தகைமைகள்
பொது மக்கள் பின்வரும் சந்தர்ப்பங்களில் விண்ணப்பிக்க முடியும்
- புதிய நிறுவனத்தைத் தாபித்தல்
- இருக்கும் நிறுவனத்தின் முகவரியை மாற்றுதல்
- மீள்- பதிவு செய்தல்
- இருக்கும் நிறுவனத்தின் பெயரை மாற்றுதல்
- நிறுவனத்தின் உரிமையாளரை மாற்றுதல்
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
மாவட்டத் தொழில் அலுவலகங்கள், உப தொழில் அலுவலகங்கள், தலைமை அலுவலக கீழ் தளத்தில் உள்ள கரும பீடத்தில் மற்றும் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் . இணையத்தளம் labourdept.gov.lk
விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-
கட்டணம் இல்லை
விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
விண்ணப்பப் படிவத்தை தலைமைச் செயலகம் அல்லது நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தின் மாவட்டத் தொழில் அலுவலகம் அல்லது உபதொழில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.d.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் :-
சேவைக் கட்டணம் இல்லை
சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)
பதிவு செய்வதற்கு தலைமை அலுவலகமாயின் 01 நாள் , பிற அலுவலகங்கள் எனின் 07 நாட்கள்.
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்
- “டீ” படிவத்தின் 02 மூலப்பிரதிகள் தொழில் தருநரினால் பூரணப்படுத்தல் வேண்டும்.
- நிறுவனத்தில் 10 ஊழியர்கள் அல்லது 10 இற்கும் குறைவான ஊழியர்கள் இருக்கும் பட்சத்தில், “டீ” படிவத்திற்கும் மேலதிகமாக, 02 “டீ” இணைப்பின் மூலப்பிரதி அலுவலக முத்திரையிடப்பட்டு சான்றுபடுத்தப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
- நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 10 இலும் அதிகமாக இருப்பின் அவர்களின் முழுப்பெயர் , வயது, தொழிலின் தன்மை, சம்பளம், நியமனத் திகதி என்பவற்றின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.( “டீ” படிவத்தினைச் சான்றுபடுத்துபவர் இப் பட்டியலையும் சான்றுபடுத்தி பதவி முத்திரையிடல் வேண்டும்.)
- நிறுவனம் / வியாபாரம் பதிவு செய்யப்பட்ட அல்லது ஆரம்பிக்கப்பட்ட திகதிக்கும் ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்த திகதிக்கும் இடையில் 02 வருட காலத்திற்கும் மேற்பட்ட இடை வெளி காணப்படின் அதற்கான காரணத்தினைக் கொண்ட எழுத்து மூலமான கூற்று ஒன்றினை தொழில் தருநர் சமர்ப்பிக்க வேண்டும்.
- நிறுவனத்தின் உரிமையாளரால் அல்லது ஓர் பங்குதாரரால் ( இணைந்த தொழிலாக இருப்பின்) “டீ” படிவம், “டீ” இணைப்புகள் என்பன சான்றுபடுத்தப்படல் வேண்டும்.
இன்னொருவர் கையொப்பமிட்டிருப்பின் அவர் அற்றோனித் தத்துவ அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதுடன் அதன் பிரதியையும் சமர்ப்பிக்க வேண்டும். அற்றோனித்தத்துவ அதிகாரத்திற்குப்பதிலாக வேறுவகையான அதிகாரம் வழங்கப்பட்ட எந்தவொரு கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ( அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்புடைய திட்டங்கள் தவிர)
- நிறுவனத்தின் ஊழியர்கள் இடமாற்றங்களின் பிரகாரம் நியமனம் பெற்றிருப்பின், நிறுவனத்தின் பணிப்பாளர்களின் சபையினால் அவ் ஊழியர்களுக்கு நியதிச் சட்டப்படியான கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக வலுவில் இருக்கும் என்பதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- கம்பனி அல்லது வியாபாரத்தைப் பதிவு செய்யின் படிவங்கள் பணிப்பாளர் அல்லது பங்குதாரரால் கையொப்பமிடல் வேண்டும். அவரது பெயர் இணைப்பு “டீ” ( ஊழியர்களின் பட்டியல்) இல் இல்லாததாக இருத்தல் வேண்டும். இது தொடர்பாகப் பிரச்சினை எழவில்லையாயின் அவரது பெயர் பணிப்பாளர் அல்லது பங்குதாரராக அதாவது இணைப்பு “டீ” (ஊழியர்களின் பட்டியல்) உள்ளவராக இருக்கலாம்.
