இலங்கை முதலீட்டுச்சபையின் அங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்கள் தொடர்பில் செயலாற்றுகை விபரங்களை ( புள்ளிவிபரங்கள்) வழங்குதல்,
2.8.1 தகுதிகள் :
அரசாங்க நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பொது மக்கள், இலங்கை முதலீட்டுச்சபையின் தலைவர் / பணிப்பாளர் நாயகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்..
தற்போது பரிமாரிக்கொள்ளக்கூடிய தகவல்கள் இரண்டு வகையாக கிடைக்கின்றது. குறிப்பாக, பின்வருமாறு, ‘’ பிரசுரிக்கப்பட்ட தரவுகள் ‘’ மற்றும் ‘’ பிரசுரிக்கப்படாத தரவுகள் ’’ என அவற்றை காணலாம்.
1. பிரசுரிக்கப்பட்ட தரவுகள்
1.1 இலங்கை முதலீட்டுச்சபையின் ஆய்வு மற்றும்கொள்கை விளக்க திணைக்களத்தின், நூலகத்தில், பிரசுரிக்கப்பட்ட பின்வரும் தகவல்கள் கிடைக்கக்கூடியதாய் உள்ளது.
1. பிரித்தெடுத்த புள்ளிவிபர தொகுதி (1978ம் ஆண்டில் இருந்து அன்மித்த நிதி ஆண்டுவரையிலான தகவல்கள்)
2. வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
3. அரையாண்டு செயலாற்றுகை அறிக்கை
4. காலாண்டு செயலாற்றுகை அறிக்கை
5. மாதாந்த செயலாற்றுகை அறிக்கை
1.2 “இலங்கை முதலீட்டுச்சபையின் www.investsrilanka.com. இணையத்தளத்திலும் ” பிரசுரிக்கப்பட்ட அறிக்கைளை அறியக்கூடியதாய் இருக்கும்.
2. பிரசுரிக்கப்படாத தரவுகள்
பிரசுரிக்கப்படாத தரவுகளை, இலங்கை முதலீட்டுச்சபையின், ஆராய்ச்சி மற்றும் கொள்கை விளக்க திணைக்களத்தின், புள்ளிவிபர பகுதியில் கோரிக்கை விடுத்து தலைவர் / பொது பணிப்பாளரின் அங்கீகாரத்துடன் பெற்றுக்கொள்ள முடியும்.
தலைவர் / பொது பணிப்பாளரின் அங்கீகாரத்துடன் மாத்திரமே உணர்வு பூர்வமான தன்மையை கொண்ட புள்ளி விபரங்களை வெளிப்படுத்த முடியும்.
2.8.2 விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
2.8.2.1 விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-
இதற்கென, விசேட விண்ணப்பப்படிவங்கள் கிடையாது
நிறுவனமொன்றின் கடித தலைப்பில், அதன் அதிகாரமளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவரினால், கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமான வேண்டுகோளை இலங்கை முதலீட்டுச்சபையின் தலைவர் / பணிப்பாளர் நாயகத்திற்கு நேரடியாக ‘’கையாளிக்கலாம்’’ அல்லது ‘’மின்னஞ்சல், சாதாரண தபால்’’ மூலமாகவும் அனுப்பலாம்.
2.8.2.2 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு,ரிய கட்டணம்:-
இல்லை
2.8.2.3 சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-
மு.ப 9.00 – பி.ப 4.00 வரை அரசாங்க கடமை நாட்களில் பின்வரும் முகவரியில் புள்ளிவிபரங்களைபெற்றுக்கொள்ளலாம்.
“நூலகம்” அல்லது “புள்ளி விபரப் பிரிவு / பகுதி”,
ஆராய்ச்சி மற்றும் கொள்கை எடுத்துரைப்பு திணைக்களம்,
இலங்கை முதலீட்டு சபை இலங்கை,
மட்டம் 19, மேற்கு கோபுரம், உலக வர்த்தக நிலையம்,
எச்லென் சதுக்கம்,
கொழும்பு 01, இலங்கை.
2.8.2.4 சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணங்கள்:-
• அரசாங்கம் நிறுவனங்களுக்கும், பிரசித்திபெற்ற சர்வதேச நிறுவனங்களுக்கும் (உ-ம். UN, UNCTAD, WIPA, முதலியன) மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கும் கட்டணம் அறவிடப்படமாட்டாது
• திணைக்களத்தின், தலைவரினால் வழங்கப்பட்ட சிபாரிசு கடிதத்தினை சமர்ப்பித்து பல்கலைக்கழக மாணவர்கள் 75% விலைக்கழிவுடன் அனுமதிக்கப்படுவர்.
• ஏனைய சகலருக்கும் பின்வருமாறு கட்டணம் அறவிடப்படும்.
அ) விபரமான முதலீட்டு புள்ளி விபரங்கள்
‘’ மாற்றங்களின் எண்ணிக்கை’’ மற்றும் பக்கங்களின் எண்ணிக்கை முதலியவற்றின் அடிப்படையில் கிரயம் சீர்செய்யப்படும்.
பின்வருவனவற்றை இந்த மாற்றங்கள் உள்ளடக்கும்;
• கருத்திட்டத்தின் பெயர்
• இணைந்து செயல்படும் நாடு / நாடுகள்
• உற்பத்தி வகை
• தொடர்பு கொள்ளக்கூடிய தகவல்கள் : தொடர்புகொள்ளக்கூடியவர், முகவரி, தொலைபேசி இலக்கம், தொலை நகல், மின்னஞ்சல் முகவரி, முதலியன
• உரிய பகுதியின் விபரங்கள் : முகவரி, தொலைபேசி இல.., முதலியன
• கருத்திட்ட தராதரம்
கட்டணம் : ரூ. 25.00, ஒரு மாற்றத்திற்கு + ரூ. 25.00, ஒரு பக்கத்திற்கு + பெ.சே.வரி ( VAT)
ஆ) சுருக்க அட்டவணை / வரைபு முதலியன
கட்டணம் : ரூ.100.00, ஒரு அட்டவணைக்கு + ரூ. 25.00, ஒரு பக்கத்திற்கு + பெ.சே.வரி ( VAT)
தேவையான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்ததும், பின்வரும் முகவரியில் ஏற்றக்கட்டணத்தை செலுத்துதல் வேண்டும்.
நிதி திணைக்களம்,
இலங்கை முதலீட்டு சபை,
மட்டம் 08, மேற்கு கோபுரம், உலக வர்த்தக நிலையம்,
எச்லென் சதுக்கம், கொழும்பு 01, இலங்கை.
2.8.3 சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம் (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )
புள்ளிவிபரங்களை விடுவிப்பதற்கு தேவைப்படும் காலம் பின்வருமாறு அமையும்.
1. பிரசுரிக்கப்பட்ட தரவுகள் : 24 மணித்தியாலங்களுக்குள்
2. பிரசுரிக்கப்படாத தரவுகள் : 2 – 15 தினங்கள்
(கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள தரவுகளின் வகை, தன்மை, உணர்ச்சிகரமான போக்கு என்பனவற்றின் அடிப்படையில் அமையும்)
2.8.4 உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-
1. நிறுவனமொன்றின் கடித தலைப்பில், அதன் அதிகாரமளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவரினால், கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமான வேண்டுகோளை இலங்கை முதலீட்டுச்சபையின் தலைவர் / பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரி இட்டு அனுப்புதல்.
2. இலங்கை முதலீட்டுச்சபையின் நிதி திணைக்களத்தில் கட்டணம் செலுத்தியதற்காகப் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டினை, தேவையான தகவல்களை சேகரிக்க வரும் போது, சமர்ப்பித்தல் வேண்டும்.
2.8.5 பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலை நகல் மின்னஞ்சல்
நிறைவேற்று பணிப்பாளர். (ஆராய்ச்சி) கலாநிதி. I. N. சமரப்புளி ஆராய்ச்சி மற்றும் கொள்கை எடுத்துரைப்பு திணைக்களம்* +94-11- 2437137 +94-11- 2543406 nihals@boi.lk
பணிப்பாளர். (ஆராய்ச்சி) திருமதி. C. P. மலல்கொட ஆராய்ச்சி மற்றும் கொள்கை எடுத்துரைப்பு திணைக்களம் +94-11- 2543406 +94-11- 2543406 champikam@boi.lk
கடமை நிறைவேற்று உதவி பணிப்பாளர். (ஆராய்ச்சி) திருமதி. G. H. பலகெட்டிய புள்ளி விபரப் பிரிவு / பகுதி,
ஆராய்ச்சி மற்றும் கொள்கை எடுத்துரைப்பு திணைக்களம்* +94-11- 2427391 +94-11- 2543406 hiroship@boi.lk
முகாமைத்துவ உதவி திருமதி. B. K. ஜெயவதி நூலகம்,
ஆராய்ச்சி மற்றும் கொள்கை எடுத்துரைப்பு திணைக்களம்* +94-11-
2427394,
+94-11- 2346162 +94-11- 2543406 library@boi.lk
jayawathieb@boi.lk
* ஆராய்ச்சி மற்றும் கொள்கை எடுத்துரைப்பு திணைக்களம்,
இலங்கை முதலீட்டு சபை,
மட்டம் 19, மேற்கு கோபுரம், உலக வர்த்தக நிலையம்,
எச்லென் சதுக்கம்,
கொழும்பு 01, இலங்கை.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை முதலீட்டுச் சபை
தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை. பீ. ஏ. பெரேரா தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105 மின்னஞ்சல்:info@boi.lk இணையத்தளம்: www.investsrilanka.com
|