அறிமுகம்
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கமுடைய தேசிய சுற்றாடல் சட்டத்திற்கிணங்க சுற்றாடல் பாதுகாப்பு உரிமமென்பது ஒரு சட்டபூர்வத் தேவைப்பாடாகும்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் 23 (அ) வாசகத்தின் பிரகாரம் எந்தவோர் ஆளுக்கும் சுற்றாடல் பாதுகாப்பு உரிமமின்றி குறித்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கிடையாதென்பதோடு அத்தகைய செயற்பாடு மூலமாக குறித்துரைக்கப்பட்ட தர நியமங்களுக்கும் வரையறைகளுக்கும் அமைவாக வெளிச் சூழலில் கழிவூநீர் கழிவூப் பொருட்கள் வாயூ புகை அல்லது ஆவி ஒலி மற்றும் அதிர்வூ ஆகியவற்றை விடுவிப்பதற்கான சட்டபூர்வ அதிகாரம் சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் மூலமாகக் கிடைக்கின்றது.
2008.01.25 ஆந் தேதிய 1533ஃ16 ஆம் இலக்கமுடைய வர்த்தமானியின் பிரகாரம் சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் பெறப்பட வேண்டிய செயற்பாடுகள் ஃ கைத்தொழில்கள் ஃ கருத்திட்டங்கள் குறித்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள் எனும் வகையில் ‘அ’ ‘ஆ’ மற்றும் ‘இ’ ஆகிய மூன்று அட்டவணைகள் மூலமாகக் காட்டப்பட்டுள்ளதோடு ‘அ’ மற்றும் ‘ஆ’ பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்துரைக்கப்பட்ட கைத்தொழில்களுக்காக சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்தோ சம்பந்தப்பட்ட மாகாண அலுவலகத்திடமிருந்தோ சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் பெறப்படல் வேண்டும்.
‘இ’ பிரிவில் குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகளுக்காக ஏற்புடைய உள்@ராட்சி நிறுவனத்திடமிருந்து சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் பெறப்படல் வேண்டும்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் 26வது வாசகத்திற்கிணங்க மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களை விநியோகிப்பதற்கான அதிகாரம் உள்@ராட்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தின் 17வது வாசகத்தின் கீழ் பதிவூ செய்யப்பட்டுள்ள முதலீட்டுச் சபைக்குச் சொந்தமான அனைத்துக் கைத்தொழில்களும் கொழுப்பு 01 உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள முதலீட்டுச் சபையிடமிருந்து சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட கைத்தொழிற் செயற்பாடுகளுக்காக குருநாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் பெறப்படல் வேண்டும். வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு அதற்கான சுயாதீனமான சுற்றாடல் சாசனம் உண்டு.
விண்ணப்பித்தல்
பேணிவரப்படுகின்ற கைத்தொழில் செயற்பாடானது குறித்துரைக்கப்பட்ட ஒரு செயற்பாடு எனில் ஏற்புடைய நிறுவனங்களிடம் சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களுக்காக விண்ணப்பிக்க வேண்டுமென்பதோடு புதிதாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கைத்தொழில்கள் எனில் குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகளைத் தொடங்க ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்) முன்னராக பூர்த்தி செய்யப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு உரிம விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வெண்டும்.
சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்திற்கான விண்ணப்பப் பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ளல்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்தோ அதன் மாகாண உப அலுவலகங்கள் மூலமாகவோ மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் இணையத்தளம் மூலமாகவோ சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்திற்கான விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் மூலமாகவூம் விண்ணப்பப் பத்திரங்கள் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பப் பத்திர செயற்பாடு
விண்ணப்பப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விபரங்கள் தகவல்கள் மற்றும் முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிக்களப் பரிசீலனைக் கட்டணம் கணிப்பிடப்படுவதோடு விண்ணப்பதாரியால் வெளிக்களப் பரிசீலணைக் கட்டணம் செலுத்தப்படல் வேண்டும். வெளிக்களப் பரிசீலனைக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் வெளிக்களப் பரிசீலனை மேற்கொள்ளப்படும். கைத்தொழில் செயற்பாட்டினால் பிறப்பிக்கப்படுகின்ற கழிவூப் பொருட்கள் குறித்துரைக்கப்பட்ட தர நியமங்களையூம் வரையறைகளையூம் விஞ்சியதாக அமையின் சுற்றாடல் பாதுகாப்பு உரிம விண்ணப்பப் பத்திரம் நிராகரிக்கப்படும். அது பற்றி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும்.
சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படுதல் விதந்துரைக்கப்படுமிடத்து விண்ணப்பதாரியால் சுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணம் செலுத்தப்படல் வேண்டும். சுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் விநியோகிக்கப்படும்.
சுற்றாடல் பாதுகாப்பு உரிம விண்ணப்பப் பத்திரக் கட்டணம்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இதன் பொருட்டு கட்டணம் அறவிடப்படமாட்டாது.
அலுவலக நேரங்கள்
கிழமை நாட்களில் மு.ப. 09.00 மணியில் இருந்து பி.ப. 04.00 மணி வரை மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலகம் திறந்து வைக்கப்படும். உள்@ராட்சி நிறுவனங்களுக்காக அவர்கள் குறிப்பிடப்படுகின்ற அலுவலக நேரங்கள் உள்ளன.
செலுத்த வேண்டியவை
வெளிக்கள பரிசீலனைக் கட்டணமும் உரிமக் கட்டணமும்.
வெளிக்களப் பரிசீலனைக் கட்டணம்.
இது பல்வேறு காரணிகளில் தங்கியூள்ளது. எனினும் இது அரசாங்கத்தின் வரியூடன் குறைந்த பட்சம் ரூ.3393.60 இற்கும் அதிக பட்சம் ரூ.11312.00 ற்கும் கட்டுப்பட்டது.
சுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணம்
2008.01.25 ஆந் தேதியூம் 1533ஃ16 இலக்கமும் கொண்ட வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க சுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணம் கைத்தொழிற் செயற்பாட்டின் பரிமாணம் மற்றும் வகைக்கு ஏற்ப அமையூம்.
பிரிவூ |
உரிமம் வழங்கும் நிறுவனம் |
சுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணம் (நவஃபுதிதாக விநியோகிக்கப்படுகின்ற உரிமத்திற்கானது) ரூ.
|
உச்ச மட்ட செல்லுபடியாகும் காலம் |
குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகளின் எண்ணிக்கை |
அ |
மத்திய சுற்றாடல் அதிகாரசபை |
7500.00 * |
01 வருடம் |
80 |
ஆ |
மத்திய சுற்றாடல் அதிகாரசபை |
6000.00 * |
03 வருடங்கள் |
33 |
இ |
உள்ளுராட்சி நிறுவனங்கள்
|
4000.00 |
03 வருடங்கள் |
25 |
இதற்கு மேலதிகமாக 12மூ வற் வரியூம் 3மூ தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரியூம் 10மூ முத்திரைக் கட்டணமும் சோ;க்கப்படும்.
செயற்பாட்டுக்காக எடுக்கும் காலம்
சகலவிதமான செலுத்தல்களும் தகவல்கள் வழங்குதலும் சரியாக உரிய நேரத்தில் செய்யப்பட்டிருப்பின் 2 மாதங்களில் சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
அவசியமான ஆவணங்கள்
தொழில் முயற்சிப் பெயர் பதிவூச் சான்றிதழ்.
சம்பந்தப்பட்ட காணியில் தொழில் முயற்சியைப் பேணி வருவதற்கான உரிமையை வழங்கிய சட்பூர்வ ஆவணம் (உறுதியின் பிரதி குத்தகை உடன்படிக்கை போன்றவை)
நிலஅளவைத் திட்டத்தின் பிரதி
சம்பந்தப்பட்ட கைத்தொழிலை அக்காணியில் நிறுவ அனுமதி வழங்கப்பட்ட ஆவணம் (வர்த்தக உரிமம்)
உற்பத்திச் சான்றிதழ்
கழிவூப் பொருள் சுத்திகரிப்புக் கருத்திட்ட முன்மொழிவூகள்
அதிகாரசபையினால் கேட்கப்படுகின்ற வேறு ஆவணம்
ஏற்புடைய உத்தியோகத்தர்கள்
மேலதிக விபரங்களுக்காக மாகாண ஃ மாவட்ட அலுவலகங்களிடம் விசாரித்து உங்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வூ கிடைக்காவிடின் தலைமையகத்தின் சுற்றாடல் மாசுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவருடன் தொடர்பு கொள்க.
அமைப்பு பற்றிய தகவல்மத்திய சுற்றாடல் அதிகாரசபை
இல்.104,
டெனிசில் கொப்பேகடுவே மாவத்தை,
பத்தரமுல்ல.
தொலைபேசி:011-7877277, 7877278, 7877279, 7877280 தொலைநகல் இலக்கங்கள்:011-2888999 மின்னஞ்சல்:complaint@cea.lk இணையத்தளம்: www.cea.lk
|