படி 1: விபத்து நடந்ததை தொலைபேசியிலோ அல்லது நேரடியாகவோ பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தல்.
படி 2: பொலிஸ் அலுவலர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் செல்லுதல்.
படி 3: பொலிஸ் அலுவலர் ஓட்டுனரிடமிருந்து ஓட்டுனர் உரிமத்தை எடுத்தல்.
படி 4: பொலிஸ் அலுவலர் விபத்துக்கான முக்கிய காரணத்தை குறித்து கொண்டு அந்த இடத்தில் அடையாள குறி வரைதல்.
படி 5: பொலிஸ் அலுவலர் இருத்தரப்பினரையும் அழைத்து சர்ச்சையை தீர்த்து வைக்க முயற்சித்தல்.
படி 6: பொலிஸ் அலுவலர் இருத்தரப்பினரையும் (வாகனங்களுடன்) பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லுதல் பின் அவர்களிடம் புகார் அறிக்கையை வழங்கி அவர்களுடைய வாகனங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தது என்றால் B படிவத்தை வழங்குதல்(1/B)
படி 7: எந்த நபர் மீது தவறு உள்ளது என்று பொலிஸ் அலுவலர் முடிவு செய்வர்.
படி 8: தவறு இல்லாத நபரின் ஓட்டுனர் உரிமத்மத்தை பொலிஸ் அலுவலர் திருப்பி கொடுத்தல்.
படி 9: பொலிஸ் அலுவலர் நீதிமன்ற ஆனணயின்படி தவறு செய்தவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார். (அந்த நபர் தனது வசதியைப் பொறுத்து நீதி மன்றத்திற்கு வருதல் ஆனால் விரைவில் நீதி மன்றத்திற்கு வரவேண்டும்)
குறிப்பு 1: ஏதாவது காயம் அல்லது இறப்பு ஏற்பட்டிருந்தால் காயம்பட்டவர் மற்றும் இறந்தவரின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுத்தல்.
குறிப்பு 2: “சரியான சட்டத்தின் படி” பொலிஸ் அலுவலர் எந்த நபர் மீது தவறு என்று முடிவு செய்வார்.
குறிப்பு 3: தவறு செய்த நபர் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதி வரையறைகள்:
வாகன விபத்துக்கு காரணமான நபர்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
முறைகள் பின்வருவன:
பொலிஸ்க்கு விபத்து பற்றிய தகவலை தொலைபேசி அல்லது பொலிஸ் நிலையத்திற்கு சென்று தெரிவிக்க வேண்டும்.
விபத்து நடந்த இடத்திற்கு வரும் பொலிஸ் அலுவலரிடம் விபத்துக்குக் காரணமான நபர் ஓட்டுனர் உரிமத்தை கொடுக்க வேண்டும்.
1 விபத்துக்கான அனைத்துத் தரப்பினரும் பொலிஸ் அலுவலரின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆக வேண்டும்.
குறிப்பு : புகார் கொடுப்பவரிடம் படிவம் B ஐ பொலிஸ் வழங்குவார்.
வேலை நேரங்கள்
பொலிஸ் நிலையம்
24/7/365 நாட்கள்
படிவம்: B படிவம் (1B) புகார் கொடுத்த பின் பொலிஸ் நிலையத்தால் வழங்கப்படும் படிவம்.
குறிப்பு: பொலிஸ் அலுவலர் விபத்துக்கான விளக்க அறிக்கையின் உண்மையானப் பிரதியை வழங்குவார்.
விண்ணப்பப்படிவம்:
இந்த சேவைக்கு எந்த ஒரு விண்ணப்பப்படிவமும் தேவையில்லை.
குறிப்பு:
புகார் கொடுப்பவரிடம் படிவம் B ஐ பொலிஸ் அலுவலர் வழங்குவார்.
பொலிஸ் அலுவலர் அறிக்கையின் உண்மையானப் பிரதியை வழங்குவார் (DOP F424)
காலக்கெடு:
செயல்முறை காலக்கெடு:
விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து கால அளவு வேறுப்படும்.
குறிப்பு 01:
விபத்துக்குள்ளான நபர் விபத்தைப் பற்றிய தகவலை விரைவில் பொலிஸிற்க்கு தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கெடு:
புகார் தீர்மானிக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்படும் வரை அந்த புகார் செல்லத்தக்கது.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
தகவல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தின் பிரதிக்கும் ரு:25.00
அபராதங்கள் மற்றும் இதரக்கட்டணம்:
இந்த சேவைக்கு எதுவும் தேவையில்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
1 ஓட்டுனர் உரிமம்
2 வருமான உரிமம்
3 காப்பீட்டுச் சான்றிதழ் (இருப்பின்)
சேவைக்கான பொறுப்புக் குழு:
பொறுப்பு அலுவலர் ( OIC ) : மோட்டார் போக்குவரத்து பிரிவு
பொறுப்பு அலுவலர் ( OIC ) : சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையம்
சிறப்பு வகையறைகள்:
இந்த சேவைக்குப் பொருந்தாது.
போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
நம்பகத்தன்மையின் காரணமாக பொலிஸ் நிலையம் தகவல்களை வழங்காது.
அமைப்பு பற்றிய தகவல்பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01. Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: https://www.police.lk
|