Required Forms application | ||||
பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல். |
|
|||
1.பிறப்புச் சான்றிதழின் பிரதியினைபெற்றுக்கொள்ள முடிவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
2.தேவையான விண்ணப்பப்படிவம் எந்தவொரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
3.அறவிடப்படும் கட்டணங்கள்,
I.பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியுமாயின் ரூபா.100.00
II.பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியாவிடின்,
• 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 100.00
• 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 200.00
4.தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
5.பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
6.பிறப்புச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
7.பிறப்பு பதியப்பட்டிருந்தால், பிறப்புச் சான்றிதழின் பிரதி அனுப்பப்படுவதுடன் பிறப்பு பதியப்படாதிருந்தால் அது பற்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்படும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:25:59 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |