சேவையைப் பெற்றுக்கொள்ள அவசியமான விசேட தகைமைகள்:
கிடையாது.
சேவை பற்றிய விபரங்கள்
புகையிரத நிலையங்களிலும் புகையிரத திணைக்கள வளவிலும் விளம்பரப் பலகைகளை காட்சிக்கு வைத்தல் தொடர்பாக வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளராலேயே அனுமதி வழங்கப்படுகின்றது. இங்கு விண்ணப்பப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து ஏற்புடைய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம்
ஏற்புடைய விண்ணப்பப் பத்திரத்தை (இலக்கம் 2.7) கொழும்பு 10 புகையிரத தலைமையகத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று பூர்த்தி செய்து ஒப்படைத்தல் வேண்டும். இவ்விண்ணப்பப் பத்திரம் இப்புத்தகத்தின் 3.2 அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளது. இன்றேல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை ஒரு கடிதம் மூலமாக சமர்ப்பிப்பதன் மூலமாகவூம் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
புகையிரத நிலையங்களில் காட்சிக்காக -
புகையிரத நிலையம் விளம்பரத்தின் அளவூ மற்றும் அடங்கியூள்ள விபரங்கள் காட்சிக்கு வைக்கும் காலப்பகுதி.
புகையிரத நிலையங்களுக்கு வெளியில் உள்ள புகையிரத வளவூகள்:
மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் அண்மையில் உள்ள புகையிரத நிலையம் விளம்பரத்தை காட்சிக்கு வைக்கும் இடத்தின் பருமட்டான வரைபடக் குறிப்பு.
விண்ணப்பப் பத்திரக் கட்டணம்:
கிடையாது.
சேவையைப் பெற்றுக் கொள்ளக்கூடிய கால எல்லை
கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்கள்
பொல்கஹவெலவூக்கும் அளுத்கமவூக்கும் இடையில் - மாதத்திற்கு ரூ.100.00
ஏனைய பிரிவூகளில் - மாதத்திற்கு ரூ. 50.00
சேவையைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் காலம்
விண்ணப்பப்பத்திரம் கிடைத்த பின்னர் அந்த இடத்தில் விளம்பரப் பலகையைக் காட்சிக்கு வைப்பதால் புகையிரத ஓட்டத்திற்குத் தடையேதும் ஏற்படுமா என்பது பற்றிப் பரிசீலனை செய்யப்படும். அதன் பின்னர் அனுமதி வழங்கப்படுவதோடு விண்ணப்பதாரி ஏற்புடைய பணத்தொகையை புகையிரத தலைமையகத்தின் பிரதம கணக்காளர் திணைக்களத்தின் செலுத்துதல் கருமபீடத்திற்குச் செலுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.
சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
விண்ணப்பப் பத்திரம் மாத்திரமே.
சேவையை வழங்குதல் தொடர்பாக பொறுப்பு வகிக்கும் உத்தியோகத்தர்
| பதவி |
பெயர் |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
| வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் |
திரு.வூ.சு.பி.டீ. தென்னக்கோன் |
+94-11-2431909 |
+94-11-2431909 |
com@railway.gov.lk |
அமைப்பு பற்றிய தகவல்Department of Railways(Under Construction)
Railway Headquarters,
P.O. Box 355,
Colombo.
தொலைபேசி:+94 11 4 600 111 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|