FCRDC- மற் பரிசோதனை சேவை |
|
|||
சேவை வழங்கப்படுபவர்கள் சகல விவசாயிகள், மற்றும் இச் சேவையில் ஆர்வமுடையவர்கள்
முறையிடும் முறை அவர்களின் பிரதேசத்திலுள்ள மாகாண விவசாயத் திணைக்களம் அல்லது இடை மாகாண விரிவாக்கல் சேவையில் உள்ள விவசாயப் போதனாசிரியரிடம் கோரவும்.
வேண்டுகோளின் பின்னரான நடவடுக்கைகள் விவசாய போதனாசிரியரால் வயற் மேற்பார்வை மேற்கொள்ளப்படும்.
மண் மாதிரி சேகரிப்பு வயல் விவசாய போதனாசிரியரால் (விவசாய போதனாசிரியருக்கு மண் மாதிரியை பெற்றுக் கொள்ளல் தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது.)
சேவைக்கான கட்டணம் ஒரு மாதிரிக்கான கட்டணம் 200/= ரூபாய். கட்டணம் விவசாய பணிப்பாளர் நாயகத்தின் பெயரிற்கான காசோலை அல்லது காசுக்கட்டளை மூலம் வழங்கப்பட வேண்டும். தபால் நிலையத்தில் அல்லது வங்கியில் இதனைச் செலுத்தலாம்.
தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வழங்கப்பட்ட விஷேடமான பத்திரத்தில் விவசாயிகளிடமிருந்து தேவையான தகவல்களை விவசாய போதனாசிரியர் பெற்றுக்கொள்வார். மண் மாதிரிக்கு பெயர் சுட்டியிடப்படும்.
மண் மாதிரியை பரிசோதனைக்காக சமர்ப்பித்தல். நிறுவனத்தின் பணிப்பாளர்/பிரதிப் பணிப்பாளரிளூடாக விவசாய போதனாசிரியர் மண் மாதிரியை ஆய்வு கூடத்திற்கு சமர்ப்பிப்பார். ஆய்வுகூடத்தில் மண் மாதிரி பரிசோதனைக்காக தயார்படுத்தப்பட்டு பின்வரும் மண்ணின் பண்புகள் பரிசோதிக்கப்படும்.
pH, மின் கடத்துதிறன் (EC) கிடைக்கக்கூடிய பொசுபரசின் அளவு, மாற்றீடு செய்யக்கூடிய பொட்டாசியத்தின் அளவு, சேதனப் பொருள் அளவு, கட்டமைப்பும் நுண் போஷணை அளவும்.
அறிக்கையில் அடங்குபவை:- மண் பரிசோதனை அறிக்கை, மண் பரிசோதனைக்கு ஏற்ப பசளை சிபாரிசு அறிக்கையுடன் மண் வள முகாமைத்துவம் தொடர்பான தேவையான விபரங்கள்.
அறிக்கையை வழங்க எடுக்கும் காலம். ஆய்வு கூடத்திற்கு மண் மாதிரி கிடைக்கப்பெற்று 3-4 கிழமைகளில்.
சேவையை வழங்க பொறுப்பான உத்தியோகத்தர் மண் பசளை அலகின் ஆராய்ச்சி உத்தியோகத்தர், FCRDI, மகா இலுப்பல்லம. தொலைபேசி 0252249132 மின்னஞ்சல் – fieldcropsmi@yahoo.com
அறிக்கையை சமர்ப்பித்தல் அறிக்கையானது தபால்மூலம் விவசாயியிற்கும் AI இற்கும் அனுப்பப்படும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:59:53 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |