானது.
ஆசனங்களை ஒதுக்கிக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்
கடிதங்களையோ ஆவணங்களையோ கொண்டுவர வேண்டியதில்லை. இருந்த போதிலும் நீங்கள் பயணிக்கும் திகதி சேர்விடங்கள்பயணம் செய்யூம் வகுப்பு அனுமதிச் சீட்டுக்களை ஒரு வழிப்பயணத்திற்காக மாத்திரமா இன்றேல் மீண்டும் வருவதற்கான பயண அனுமதிச் சீட்டுக்களையூம் கொள்வனவூ செய்யப் போகின்றீர்களா போன்றவற்றைத் திட்டமிட்டு ஆசன ஒதுக்கீட்டினைச் செய்ய முன்வரவூம்.
சேவையை வழங்கும் பொறுப்பினை வகிக்கும் உத்தியோகத்தர்கள்
புகையிரத நிலைய அதிபர்கள் அல்லது
பதவி |
பெயர் |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
போக்குவரத்து அத்தியட்சகர் |
திரு. H.ஆ.வூ.N. நாலக்க பண்டார
|
0094-11-4331094 |
0094-11-4331094 |
ops@railway.gov.lk |
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை புகையிரதத் திணைக்களம்
புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு. திரு. எல்.பி.எச். வடுகே தொலைபேசி:+94 11 4 600 111 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|