Required Forms விண்ணப்பபடிவம் திருமணசான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம் | ||||
திருமணசான்றிதழை மொழிமாற்றம் செய்தல் |
|
|||
படிப்படியான வழிமுறைகள்: படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்) படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல் படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும். படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல். தகுதி: உண்மையான திருமணசான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர். சமர்ப்பிக்கும் முறைகள்: அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவம்: விண்ணப்பபடிவம் திருமணசான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம். காலக்கேடு: செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு: வேலை நாட்கள் – திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை விடுமுறை நாட்கள்– அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும். சேவைத் தொடர்பான கட்டணங்கள்: விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல். கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00 அபராதம்:அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை. இதரக்கட்டணம்:இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை. தேவையான இணைப்பு ஆவணங்கள்: உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய திருமணசான்றிதழ் சேவைக்கான பொறுப்புக் குழு: மொழிப்பெயர்ப்பாளர் சிறப்பு வரையறைகள்: இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:27:03 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |