The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் கப்பல் ஏற்றுமதி பகுதி உரிமம் பெறுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     விண்ணப்பப்படிவம்
கப்பல் ஏற்றுமதி பகுதி உரிமம் பெறுதல்

PDF Print Email

தகுதி

•    வியாபார ஸ்தாபனம் பதிவுச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
•    கீழேக் கூறப்பட்டுள்ள குழுமத்திடமிருந்து பெற்ற விசைவு.

இறக்குமதியின் வகை    சம்பந்தப்பட்ட குழுமம்
மேற்கத்திய நாடுகளின் மருந்துகள்  அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் குழுமம் (சுகாதார அமைச்சகம்) வழங்கப்பட்டப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும்.
ஹோமியோபதி மருந்துகள்  இலங்கை ஹோமியோபதி அமைப்பினால் வழங்கப்பட்டப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும்.
கால்நடை மருந்துகள்   பெரடீனியாவிலுள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் வழங்கப்பட்டப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும்.
 ஆயுர்வேத மருந்துகள் ஆயுர்வேதத் திணைக்களத்தால் வழங்கப்பட்டப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும்.
அறுவைச் சிகிச்சைகளின் போது பயன்படும் இணைப்புக் கருவிகள்  அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் குழுமத்தால் (சுகாதார அமைச்சகம்), (கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்) வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும்.



குறிப்பு:

விண்ணப்பதாரர் உரிம நிபந்தனைகளுக்கு கீழ்ப்படியாதப் பட்சத்தில், அவருடையப் பகுதி கப்பல் சரக்கு உரிமம் அபராதத்துடன் வழங்கப்படும்

சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பப்படிவம் பெறுதல்
கருமபீடம் – பகுதி 01

பணம் செலுத்துதல்

கருமபீடம் – காசாளர்

விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்-----கருமபீடம் – பகுதி 01

விண்ணப்பப்படிவங்கள்

சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவின் மாதிரிப் படிவம்

தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    இடாப்பின்  4 பிரதிகள்
•    பூர்த்திச் செய்யப்பட்ட சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவத்தின் 4 பிரதிகள்
•    வியாபார பதிவுச் சான்றிதழின் உண்மை பிரதி மற்றும் நிழற்படப் பிரதிகள்
•    பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தின் உண்மைப் பிரதி மற்றும் நிழற்படப் பிரதிகள்.




படிப்படியான வழிமுறைகள்:

படி 1:
பகுதி 01ல் (மருந்து) உள்ள தலைமை எழுத்தரிடமிருந்து விண்ணப்பதாரர் சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவத்தைப் பெற வேண்டும்.

படி 2:
விண்ணப்பதாரர் பூர்த்திச் செய்யப்பட்டச் சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவத்தின் 4 பிரதிகள், இடாப்பின் 4 பிரதிகளையும் இணைப்பு ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

படி 3:
பகுதி 01ல் சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களைச் சரிப்பார்க்கவும்.

படி 4:
ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்காக உரிம வேண்டுகோள் அனுப்பப்படும்.

படி 5:
துணைக் கட்டுப்பாட்டாளர் உரிம வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் விண்ணப்பதாரர் சரக்குப் பட்டியலின் மதிப்பில் 0.1% உரிமக் கட்டணமாகச் செலுத்துதல்

படி 6:
பகுதி 01 கணிப்பொறி மூலம் உரிமத்தைத் தயாரித்தல் மற்றும் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்தல்.

படி 7:
துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுக்கோளுக்கு ஒப்புதல் அளித்தல்

படி 8

உரிமத்தின் 3 பிரதிகள் ஏற்றுமதியாளர் மற்றும்  வங்கிக்கும் ஒரு பிரதி  திணைக்களத்தினரால் வைத்துக் கொள்ளப்படும்

குறிப்பு:

சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் சரியானதாக இல்லாதப் பட்சத்தில் வேண்டுகோள் நிராகரிக்கப்படும்.
காலக்கோடு


செயல்முறை காலக்கோடு

ஒரு நாளுக்குள்ளாக.

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

விண்ணப்பப்படிவம் பெறுதல்

கருமப்பீடம் – பகுதி 01
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வரை
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

பணம் செலுத்துதல்

கருமப்பீடம் – காசாளர்
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 3.30 வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்

கருமப்பீடம் – பகுதி 01
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலக்கோடு

இந்தப் பொருட்களுக்கான ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலம் 6 மாதங்கள் ஆகும்.


சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவினம்:

விண்ணப்பப்படிவம் பெறுவதற்கு எந்த செலவினமும் இல்லை.

கட்டணம்:

உரிமக்கட்டணம் – இடாப்பு  மதிப்பில் 0.1%

அபராதங்கள்:

விண்ணப்பத்தாரர் உரிமம் இல்லாமல் சரக்குகளை இறக்குமதி செய்திருந்தால், இறக்குமதி மதிப்பிலிருந்து அபராதமாக செலுத்த வேண்டிய சதவிகிதத்தை துணைக் கட்டுப்பாட்டாளர் முடிவெடுப்பார்.

இதரக் கட்டணம்:

இதரக் கட்டணமில்லை

சிறப்பு வகையறைகள்


உரிமம் இல்லாமல் இறக்குமதிச் செய்யும் பட்ச்சத்தில், பொருட்களைப் பெறும் உரிமம் அபராதத்துடன் வழங்கப்படும் பொருட்கள் பெறுவதற்கான உரிமத்தைப் பெறக் கீழ்க்காணும் ஆவணங்கள் தேவைப்படுகிறது.

•    சுங்கவரி ஆவணங்கள்
•    விளக்கக் கடிதம்
•    சம்பந்தப்பட்டக் குழுமத்திடமிருந்துப் பெறப்பட்ட ஒப்புதல் கடிதம்
•    பற்றுச்சீட்டு
 


அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01


திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:12:02
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty