சமுர்தி நிவாரணத்திற்காக முறையீடு செய்தல் |
|
|||
ஒரு இலங்கைவாசி மாதம் ரூபா 1இ500/ஸ்ரீ கீழ் வருமானம் ஈட்டுபவராக இருத்தல். குறிப்பு: - விண்ணப்பதாரருடைய குடும்ப பிண்ணனியை பொருத்து சமுர்தி முன்னேற்ற அலுவலர் தகுதியை தீர்மானிப்பார். தகுதியை உறுதிபடுத்துவதற்கு கீழ்கானும் காரணிகளையும் ஏற்றுக்கொள்வார்கள்.
- சமுர்தி நிவாரணத்திற்கு குடிமகன் தகுதியுடையவர் எனில், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வகையரைகளை பொறுத்து நிதி வழங்கப்படும். · ஒரு உறுப்பினருக்கு – ஒரு மாதத்திற்கு ரூபா 250/ஸ்ரீ. · 2 உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு – ஒரு மாதத்திற்கு ரூபா 350/ஸ்ரீ. · 2 உறுப்பினருக்கு மேல் உள்ள குடும்பத்திற்கு – ஒரு மாதத்திற்கு ரூபா 600/ஸ்ரீ. * மிகவும் அடிமட்ட வருமையில் வாடியிருக்கும் குடும்பத்திற்கு, ஒரு மாதத்திற்கு ரூபா 1இ000/ஸ்ரீ வழங்கப்படும். சமர்ப்பிக்கும் முறைகள் 1 முறையீட்டு கடிதத்தை தயாரித்தல் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெறவில்லை. படிப்படியான வழிமுறைகள் (சமுர்தி நிவாரணத்திற்காக முறையீடு செய்தல்) படி 1: விண்ணப்பதாரர் முழு வீட்டு வருமானம், குடும்ப பிண்ணனி மற்றும் முகவரிஃபிரிவை குறிப்பிட்டு ஒரு முறையீட்டு கடிதத்தை தயாரித்தல் வேண்டும். படி 2 : முறையீட்டு கடிதத்தை அஞசல் மூலம் தொடர்புடைய கோட்ட செயலகத்திற்கு அனுப்புதல் அல்லது தொடர்புடைய சமுர்தி முன்னேற்ற அலுவலரிடம் நேரடியாக ஒப்படைத்தல் வேண்டும். படி 3 : விண்ணப்பதாரர் முறையீட்டு கடிதத்தை கோட்ட செயலகத்திற்கு அனுப்பினால், கோட்ட செயலகம் நேரடியாக பார்வையிடப் போகும் சமுர்தி முன்னேற்ற அலுவலரிடம் தகவலை தெரிவிக்கும். குறிப்பு: விண்ணப்பதாரர் முறையீட்டு கடிதத்தை நேரடியாக சமுர்தி முன்னேற்ற அலுவலரிடம் அனுப்பினால், அந்த அலுவலர் நேரடியாக பார்வையிடுவார். படி 4 : தகுதி பற்றிய தகவலை சமுர்தி முன்னேற்ற அலுவலர் சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் தெரிவிப்பார். படி 5 : கோட்ட செயலகம் விண்ணப்பதாரரின் தகுதியை திறனாய்வு செய்தல் மற்றும் அங்கீகரித்தல். அதன்பின், விண்ணப்பதாரர் சமுர்தி நிவாரணத்தை பெற தகுதியுடையவராவார். குறிப்பு : - விண்ணப்பதாரர் சமுர்தி நிவாரணத்தை பெறுவதற்கு தகுதியுடையவரானால், சம்மந்தப்பட்ட கோட்ட செயலகம் சமுர்தி அமைச்சரகம் மற்றும் வருமை தணித்தல் குழுவிடம் சம்மந்தப்பட்ட நிதியை பெறவதற்கான தகவலை தெரிவித்தல். - சம்மந்தப்பட்ட கோட்ட செயலகம் தகுதியை அங்கீகரிக்கவில்லை எனில், விண்ணப்பதாரர் நிராகரிக்கப்படுவார். காலக் கோடு செயல்முறை காலக்கோடு 6 மாதத்திற்குள்ளாக. சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு முறையீட்டு கடிதத்தை அஞ்சல் மூலம் அனுப்புதல் அல்லது ஏதாவது வேலை நாட்களில் சமர்ப்பித்தல். ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு கிடைக்கப்ப பெறவில்லை. சேவைத் தொடர்பான செலவீனங்கள் கட்டணமின்றி இலவசமாக தேவையான இணைப்பு ஆவணங்கள் கிடைக்க பெறவில்லை. சிறப்பு வகையறைகள் கிடைக்கப் பெறவில்லை.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:42:11 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |