நுகர்வோரின் புகாரை கையாளுதல்
சரக்குகள்மற்றும் சேவைகளின் தரம் மற்றும் குறிப்புகளை உறுதி செய்யவில்லை என்றால் அதற்கான புகார் கொடுத்தல் சேவையை வழங்குவதற்கான காரணம் என்னவெனில் நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் தரமான பொருட்களை விற்பனை செய்தல் அல்லது சேவையை அவர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு வழங்கப்படுகிறது. தரம் மற்றும் கட்டுகபாடுகள் சம்பந்தமான தயாரிப்பு, உற்பத்தி, அளித்தல், பாதுகாப்பு இடம், போக்குவரத்து மற்றும் ஏதேனும் பொருட்களுக்கான விற்பனை அல்லது ஏதேனும் சேவைக்காக அளித்தல் ஆகியவை காலத்திற்கு ஏற்று அரசுப் பத்திரிக்கையின் வெளியிடு மூவமாக உறுதிசெய்யப்படுகிறது. சுரக்குகள் அல்லது சேவையை கொள்முதல் செய்த 3 மாதத்திற்கு பிறகு புகார் அளிப்பவர் புகார் இச்சேவையைப் பெறுதல்.
தகுதி
- புகார் செய்த நுகர்வோரே இந்த சேவையை பெறத் தகுதியானவர்.
- பொருட்களை கொள்முதல் செய்த 3 மாதத்திற்குள் அல்லது சேவையை வழங்கிய 1 மாதத்திற்குள் புகாரை ஒப்படைக்க வேண்டும்.
சமர்ப்பித்தலுக்கான வழிமுறைகள்
- புகார் அளிப்பவரின் கையொப்பம் புகாரில் இருக்க வேண்டும்:
புகார் கடிதத்தில் சம்மந்தப்பட்ட நபர் கையொப்பம் இட வேண்டும்.
- புகாரை எங்கே சமர்ப்பிக்க வேண்டும்:
முதன்மை இயக்குனர் அல்லது நுகர்வோர் நலக் குழுமத்தின் தலைவரிடம் புகார் கடிதம் மற்றும் இணைப்பு ஆவணங்களை நுகர்வோர் சமர்ப்பிக்க வேண்டும்.
- யார் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்:
நுகர்வோர் நல திணைக்களத் தலைவரிடம் புகார் கடிதம் மற்றும் இணைப்பு ஆவணங்களை நுகர்வோர் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள்
இந்த செயல்முறைக்கான சிறப்பு விண்ணப்பம் எதுவுமில்லை, சம்மந்தப்பட்ட நபர்; (புகார்தாரர்) இடமிருந்து புகார் கடிதங்களாக வரவேற்கப்படுகின்றன.
படிப்படியான வழிமுறைகள்:
படி 1:
நுகர்வோர் நலக் குழுமத்தில் மனக் சம்மந்தப்பட்ட தரப்பினர் எழுத்துப்பூர்வ புகாரை இணைப்பு ஆவணங்களுடன் செயல் நிகழ்ந்த 3 மாதத்திற்குள்ளாக சமர்ப்பித்தல் வேண்டும்.
படி 2:
குழுமம், புகாரைப் பதிதல் மற்றும் நுண்ணாய்வுச் செய்தல்.
படி 3:
உற்பத்தியாளர் விற்பணையாளர் பார்வையிடுதலுக்காக அழைக்கப்படுதல்
படி 4
உற்பத்தியாளர் விற்பணையாளர் ஒப்பந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ளுதல்.
குறிப்பு 1:
உற்பத்தியாளர் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்:
- உற்பத்தியாளர் விற்பணையாளரை விசாரனைக்காக நுகர்வோர் நல மற்றும் தகவல் திணைக்களம் அழைக்கும்
- ஈடுசெய்வதற்க்கு, மாற்றுவதற்க்கு அல்லது திருப்பி அனுப்புவதற்கான ஆணையை பொறுப்புவாதியிடம் வழங்குதல்.
உற்பத்தியாளர் / விற்பணையாளர் தற்போதும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்:
சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பொறுப்புவாதிக்கு எதிராக கோப்பை தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பு 2:
குறிப்பிட்ட காலத்திற்குள் புகார் செய்யாமல் இருந்தால்:
- பொறுப்புவாதியை கண்டுபிடித்தல் ஆய்வுச் செய்வதற்காக அழைத்தல்
முடிவுகளை பொறுப்புவாதி ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்
- இரு தரப்பினரையும், இடையே உள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அழைத்தல்
முடிவுகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்
- சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பொறுப்புவாதிக்கு எதிராக கோப்பை தாக்கல் செய்ய வேண்டும்.
காலக் கோடு
செயல்முறை காலக்கோடு:
புகாரின் தன்மையை பொருத்து செயல்முறைக்கான நேரம் மாறுபடும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை (புதன்கிழமை தவிர்த்து)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 8.45 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
விடுமுறை நாட்கள்: பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு:
பொருட்கள்: பொருட்களை வாங்கிய 3 மாதத்திற்க்குள்ளாக.
சேவைகள்: சேவையை வழங்கிய 1 மாதத்திற்க்குள்ளாக.
சேவைத் தொடர்பான செலவீனங்கள்
செலவீனம்:
மொத்த செலவீனமும் குழுமத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
கட்டணம்:
புகார் கொடுப்பவருக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை
அபராதங்கள்:
அபராதங்கள் இல்லை
இதரக் கட்டணங்கள்:
இந்த சேவையை பெறுவதற்கு கூடுதல் செலவீனம் ஏதுமில்லை
அமைப்பு பற்றிய தகவல்நுகர்வோர் நலக் குழுமம்
1 மற்றும் 2 வது மாடி,
ச.தொ.ச. செயலகக் கட்டிடம்,
இல : 27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு 02. திருமதி. சந்திரிக்கா திலக்கரத்ன தொலைபேசி:011-7755456-7, 011-7755475 Consumer Complaint 011-7755481-3 தொலைநகல் இலக்கங்கள்:011-2399148 மின்னஞ்சல்:chairmancaa@sltnet.lk / dgcaa@sltnet.lk இணையத்தளம்: www.caa.gov.lk
|