மரங்களை வெட்டுவதற்க்கான அனுமதி வழங்குதல்
கட்டுபாட்டில் உள்ள ஜெக், கன்டில் மற்றும் பெண் பல்மைரா போன்ற மரங்களை வெட்ட எந்த ஒரு நபரும் கண்டிப்பாக அனுமதி பெறவேண்டும்.
கட்டுபாட்டில் உள்ள மரங்களில் இரண்டு அல்லது அதற்க்கு குறைவான மரங்களை வெட்டுவதற்க்கு கோட்ட செயலகத்திடம் அனுமதி பெறவேண்டும்.
கட்டுபாட்டில் உள்ள மரங்களில் இரண்டிற்க்கு மேல் மரங்களை வெட்டுவதற்க்கு கோட்ட செயலகத்திடம் அனுமதி பெறவேண்டும்.
தகுதி
ஜெக், கன்டில் மற்றும் பெண் பல்மைரா போன்ற மரங்களை வெட்டுவதற்க்கு கீழ்;காணும் காரணங்;கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
• நிதிமன்றத் தீர்ப்பின் ஆணையின் போது
• அரசு ஈடுபடும் விரிவாக்க திட்டத்திற்க்காக மரங்களை அப்புறப்படுத்தும் போது. (உதாரணம். தேசிய நெடுஞ்சாலையை உருவாக்குதல் மற்றும் அகலபடுத்துதலின் போதும், மின்சார சாதனங்கள் நிறுவுதலின் போதும்)
• வீடுகட்டும் திட்டத்தில் மரங்கள் இடையூறு செய்யும் போது.
• இயற்கை சீற்றத்தினால் கீழே விழுந்த மரங்கள்
• உயிர் மற்றும் சொத்துகளை சேதமடைய செய்யும் மரங்கள்.
சமர்பிக்கும் முறைகள்
விண்ணப்பபடிவம் பெறுதல்
• கிராம சேவகரிடம் இருந்து விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவம் பெறவேண்டும்.
• அனைத்து விதிமுறைகளின் படி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• கிராம சேவகரின் அறிக்கை
• நிலத்திற்க்கான பத்திரம்
• நிலத்திற்க்கான திட்டம்
• வீட்டிற்கு அல்லது மற்ற கட்டிடத்திற்க்கான திட்டம்
• கூட்டு உரிமை நிலமாக இருந்தால், கிராம சேவகரால் சான்றளிக்கப்பட்ட மற்ற உரிமையாளர்களின் எழுத்து வாக்குமூலம்.
• நீதிமன்ற ஆணை இருந்தால், அந்த ஆணையின் எழுத்துமூலம்.
கோட்ட சபாவின் ஆணை இருந்தால், அந்த ஆணையின் எழுத்துமூலம்
விண்ணப்பபடிவம் ஒப்படைத்தல்
• பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பபடிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு விண்ணப்பபடிவத்தை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் கிராம சேவகர் ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பு
• நிலத்தின் உரிமையை நிரூபிப்பதற்கு தேவையான பத்திரம் மற்றும் நிலத்திற்க்கான திட்டம்
• மரத்தினால் கட்டிடங்கள் / வீடுகள் சேதமடைந்திருந்தால் அதை நிரூபிப்பதற்கு தேவைப்படும் திட்ட ஆவணங்கள்.
விண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர் |
விபரம் |
ஜெக், கன்டில் மற்றும் பல்மைரா மரங்களை வெட்டுவதற்க்கான விண்ணப்பம். |
|
கட்டுபாடிற்குள் உள்ள மரங்களை வெட்டுவதற்க்கான அனுமதி பெறுதல் (ஜெக், கன்டில் மற்றும் பல்மைரா மரங்கள்) |
படிப்படியான வழிமுறைகள் (மரம் வெட்டுவதற்கான அனுமதியை வழங்குதல்)
படி 1: விண்ணப்பதாரர், சம்மந்தப்பட்ட கிராம சேவகரிடமிருந்து விண்ணப்படிவத்தைப் பெறுதல் வேண்டும்.
படி 2: விண்ணப்பதாரர், பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல்.
படி 3: கிராம சேவகர் அறிக்கையை தயாரித்தல் மற்றும் விண்ணப்படிவத்தை அதனுடன் இணைத்தல்.
படி 4: கிராம சேவகர், விண்ணப்படிவத்துடன் தேவையான ஆவணங்களையும் சேர்த்து சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்தில் ஒப்படைத்தல்.
படி 5: சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் கோட்டச் செயலாளர் அல்லது துணை கோட்ட செயலாளர், விண்ணப்பதாரர் வழங்கிய தகவல்களை சரிபார்பதற்காக நேரடியாக இடத்தை பார்வையிடும்.
படி 6: சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் கோட்டச் செயலாளர் அல்லது துணை கோட்ட செயலாளர், விண்ணப்பத்தை அங்கீகரித்தல், அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் வழங்குதல்.
படி 7: விண்ணப்பதாரர் கிராம சேவகரிடமிருந்து அனுமதி;யை பெற வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பதாரர், நேரடியாக கோட்ட செயலகத்திடமிருந்து அனுமதியை பெற முடியாது.
காலக் கோடு
செயல்முறைக் காலக்கோடு
கோட்ட செயலகம் அனுமதி வழங்குதல் : 2 வாரங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
பொறுந்தாது
குறிப்பு: விண்ணப்படிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலக்கோடு
14 நாட்கள்
வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு): மு.ப 9.00 – பி.ப. 4.30
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
சேவைத் தொடர்பான செலவீனங்கள்
கட்டணமின்றி இலவசமாக
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• கிராம சேவகர் அறிக்கை
• நிலத்தினுடைய பத்திரம்
• நிலத்தின் வரைபடம்
• வீடு மற்றும் பிற கட்டிடங்களின் வரைபடம்
• நிலமானது கூட்டாக உரிமை கொள்ளப்பட்டிருந்தால், கிராம சேவகரால் சான்றழிக்கப்பட்ட பிறகூட்டு உரிமையாளர்களின் எழுத்துப்பூர்வ அனுமதி.
• நீதிமன்ற ஆணை இருந்தால் அந்த எழுத்துவடிவ ஆணை.
• பிரதேசிய சபாவின் ஆணை இருந்தால், அந்த எழுத்துவடிவ ஆணை.
குறிப்பு
• நிலத்தின் உரிமையை நிரூபிப்பதற்கு, நிலத்தின் பத்திரம் மற்றும் வரைபடம் தேவைப்படுகிறது.
• மரத்தால்தான் சேதமடைந்தது என நிரூபிப்பதற்கு, கட்டிடம்/வீட்டின் வரைபடம் தேவைப்படுகிறது.
அமைப்பு பற்றிய தகவல்பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
தொலைபேசி:011-2437247 தொலைநகல் இலக்கங்கள்:011-2325512 மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk இணையத்தளம்: www.colombo.ds.gov.lk
|