இயற்கைசீற்ற நிவாரண நிதி (இயற்கை பேரழிவு)
இயற்கை சீற்றமான பஞ்சம், வெள்ளம், புயல் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
மூன்று நாட்களுக்கு மேலாக வெள்ளமிருக்கும் சந்தர்பத்தில், கோட்ட செயலக அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் பொதுமக்களுக்கு சம்மந்தப்பட்ட காலத்திற்குள்ளாக முடிந்தவரையில் பங்கீடு வழங்கும்.
தகுதி
1. குறைந்த வருமானம் உள்ள குடும்பம்
2 . சேதம் அடைந்த வீடு, விண்ணப்பதாரரின் ஒரே வீடாகயிருத்தல்.
3. வீடு அமைக்கப்பட்டிருக்கும் நிலம், விண்ணப்பதாரரின் சொத்தாகயிருத்தல்.
சமர்ப்பிக்கும் முறைகள்
கிராம சேவகரை பார்வையிடுதல் ரூ விண்ணப்பப்படிவத்தை பெறுதல்
• விண்ணப்பதாரர், சேதம் அடைந்ததற்குரிய
பரப்பைக் குறிப்பிட்டு ஒரு வேண்டுகோள்
கடிதத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல்
வேண்டும்.
•கிராம சேவகர் வெளியிட்ட “S.S/D 16”ஐ, விண்ணப்பதாரர் பெறுதல் வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
•சேதம் அடைந்ததற்குரிய பரப்பை குறிப்பிடும், ஒரு வேண்டுகோள் கடிதம்.
விண்ணப்பப்படிவத்தைச் சமர்ப்பித்தல்
• விண்ணப்பதாரர், கிராம சேவகரிடம் “ளு.ளுஃனு 16” படிவத்தை பூர்த்தி செய்தல் மற்றும் சமர்ப்பித்தல்.
• கிராம சேவகர், வேண்டுகோள் கடிதம் ரூ விண்ணப்ப படிவத்தை கோட்ட செயலகத்தாரிடம் ஒப்படைத்தல்.
வேண்டுகோள் கடிதம்
“S.S/D 16” படிவம்
விண்ணப்பப்படிவங்கள்
“வேண்டுகோள் கடிதம்” : சேதம் அடைந்ததற்குரிய பரப்பை தெரிவிப்பதற்கு
படிப்படியான வழிமுறைகள் (விளைவு நிவாரண நிதி / இயற்கைச் சீற்றம்)
படி 1 : விண்ணப்பதாரர் ஒரு வேண்டுகோள் கடிதத்தை கிராம சேவகரிடம் சமர்பித்தல் வேண்டும்.
குறிப்பு: கோட்ட செயலக அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் பொதுமக்களுக்கு சம்மந்தப்பட்ட காலத்திற்குள்ளாக முடிந்தவரையில் பங்கீடு வழங்கும்.
படி 2 : விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து கிராம சேவகத்தாரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
படி 3 : விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கு, கிராம சேவகர் விண்ணப்பத்தை சமூக சேவை அலுவலரிடம் (கோட்ட செயலக அலுவலகம்) ஒப்படைத்தல் வேண்டும்.
படி 4 : சமூக சேவை அலுவலர் விண்ணப்பதாரரின் வேண்டுகோளைச் சரிப்பார்ப்;பார்.
படி 5 : அஞ்சல் மூலம் கோட்ட வெயலக அலுவலகம் தகவலை தெரிவித்த பின், விண்ணப்பதாரர் கோட்ட செயலகத்திலிருந்து நிதியை வசூலித்துக் கொள்ளலாம்.
காலக்கோடு
செயல்முறைக் காலக்கோடு
ஒப்புதல் வேண்டுக்கோளுக்காக ஒரு மாதம்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நேரத்திற்குள்
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
குறிப்பிடப்படவில்லை.
வேலை நேரம் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம்(நிறுவனப் பகுதி): மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
கிராம சேவகர் அலுவலகம் : மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
திங்கட்கிழமை
மு.ப 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
இந்த சேவைககு கட்டணங்கள் ஏதும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• சேதத்திற்கான காரணங்களை வேண்டுகோள் கடிதத்தின் மூலம் குறிப்பிடுதல்.
சிறப்பு வகையறைகள்
இயற்கைச் சீற்றத்தினால் வாழ்க்கையை இழந்தவர்கள் (வெள்ளம், புயல், மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்) உடனடியாக அது சம்பந்த்ப்பட்ட கிராம சேவகரிடம் தெரியப்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஈமச்சடஙபிற்கான நிதி சலுகையை கோட்ட செயலக அலுவலகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அமைப்பு பற்றிய தகவல்பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
தொலைபேசி:011-2437247 தொலைநகல் இலக்கங்கள்:011-2325512 மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk இணையத்தளம்: www.colombo.ds.gov.lk
|