அறிமுகம்
சுற்றாடல் சட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டுச் செயற்பாட்டில் உள்ளடங்காக குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகளையூம் கைத்தொழில்களையூம் நிறுவூம் பொருட்டு சுற்றாடல் விதப்புரைத் திட்டம் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் விதப்புரை என்பது உள்@ராட்சி நிறுவனங்களினால் விநியோகிக்கப்படுகின்ற நிபந்தனைகளைக் கொண்ட ஓர் ஆவணமாகும். சுற்றாடல் தாக்க மதிப்பீட்டுக்காக உள்ளடக்கப்படாத குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க சுற்றாடல் விதப்புரை பெறப்படல் வேண்டும்.
விண்ணப்பித்தல்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களை ஏற்புடைய மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் எந்தவொரு பிராந்திய அலுவலகத்தில் இருந்தும் அல்லது மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் இணையத்தளம் மூலமாகவூம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் செயற்பாடு
ம.சு.அ. மாகாண ஃ மாவட்ட அல்லது தலைமையகத்திடமிருந்து விண்ணப்பப் பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளல்.
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை ம.சு.அ. சம்பந்தப்பட்ட அலுவலகத்திடம் ஒப்படைத்தல்
விண்ணப்பப் பத்திரம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பின் அத்துடன் ஏற்புடைய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பரிசீலனைக் கட்டணத்தைச் செலுத்துமாறு விண்ணப்பதாரிக்கு எழுத்தில் அறிவிக்கப்படும்.
பரிசீலனைக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் ம.சு.அ. உத்தியோகத்தர்களால் களப் பரிசீலனை மேற்கொள்ளப்படல்.
சம்பந்தப்பட்ட இடத்தை கைத்தொழிலை நிறுவூவதற்காக விதப்புரை செய்ய முடியூமாயின் சுற்றாடல் விதப்புரையானது சுற்றாடல் தாக்கங்களைக் குறைப்பதற்கான நிபந்தனைகளுடன் ஏற்புடைய பிரதேச சபை ஃ நகர சபைத் தலைவர் அல்லது நகர ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பிரதியொன்று சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிக்கு அல்லது கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்படும்.
விண்ணப்பப் பத்திரக் கட்டணம்
கட்டணம் அறிவிடப்படமாட்டாது.
அலுவலக நேரங்கள்
கிழமை நாட்களில் மு.ப. 09.00 மணியில் இருந்து பி.ப. 04.00 மணி வரை மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
செலுத்த வேண்டிய பணம்
பரிசீலணைக் கட்டணம்
குறைந்த தொகை ரூ.3393.60 ஆகவூம் உச்ச தொகை ரூ.11312.00 ஆகவூம் அமையூம். (அரசாங்க வரிகளுடன்)
செயற்பாட்டுக்காக எடுக்கும் காலம்
தேவையான தகவல்கள் வழங்கப்பட்டு செலுத்தல்கள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பின் ஒரு மாத காலம் செல்லும்.
அவசியமான ஆவணங்கள்
காணியின் நிலஅளவைத் திட்டம்
கட்டிடத் திட்ட வரைப்படம்
அருகில் உள்ள நகரத்தில் இருந்து சம்பந்தப்பட்ட காணிக்கு வரக்கூடிய பாதையைக் காட்டுகின்ற வரைபடக் குறிப்பு.
ஏற்புடைய உத்தியோகத்தர்கள்
மேலதிக விபரங்களுக்காக மாகாண ஃ மாவட்ட அலுவலகங்களிடம் விசாரித்து உங்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வூ கிடைக்காவிடின் தலைமையகத்தின் சுற்றாடல் மாசுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவருடன் தொடர்பு கொள்க.
அமைப்பு பற்றிய தகவல்மத்திய சுற்றாடல் அதிகாரசபை
இல்.104,
டெனிசில் கொப்பேகடுவே மாவத்தை,
பத்தரமுல்ல.
தொலைபேசி:011-7877277, 7877278, 7877279, 7877280 தொலைநகல் இலக்கங்கள்:011-2888999 மின்னஞ்சல்:complaint@cea.lk இணையத்தளம்: www.cea.lk
|