படி 1: “M.T.A.30” இல் இருந்து விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை பெறுதல்:
மாவட்ட செயலக அலுவலகம் (பொது சேவை)
கொழும்பில் உள்ள முக்கிய அலுவலகம் – (முன்னுரிமை சேவை)
படி 2: விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் அதற்குரிய ஆவணங்களையும் சேர்த்து துணை ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட செயலக அலுவலகம் (பொது சேவை)
விரகராவில் உள்ள முக்கிய அலுவலகம் – கொழும்பு (முன்னுரிமை சேவை)
படி 3: விண்ணப்பதாரர் திணைக்களத்திடமிருந்து அழைக்கப்பட்டு எழுத்து தேர்வுக்கு அமர்த்தப்படுகிறார்.
படி 4: விண்ணப்பதாரர் திணைக்களத்திடமிருந்து அழைக்கப்பட்டு செயல்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார். தேர்வில் தேர்ச்சி பெற்ற முடிவுகள் ஆறுமாதத்திற்கு செல்லுபடியாகும்.
படி 5: ஆறுமாதத்திற்குள் திணைக்களம் தற்காலிகமான உரிமத்தை வெளியிட வேண்டும். (செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.)
படி 6: திணைக்களம் உரிமத்தை வெளியிடுகிறது (உரிமம் விண்ணப்பதாரருக்கு தபால்மூலமாக அனுப்பப்படும்.)
குறிப்பு:
விண்ணப்பதாரர் எழுத்து தேர்வில் சித்திடையவிட்டால:
விண்ணப்பதாரர் மூன்று முறை வரை ரூ100.00 செலுத்தவதன் மூலம் எழுத்து தேர்வுக்கு மறுமுறை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் செயல்முறை தேர்வில் சித்திடையவிட்டால்:
விண்ணப்பதாரர் மூன்று முறை வரை முழு தொகையையும் செலத்துவதன் மூலம் செயல்முறை தேர்வுக்கு மறுமுறை விண்ணப்பிக்கலாம்.
தயவுசெய்து “சிறப்பு வகையறைகள்” பிரிவை சரிபார்க்க.
தகுதி:
இலங்கையில் நிரந்தரமாக குடியிருக்கும் எந்த விண்ணப்பதாரரும் இச்சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.
இச்சேவைக்கான நிபந்தனைகள் பின்வருமாறு:
விண்ணப்பதாரர் இலங்கையைச் சார்ந்த குடிமகனாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் செயல் முறைத் தேர்வுகள் எழுதியிருத்தல்வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் செயல்முறைத் தேர்வுகளுக்கான அடையாள சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
மேலேக் குறிப்பிட்ட இரு தேர்வுகளிலும் தேர்ச்சிப் பெறுதல் வேண்டும்.
இந்த செயல் முறைக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் இத்துடன் வழங்கப்பட வேண்டும் (தயவுசெய்து இதை “தேவையான ஆவணங்களின்” பிரிவில் சரிபார்க்கவும்).
விண்ணப்பமானது செயல்முறை தேர்வுக்குப் பின் ஆறு மாதக் காலக்கட்டத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு:
விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை உட்படவில்லையெனில் இச்சேவையைப் பெறுவதற்கு தகுதியற்றவர் என்று கருதப்படுவார்.
சமர்பிக்கும் வழிமுறைகள்:
அனைத்து விண்ணப்பங்களும் உரிமப் பிரிவு துணை ஆணையாளருக்கு அனுப்ப வேண்டும்.
துணை ஆணையாளர் – உரிமம் பிரிவு,
மோட்டார் போக்குவரத்து திணைக்களம்,
தபால் பெட்டி இலக்கம். 533, 581-341, எல்விட்டிகல மாவத்த.
கொழும்பு 5.
குறிப்பு1:
விண்ணப்பதாரர் உரிமம் பெறுவதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது:
அனைத்து மாவட்ட செயலகங்கள் (சாதாரணச் சேவை)
வீரகேராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (முன்னுரிமைச் சேவை)
குறிப்பு 2:
தயவுசெய்து “சமர்ப்பிக்கும் காலக்கோடு” பிரிவில் சரிபார்த்துக் கொள்ளவும்.
தயவுசெய்து “இணைப்பு ஆவணங்கள்” பிரிவில் சரிபார்த்துக் கொள்ளவும்.
விண்ணப்பப்படிவம்:
படிவம் “M.T.A. 30” மோட்டார் வாகனம் ஓட்டுனர் உரிமத்திற்கான விண்ணப்பம்.
காலக்கெடு:
செயல்முறை காலக்கெடு:
முன்னுரிமை சேவைக்கு விண்ணப்பித்தல்: உரிமத்தை ஒரு வாரத்திற்கு வெளியீடுதல்
பொது சேவைக்கு விண்ணப்பித்தல் : இரண்டு வாரத்திலிருந்து மூன்று மாதத்திற்குள் உரிமத்தை வெளியீடுதல்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு:
விண்ணப்பபடிவத்தை பெறுதல் மற்றும் சமர்ப்பித்தல்:
வேலை நாட்கள் : திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: 9:30 மு.ப முதல் 3:30 பி.ப வரை (பொது)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: 9:30 மு.ப முதல் 12:30 பி.ப வரை (முன்னுரிமை)
விடுமுறை நாட்கள் : அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கெடு:
ஆறு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்குரிய செயல்முறை தேர்வு நிறைவு பெற்றால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விண்ணப்பம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளுதல்:
விண்ணப்பபடிவத்துக்கு இலவச கட்டணத்தை பெறுதல்.
கட்டணம்:
சேவைகளின் வகை |
முதற்கரமான சேவை |
இரண்டாம் தரமான சேவை |
மூன்றாம் தரமான சேவை |
பொது சேவை |
ரூ.620.00 |
ரூ.1020.00 |
ரூ.1120.00 |
முன்னுரிமை சேவை |
ரூ.1020.00 |
ரூ.1770.00 |
ரூ.1870.00 |
அபராதம்:
உரிமம் வெளியிடப்படும் செயல்பாட்டுக்கு அபராதம் தேவை இல்லை.
இதர கட்டணம்:
எழுத்து தேர்வில் தோல்வி அடைந்தால் விண்ணப்பதாரர் மறுவிண்ணப்பத்துக்கு கட்டாயமாக ரூ.100.00 ஐ செலுத்த வேண்டும் (மூன்று மறு விண்ணப்பத்துக்கு மட்டும்.)
செயல்முறை தேர்வில் தோல்வி அடைந்தால் விண்ணப்பதாரர் மறுவிண்ணப்பத்துக்கு முழு தொகையையும் செலுத்த வேண்டும். (மூன்று மறு விண்ணப்பத்துக்கு மட்டும்.)
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
இலகு ரக வாகனங்களுக்கான:
அசல் மற்றும் பிறந்த சான்றிதழின் நிழற்பட பிரதிகள்
தேசிய அடையாள அட்டை-அசல் மற்றும் கடவுச்சீட்டின் நிழற்பட பிரதிகள் NIC இன் இலக்கம்
"2*2" அளவிலான கறுப்புவெள்ளை புகைப்படத்தின் மூன்று பிரதிகள்
மருத்துவ சான்றிதழ் MBBS பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரியிடம் இருந்து மருத்துவ சான்றிதழை பெறுதல்
கனமான வாகனங்களுக்கான:
அசல் மற்றும் பிறந்த சான்றிதழின் நிர்ற்பட பிரதிகள்.
தேசிய அடையாள அட்டை-அசல் மற்றும் கடவுச்சீட்டின் நிர்ற்பட பிரதிகள் NIC இன் இலக்கம்.
"2*2 "அளவிலான கறுப்புவெள்ளை புகைப்படத்தின் மூன்று பிரதிகள்
C.T.B மருத்துவ அமைப்பு நுகேகொட அல்லது அந்த மாவட்டத்தில் வசிக்கும் விண்ணப்பதாரரின் மருத்துவ அலுவலகரின் மருத்துவ சான்றிதழை வெளியீடுதல்
ஓட்டுநர் பாடசாலையில் “A” நிலையில் உள்ள போட்டிக்காக வெளியிடும் சான்றிதழ்
சிறப்பு வகையறைகள்:
விண்ணப்பதாராருக்கு எழுத படிக்க தெரியவில்லையென்றால்:
அவன்/அவள் இருந்தாலும் எழுத்து தேர்வு எழுத மூன்று தடவை அமர்த்தப்படுவார்.
சான்றிதழ் கடதாசியை கிராமநில அதிகாரியிடம் இருந்து பெறுதல்.
எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படாதவர்கள் சொற்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்.
விண்ணப்பதாரர் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால்:
அவன் கனரகமான வாகனத்துக்குரிய உரிமத்தை பெற்றிருந்தால்:
விண்ணப்பதாரர் 14 நாட்களுக்குள் செயல்முறை தேர்வுக்கு மறுவிண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட இயலாது.
விண்ணப்பதாரரின் இலகுரக வாகனங்களுக்கான உரிமத்தை பெற்றிருந்தால்:
விண்ணப்பதாரர் 7 நாட்களுக்குள் செயல்முறை தேர்வுக்கு மறுவிண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட இயலாது.
அயல்நாட்டின் விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமத்தின் உரிமையாளராக இருந்தால் (விண்ணப்பதாரர் இலங்கையை சார்ந்தோ இலங்கையை சாரதவராக இருக்கலாம்.)அயல்நாட்டு உரிமம் மூலமாக அவன்/அவள் உரிமத்தை பெற எழுத்து அல்லது செயல்முறை தேர்வாக இருக்கலாம்.திணைக்களம் மோட்டார் வாகனத்தாரிடம் அந்த நாடு உரிமத்தை வெளியிட அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும்.உரிமம் ஆங்கிலத்தில் இல்லையென்றால் அதற்கு தகுந்த தூதுக் குழுவின் மூலம் ஆங்கில மொழிபெயர்ப்பு உரிமத்தை வெளியீடுதல்.புது உரிமம் பெற அந்த நேரத்துக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்தை பெறுதல்.
போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
"M.T.A.30 படிவம் ”
அமைப்பு பற்றிய தகவல்மோட்டார் வாகனத் திணைக்களம்
இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.
திரு. B. விஜயரத்னா தொலைபேசி:011-2698717 தொலைநகல் இலக்கங்கள்:011-2694338 மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk இணையத்தளம்: www.dmt.gov.lk
|