இப்படிவங்களுக்கும் மேலதிகமாக, நிறுவனம் / வியாபாரம் பின்வருவனவற்றில் ஒன்றாக இருப்பின் ;
Ø ஒரு தனிபட்ட வியாபாரம் ( ஏக உரிமையாளர்),
- வியாபாரப் பதிவுச்சான்றிதழின் பிரதி ஒன்று
- நிறுவனம் அல்லது வியாபாரத்தின் உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்று
- கம்பனி பதிவு செய்யப்படவில்லையாயின் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்று போதுமானதாகும்.
Ø ஒரு பங்குதாரர் வியாபாரம்,
- வியாபாரப் பதிவுச் சான்றிதழின் பிரதி ஒன்று
- நிறுவனம் அல்லது வியாபாரத்தின் பங்குதாரர்கள் அனைவரினதும் தேசிய அடையாள அட்டையகளின் பிரதிகள்
Ø வரையறுக்கப்பட்ட ஒன்று அல்லது வரையறுக்கப்பட்ட தனியார் ,
- வியாபாரப்பதிவுச் சான்றிதழ் அல்லது கூட்டிணைப்பின் உண்மைப்பிரதி
- நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் தகவல்கள் அல்லது கம்பனியானது கம்பனிப் பதிவாளரால் சான்றுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொண்ட படிவம் 01, 05 அல்லது படிவம் 20, 40 இன் உண்மைப் பிரதியின் பிரதி
Ø ஒரு வெளிநாட்டுக் கம்பனி,
- வியாபாரப் பதிவுச்சான்றிதழ் அல்லது கூட்டிணைப்பின் சான்றிதழின் உண்மைப் பிரதி ஒன்று.
- கம்பனிப் பதிவாளரால் சான்றுபடுத்தப்பட்ட படிவம் 44,45 மற்றும் 46 இன் உண்மைப் பிரதியின் பிரதி.
- “டீ” படிவத்தில் கையொப்பமிட்டவர் பணிப்பாளர்/ படிவம் 45 அல்லது 46 இல் குறிப்பிடப்பட்ட அதிகாரம் பெற்ற அலுவலர் ஆக இல்லாவிடின் அவருக்கு “அற்றோனித் தத்துவ உரிமை” வழங்கப்பட்ட ஆவணத்தின் பிரதி ஒன்று.
- அற்றோனித் தத்துவ உரிமை கொண்டவரின் கடவுச் சீட்டு அல்லது தேசிய அடையாள அட்டையின் உண்மைப் பிரதி ஒன்று.
நிறுவனம் அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்புடையது, அதிகாரம் அல்லது திட்டம்,
- தி ட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைக் கொண்ட ஆவணத்தின் ஒரு பிரதி
- முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் உரிய அலுவலர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் ஓர் பிரதி.
- திட்டத்தின் தவிசாளர் மற்றும் அதன் பணிப்பாளர் என்பவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தின் பிரதி ஒன்று.
- திறைசேரியால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக் கடிதத்தின் ஓர் பிரதி.
- ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்வதன் பொருட்டு திட்டத்தின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர்களால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோள் கடிதம்.
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
பதவி
|
பிரிவு
|
தொலைபேசி
|
தொலை நகல்
|
மின்னஞ்சல்
|
உதவித்தொழில் ஆணையாளர்
|
ஊ.சே. நி. பதிவுசெய்தல் பிரிவு
|
011-2 369190
|
|
|
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
ஊழியர்களை வேலைக்குச் சேர்த்துக் கொண்ட திகதியிலிருந்து அனைத்து ஊழியர்களின் சார்பிலும் ஊ. சே. நி. பங்களிப்புச் செய்யப்பட வேண்டும். ஊழியர்கள் சார்பில் ஊ.சே. நி. பங்களிப்புச் செய்யத் தவறும் அல்லது தவணை தவறும் பட்சத்தில் தொழில்தருநர் கீழே குறிப்பிடப்பட்டவற்றிற்கு ஆழாதல் வேண்டும்..
- 01 நாளிலிருந்து 10 நாட்கள் வரை – 5%
- 10 நாளிலிருந்து 01 மாதம் வரை– 15%
- 01 மாதத்திலிருந்து 03 மாதங்கள் வரை – 20%
- 03 மாதங்களிலிருந்து 06 மாதங்கள் வரை – 30%
- 06 மாதங்களிலிருந்து 01 வருடம் வரை – 40%
- 01 வருடத்திற்கும் மேல் – 50%
விண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
தேவையான விண்ணப்ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
இணையத்தளம்: labourdept.gov.lk
அமைப்பு பற்றிய தகவல்தொழில் திணைக்களம்
தொழிற்செயலகம்,
இல.: 41,
கிருள வீதி,
கொழும்பு 5. திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர தொலைபேசி: (+94)11 2581145 தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145 மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk இணையத்தளம்: www.labourdept.gov.lk
|