Required Forms (COIN) (A-BB) (A-PA) (A-MRC) (CI) (LA) ((A) (B) (C) (D)} (IN-PAMRC) (Ext) (DOF) (MPR) (MP) (GL) | ||||
நிர்மாணம் பயிற்சியளிப்பு அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் (இக்ராட்) வழங்கப்படும் அங்கரிங்கப்பட்ட பதிவுகளை கொண்ட நிர்மாண ஒப்பந்தகாரா்களுக்கு நிதி சார்ந்த உதவிகள் வழங்கல் |
|
|||
விபரங்கள் இந்த விபரங்களை நிர்மாண தொழிலாளா்கள் அரசாங்கத்தின் கவனத்தில் கொண்டுவந்தார்கள். இதன் அடிப்படையில் 1999ம் ஆண்டு நிர்மாண ஒப்பந்தகாரா்களுக்கு சரியான காரணங்களுக்கு தேவையான பிணைகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஒரு நிறுவனத்தை நிறுவ தீா்மானித்தது. இதற்கு தேவையான ரூ100 கோடி ரூபா வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. திறைசேரி காரியதரிசியினால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு நம்பிக்கை நிறுவனத்தை நிறுவும்படி பணிக்கப்பட்டது. இதற்கு அரசாங்கத்திலிருந்தும் தனியார் நிறுவனத்திலிருந்தும் உறுப்பினா்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்த நிதியத்தை சரியான முறையில் கொண்டு நடத்துவதற்கும், முகாமைப்படுத்துவதற்கும் பணிக்கப்பட்டார்கள். திறைசேரி காரியதரிசி நிறைவேற்று அதிகாரம் உடையவராவா். மேற்கூறிய நிபந்தனைக்கு அமைவாக 1999ம் சுயாட்சி உரிமையுடைய தனிப்பட்ட நிர்மாண உத்தரவாத நிதி ஆரம்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் நம்பிக்கை/நிதியம் தற்போது அரசாங்க, தனியார்துறை நிறுவன பிரதிநிதிகளுடன் நடைபெறுகின்றது. நிர்மாணத்திற்கு பொறுப்பான அமைச்சரின் காரியதரிசி இதன் தலைவராவா். இந்த நம்பிக்கை/நிதியத்தின் முக்கியமான குறிக்கோள் நிர்மாண ஒப்பந்தகாரா்களுக்கு பிணை/பிணைமுறிகளை, பாதுகாப்பு பத்திரங்கள் வழங்கி கூறுவிலை சமா்ப்பிப்பதற்கு தயார்ப்படுத்துவது. அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைகளை செய்ய உதவி வழங்குவதலும். மேற்குறிப்பிட்ட பிணைகளை பெறுவதற்கு நிர்மாண ஒப்பந்தகாரா்கள் அங்கீகரிகப்பட்ட பதிவு இக்ராட்டில் செய்திருக்கவேண்டும். நிர்மாண ஒப்பந்தகாரா்கள் நிர்மாண உத்தரவாத நிதியத்தின் சேவைகளை பெறுவதற்கு முதலில் சீ.ஜீ.எவ். ஆல் கேட்கப்படும் விபரங்களை சமா்ப்பித்து பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கும் அதனுடன் சம்பந்தப்பட்ட படிவங்களும் :- 1. (COIN) - சீ.ஜீ.எவ். இல் பதிவு மேற்கொள்வதற்கு. 2. (A-BB) - பிணை முறிகள் பெறுவதற்கான படிவம்.(கூறுவிலை சமா்ப்பிக்கப்படும் போது பாவிப்பதற்கு) 3. (A-PA) - செயற்பாட்டுப்பிணை/முற்பணப்பிணை பெறுவதற்கான படிவம். 4. (A-MRC) - பராமரிப்பு/பிடிபணம்/சேர்ந்த பிணைகள் பெறுவதற்கான படிவம். 5. (CI) - வருடா வருடம் சமா்ப்பிக்கப்படவேணடிய குறிப்புக்கள் அல்லது நடறுவனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுருத்தல். 6. (LA) - ஒப்பந்தகாரரின் பணவிரயம் பற்றிய வாக்குறுதிகள் (கடிதமூல வாக்குறுதி) 7. (A), (B), (C), (D) - திட்டத்திற்கான வங்கிகளுக்கு (உரிமை இல்லாத கணக்கு) எல்லாப்படிவங்பளுடனும் இணைக்கப்பட்டுள்ளது (A-PA) & (A-MRC) 8. (IN-PAMRC) - பாதுகாப்பு உத்தரவாதம் எல்லாப்படிவங்பளுடனும் இணைக்கப்பட்டுள்ளது – (BB), (A-PA) & (A-MRC) 9. (Ext) - நடைபெறும் வேலைக்கான பிணைகளின் கால எல்லையை நீடிப்பதற்கு (கால நீடிப்புக்கான படிவம்) 10. (DOF) - உரிமை இல்லாத கணக்கில் உள்ள பணத்தை விடுவிப்பதற்கு.(பணத்தை விடுவிப்பதற்கு) 11.(MPR) - ஒப்பந்தகாரர்கள் மாதந்த முன்னேற்ற அறிக்கை சமா்ப்பிப்பதற்கான படிவம்(கட்டாய தேவை மாதந்த முன்னேற்ற அறிக்கை) 12. (MP) - சீ.ஜீ.எவ். இனால் கண்காணிக்கப்படும் விசேட வேலைப்பகுதி (வேலையை கண்காணிப்பதற்கான வழிமுறை) 13. (GL) - எல்லா ஒப்பந்தகாரர்களுக்கும் மேலதிகமான குறிப்புகள் சீ.ஜீ.எவ். இன் முகாமைத்துவ ஒழுங்குமுறை அறிவுறைகள்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:54:23 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |