The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெறுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெறுதல்

PDF Print Email

படி 1: விண்ணப்பதாரர் “C.M.T. 35” விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்.
   மாவட்ட செயலக அலுவலகம் (சாதாரணச் சேவை)
   தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை – முன்னுரிமைப்படி)

படி 2: விண்ணப்பதாரர் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களோடு சேர்த்து உதவி ஆணையாளரிடம் சமர்பிக்க வேண்டும்.
   மாவட்ட செயலக அலுவலகம்(சாதாரண சேவை)
   தலைமை அலுவலகம் – கொழும்பு(ஒரு நாள் சேவை – முன்னுரிமைப்படி)

படி 3: திணைக்களத்தால் அழைக்கப்பட்ட பிறகு விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வு எழுத வேண்டும்.

படி 4: திணைக்களத்தால் அழைக்கப்பட்ட பிறகு விண்ணப்பதாரர் செயல்முறைத் தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சிப் பெற்ற மதிப்பெண்கள் 6 மாதத்திற்கு செல்லுப்படியாகும்.

படி 5: திணைக்களத்தால் தற்காலிக உரிமம் விநியோகம் செய்யப்படும். இது 6  மாதத்திற்கு செல்லுப்படியாகும் (செயல்முறைத் தேர்வு தேர்ச்சிப் பெற்ற உடன்).



குறிப்பு:
எழுத்து தேர்வில் தேர்ச்சியடையாத விண்ணப்பதாரர்:
விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வுக்கு ரூ100.00 செலுத்தி மூன்று முறை வரை விண்ணப்பிக்கலாம்.

செயல்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்கள்:
விண்ணப்பதாரர் செயல்முறைத் தேர்வுக்கு முழுத்தொகையையும் செலுத்தி மூன்று முறை வரை விண்ணப்பிக்கலாம்.

தயவுசெய்து “சிறப்பு வகையறைகள்” பிரிவை பார்க்கவும்.



தகுதி:
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் தற்காலிக ஓட்டுனர் உரிமம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படுகிறது.

நடப்பு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தலுக்கோ வேறு ஏதேனும் செயல்முறைக்கோ வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் கொடுக்கும் பொழுது தற்காலிக ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

இலங்கையில் சுற்றுலா நுழைவுரிமைச்சீட்டின் படி இரண்டு மாதங்களுக்கும் குறைவாக தங்கியிருக்க திட்டமிட்டிருக்கும் ஒருவருக்கு உரிமம் தேவைப்படும் போது தற்காலிக ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

லோரி மோட்டார் கோட்ச்சுகளுக்கு தற்காலிக உரிமம் வழங்குவது கீழ்க்காணும் நிபந்தனைகளின் படி வழங்கப்படும்.



சமர்ப்பிக்கும் முறைகள்:

அனைத்து விண்ணப்பங்களையும் ஓட்டுனர் உரிமப் பிரிவு அலுவலகத்திலுள்ள உதவி ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

துணை ஆணையாளர் – ஓட்டுனர் உரிமப்பிரிவு
வாகன போக்குவரத்து திணைக்களம்,
தபால் பெட்டி எண்  533, 581-341, எல்விட்டிகலா. மாவத்த
கொழும்பு 5.


குறிப்பு1:
விண்ணப்பதாரர் உரிமம் பெறுவதற்கு கீழ்க்கண்ட வசதிகள் மூலம் பெறலாம்:

அனைத்து மாவட்ட செயலகங்கள் (சாதாரண சேவை)
வீரகேராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு(முன்னுரிமை சேவை)



விண்ணப்பப்படிவம்:
விண்ணப்பப்படிவம் “C.M.T. 35” தற்காலிக ஓட்டுனர் உரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பம்.



காலக்கெடு:

செயல்முறைக் காலக்கெடு:
ஒரு நாள் சேவைக்கு (முன்னுரிமை) விண்ணப்பித்தால்: 3 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.
சாதாரண சேவைக்கு விண்ணப்பித்தால்                      : 2 வாரங்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.

சமர்ப்பிக்கும் காலக்கெடு:
விண்ணப்பப்படிவங்கள் பெறுதலும் சமர்ப்பித்தலும்:

வேலை நாட்கள்               :   திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்:  மு.ப 9.00 மணி முதல் பி.ப 3.30 மணி வரை (சாதாரணச் சேவை)

கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9.00 மணி முதல் பி.ப 12.30 மணி வரை (முன்னுரிமைச் சேவை)
விடுமுறை நாட்கள்            : எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்


குறிப்பு:
விண்ணப்பதாரர் தற்காலிக உரிமத்தை தான் சமர்ப்பித்த நாளிலே பி.ப 3.30 மணிக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம்.

செல்லுப்படியாகும் காலக்கெடு:
செயல்முறைத் தேர்வு முடிந்த 6 மாதக்காலத்தில் விண்ணப்பத்தை சமர்பித்திருந்தால் அந்த விண்ணப்பம் காலாவதியாகும்.



சேவைத் தொடர்பான கட்டணங்கள்:

விண்ணப்பம் பெறுவதற்கான கட்டணம்:
எந்தவொரு கட்டணமின்றி விண்ணப்பப்படிவம் கொடுக்கப்படுகிறது.

கட்டணம்:

உரிமம் பெறுவதற்கான கால அளவு கட்டணம்
குறைந்தது 1 மாதம்     ரூ. 600.00    
குறைந்தது 2 மாதம்    ரூ. 1200.00

 அபராதம்:
எந்தவொரு அபராதமும் உரிமம் பெறுவதற்கு வசூலிக்கப்படுவதில்லை

இதரக்கட்டணம்:

   •    விண்ணப்பதாரர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறாமல் மறு விண்ணப்பத்திற்கு விண்ணப்பித்தால் ரூ 100.00 செலுத்த வேண்டும். (மூன்று முறை மட்டுமே மறு விண்ணப்பம் செய்யலாம்.)

  •    விண்ணப்பதாரர் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெறாமல் மறுவிண்ணப்பத்திற்கு விண்ணப்பித்திருந்தால் அவர் முபுத்தொகையையும் கண்டிப்பாக செலுத்த வேண்டும். (மூன்று முறை மட்டுமே மறுவிண்ணப்பம் செய்யலாம்.)

தேவையான இணைப்பு ஆவணம்


   •    தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு

  •    அவர்கள் நாட்டின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் அங்கீகரித்து வழங்கப்பட்ட வெளிநாட்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் அதன் நிர்ற்பிரதி

உரிமம் ஆங்கிலத்தில் இல்லைடியனில் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுப் பெறப்பட்ட அனுமதிப் பத்திரம்.


   •    2*2 ½” அளவில் உள்ள கருப்பு வெள்ளை இரண்டு நிர்ற்படங்கள்;.


•    இலங்கையில் தங்குவதற்கு வழங்கப்பட்ட நுழைவுரிமைச்சீட்டின் அசல்    மற்றும் உண்மைப் பிரதி

சேவைக்கான பொறுப்புக் குழு


பதிவ பெயர் பிரிவு 
தொலைபேசி
கூடுதல் துணை ஆணையாளர் திரு. கண்ணங்கரா உரிமம் வழங்கும் பிரிவு 2556856/2516404
துணை ஆணையாளர்
திருமதி. சந்திரா கருணசேனா உரிமம் வழங்கும் பிரிவு  
மேற்பார்வை அலுவலர் திரு. சோமசிரி ஹபெர்னாண்டோ உரிமம் வழங்கும் பிரிவு  


            
சிறப்பு வகையறைகள்

இச்சேவைக்கு சிறப்பு வகையறைகள் எதுவும் இல்லை


அமைப்பு பற்றிய தகவல்

மோட்டார் வாகனத் திணைக்களம்

இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.


திரு. B. விஜயரத்னா
தொலைபேசி:011-2698717
தொலைநகல் இலக்கங்கள்:011-2694338
மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk
இணையத்தளம்: www.dmt.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:04:47
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites



Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 253
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty