அறிமுகம்
சுற்றாடல் தாக்க மதிப்பீடானது அபிவிருத்திச் செயற்பாடுகளிலிருந்து இயற்கை மற்றும் சமூகச் சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி எதிர்வூ கூறுகின்ற ஓர் எளிமையான செயற்பாடாகும். அத்துடன் பாதகமான தாக்கங்களைத் தடுத்தல் அல்லது குறைத்தல் மற்றும் சாதகமான தாக்கங்களை உச்ச மட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை முன்மொழிதலும் அதன் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது. சு.தா.ம. தொழில் முயற்சியாளர்களின் முதலீடுகளுக்கான நிலைபேறான பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதோடு பொது மக்கள் உயிர்வாழ இதமான சுற்றுச்சூழலையூம் வழங்குகின்றது. 1981 இல் இருந்து சு.தா.ம. கரையோர வலயங்களுக்கு சட்டரிதியான அவசியப்பாடாக அமைவதோடுஇ 1993 இல் இருந்து குறித்துரைக்கப்பட்ட (Prescribed) கருத்திட்டங்களுக்காக ஒட்டுமொத்தமான இலங்கைக்குமே அமுலில் வரத்தக்கதாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
1993 இன் 722ஃ22 இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானியிலும் 1995 இன் 859ஃ14 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானியிலும் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் விசாரித்தறிவதன் மூலமாகவோ இன்றேல் 1993 யூ+ன் 24 ஆந் தேதிய 722ஃ22 இலக்கமுடைய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலை வாசிப்பதன் மூலமாகவோ ஏதேனும் கருத்திட்ட முன்மொழிவூக்காக சு.தா.ம. செயற்பாடு அவசியமா என்பதை அறிந்து கொள்ள முடியூம்.
உங்களின் கருத்திட்டத்தை வடமேல் மாகாணத்தில் நிறுவ எதிர்பார்ப்பின் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையிடம் விசாரித்தல் வேண்டும். உங்கள் கருத்திட்டம் கரையோர வலயத்தில் அமைந்திருப்பின் நீங்கள் கரையோரம் பேணல் திணைக்களத்தின் பணிப்பாளரிடமே விசாரிக்க வேண்டும். கரையோர வலயம் என்பது கடலின் மேல் மட்டத்தில் இருந்து நாட்டுக்கு உள்ளே 300 மீற்றர் வரையூம் கடலை நோக்கி 2 கிலோ மீற்றர் வரையூம் அமைந்துள்ள நீர்ப்பரப்பாகும். சு.தா.ம. செயற்பாடு குறித்துரைக்கப்பட்ட (Pசநளஉசiடிநன) கருத்திட்டங்களுக்காக மாத்திரமே அவசியமாகின்றதென்பதைக் கருத்திற் கொள்க. உங்களின் கருத்திட்டம் (சரணாலயங்கள் - ளுயnஉவரயசல நீங்கலாக) தாவர மற்றும் விலங்கின கட்டளைச் சட்டத்தினால் பெயர் குறிக்கப்பட்ட தேசிய ஒதுக்கமொன்றின் எல்லையில் இருந்து 1.5 கிலோ மீற்றருக்குள்ளே இருப்பின் நீங்கள் வன சீவராசிகள் பேணல் திணைக்களத்தின் பணிப்பாரிடமே விசாரிக்க வேண்டும்.
சு.தா.ம. செயற்பாட்டில் பிரவேசிப்பது எப்படி?
முதலில் உத்தேச கருத்திட்டம் குறித்துரைக்கப்பட்ட அட்டவணையில் உள்ளதாவென்பதைப் பரிட்சித்துப் பார்க்கவூம். அதன் பின்னர் கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் முகவர் நிறுவனம் (Project Approving Agency - PAA) எது என்பதைப் பரிசீலனை செய்யவூம். கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் முகவர் நிறுவனம் சு.தா.ம. செயற்பாட்டினை நெறிப்படுத்துகின்ற அரச நிறுவனமாகும். இலங்கை உல்லாசப் பயணிகள் சபைஇ சக்திஇ வலு மற்றும் நீர்ப்பாசன அமைச்சுஇ கரையோரம் பேணல் திணைக்களம் போன்றவை கருத்திட்டங்களை அங்கீகரிக்கும் நிறுவனங்களுக்கு உதாரணமாகும். இது சம்பந்தமான மேலதிக தகவல்களை 1993 யூ+ன் 23 ஆந் தேதிய 722ஃ22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை வாசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
அதன் பின்னர் உத்தேச கருத்திட்டம் தொடர்பான அடிப்படைத் தகவல்களை கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் முகவர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். அந்நிறுவனம் கருத்திட்டம் தொடர்பான அடிப்படைத் தகவல்களை வழங்கும் பொருட்டு எளிமையானதும் சுருக்கமானதுமான ஒரு மாதிரிப் படிவத்தை வழங்க இடமுண்டு. கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்ற அடிப்படைத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு குறியிலக்குக் கூட்டமொன்றில் (ளுஉழிiபெ ஆநநவiபெ) ஆய்வூக்குரிய விடயப்பரப்பு (வூழுசு) தயாரிக்கப்படும். கருத்திட்டம் அளவிலும் பரிமாணத்திலும் பெரிதாக அமையின் கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனத்தினால் கருத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் கோரப்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இந்த அடிப்படைத் தகவல்கள் பூர்வாங்க சுற்றாடல் பரிசீலனை அறிக்கையாகவூம் ஏற்றுக்கொள்ளப்பட இடமுண்டு.
கருத்திட்ட முன்மொழிவாளரால் அடிப்படைத் தகவல்கள் எத்தகைய சந்தர்ப்பத்தில் வழங்கப்படல் வேண்டும்?
கருத்திட்டம் தொடர்பிலான ஆரம்ப அபிப்பிராயம் மற்றும் அது நிறுவப்படுகின்ற இடம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டதும் உடனடியாக அடிப்படைத் தகவல்களை வழங்க வேண்டும். கருத்திட்டம் தொடர்பிலான பூர்வாங்க சாத்தியக்கூறு பற்றிய கற்கை மேற்கொள்ளப்பட்டு வருமாயின் அடிப்படைத் தகவல்களை வழங்க மிகவூம் பொருத்தமான தருணம் அதுவே. இந்த அடிப்படைத் தகவல்களை வழங்க முழுமையான சாத்தியக்கூற்றுக் கற்கை இடம்பெறும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
பூர்வாங்க சுற்றாடல் மதிப்பீட்டு (ஐநுநு) அறிக்கையூம் சுற்றாடல் தாக்க மதிபீட்டு (நுஐயூ) அறிக்கைக்கும் இடையிலான வேறுபாடு யாது?
கருத்திட்டங்களின் சுற்றாடல் நிலைமைகள் அவ்வளவூ தூரம் தீவிரமான நிலைமையில் காணப்படாவிட்டால்இ அவ்வேளையில் சார்புரிதியில் சுருக்கமாகவூம் எளிமையானதுமான கற்கை எனும் வகையில் பூர்வாங்க சுற்றாடல் மதிப்பீட்டினை (ஐநுநு) மேற்கொள்ள வேண்டி நேரிடும். உருவாகக்கூடிய தாக்கம் மிகவூம் தீவிரமானதாக நிலவூமாயின்இ அவ்வேளையில் சுற்றாடல் தாக்கங்கள் பற்றி விபரமானதும் விரிவானதுமான கற்கையாக அமைகின்ற சுற்றாடல் தாக்க மதிப்பீட்டினை மேற்கொள்ள வேண்டி நேரிடும்.
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டுச் செயற்பாட்டுக்கு எவ்வளவூ காலம் செல்லும்?
நீங்கள் சமர்ப்பிக்கின்ற அடிப்படைத் தகவல்கள் போதுமானதாக அமையின்இ கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனத் (Pயூ) திற்கு அடிப்படைத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து சுற்றாடல் தாக்க மதிப்பீட்டுச் செயற்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியாக அமைவது 116 வேலை நாட்கள் ஆகும். எவ்வாறாயினும்இ சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையினைத் தயாரிப்பதற்கான காலவரையறை விதிக்கப்படவில்லை. அனுபவ வாயிலாக புலனாகின்ற விடயம் யாதெனில் கருத்திட்டத்தின் இயல்புக்கிணங்க சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிக்க 03 மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரையான காலப் பகுதி அவசியம் என்பதே ஆகும்.
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை எவரால் தயாரிக்கப்படுகின்றது?
கருத்திட்ட முன்மொழிவாளரால் தெரிவூ செய்யப்படுகின்ற நிபுணத்துவம் வாய்ந்த ஆலோகசர்களாலேயே இது தாயரிக்கப்படுகின்றது. ஆலோசகர்கள் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்களின் பெயர் பட்டியலை மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியூம். அத்துடன் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செய்தித்தாளர் அறிவித்தல்கள் மூலமாகவூம் ஆலோசனை நிறுவனங்களிடமிருந்து விலை மனுக்களைக் கோரலாம்.
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை எத்தகையது?
இந்த அறிக்கை மிகவூம் எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடியவதறான எளிமையான மொழி நடையில் எழுதப்பட்ட சார்புரிதியாக சுருக்கமாக கீழே காட்டப்பட்ட வியடங்களை உள்ளடக்கியதாகும்.
உத்தேச கருத்திட்டம் பற்றிய விபரங்கள்
- உத்தேச கருத்திட்டம் நிறுவப்பட எதிர்பார்த்துள்ள பிரதேசத்தின் சுற்றாடல்.
- கருத்திட்டம் மூலமாக தோன்றக்கூடிய பாதகமான சாதகமான தாக்கங்கள்.
- பாதகமான தாக்கங்களைத் தணிக்கும் வழிமுறைகள்.
- நியாயமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான மாற்றீடுகள்.
- மேற்பார்வை வேலைத்திட்டம்
- கடந்தகால சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நூலகத்திலுள்ள விசாரணைப் பிரிவிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையினைக் கருத்திட்ட முன்மொழிவாளர் எவரிடம் சமாப்பிக்க வேண்டும்?
சு.தா.ம. அறிக்கை கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனத்திடமே சமர்ப்பிக்கப்படல் வேண்டும். குறைந்த பட்சம் அறிக்கையின் 15 ஆங்கிலப் பிரதிகளும் 10 சிங்களப் பிரதிகளும் 05 தமிழ் பிரதிகளும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
சுற்றாடல் தகுதிநிலை பற்றிய இறுதித் தீர்மானத்தை வழங்குபவர் யார்?
கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனமே அதனை வழங்கும். சு.தா.ம. அறிக்கையை சுயாதீனமான மதிப்பீட்டுக்கு உள்ளாக்கும் பொருட்டு கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனத்தினால் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவென்று (வூநுஊ) நியமிக்கப்படும். கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனம் இறுதித் தீhமானத்தை வழங்கும் போது மேற்படி தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் அவதானிப்புரைகள் கவனத்திற் கொள்ளப்படும்.
கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனத்தின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமாயின் அதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் இணக்கப்பாடு கிடைக்க வேண்டும்.
சுற்றாடல் அங்கீகாரம் எவ்வளவூ காலத்திற்கு செல்லுபடியாகும்?
பொதுவாக சுற்றாடல் அங்கீகாரம் ஒரு வருட காலப் பகுதிக்கே செல்லுபடியாகும். தீர்மானம் கிடைக்கப்பெற்று ஓராண்டு காலப்பகுதிக்குள் கருத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் கருத்திட்டத்தை அங்கீகரிக்கும் நிறுவனத்திடமிருந்து மீண்டும் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். இந்த செல்லுபடியாகும் காலப்பகுதி அங்கீகாரம் வழங்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கருத்திட்ட முன்மொழிவாளர் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டால்?
அவ்வேளையில் கருத்திட்ட முன்மொழிவாளருக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளரிடம் மேன்முறையீடு செய்வதற்கான உரிமையூண்டு. அவரது முடிவூ இறுதியானதாகும்.
கருத்திட்டத்திற்கான சுற்றாடல் அங்கீகாரம் (நுnஎசைழnஅநவெயட யூppசழஎயட) கிடைத்த பின்னர் வேறு அனுமதிப் பத்திரங்கள் பெறப்பட வேண்டுமா?
ஆம் உத்தேச கருத்திட்டம் மீதான அதிகாரத் தத்துவம் கொண்ட பிரதேச மட்டத்திலான அரச நிறுவனங்களின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அதற்கு மேலதிகமாக வேறு உரிமங்களும் தேவைப்படலாம். சு.தா.ம. அனுமதி மூலமாக சுற்றாடல் அங்கீகாரம் (நுnஎசைழnஅநவெயட யூppசழஎயட) மாத்திரமே வழங்கப்படுகின்றதென்பதை மனதிற் கொள்ள வேண்டும். சு.தா.ம. செயற்பாட்டில் பிரவேசிக்க முன்னராக ஏற்புடைய அதிகாரிகளிடமிருந்து காணிகளை விடுவித்துக் கொள்ளல் போன்ற ஏனைய அனுமதிப் பத்திரங்களையூம் பெற வேண்டியது முக்கியமானதாகும்.
சுற்றாடல் அங்கீகாரத்தைப் பெற முன்னர் கருத்திட்ட முன்மொழிவாளரால் எத்தகைய பணிகளை ஈடேற்ற முடியூம்?
கருத்திட்டமானது உத்தேச இடத்திலுள்ள சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தாத நடவடிக்கைகள் மாத்திரமே. கருத்திட்டத்தை நிறுவ எதிர்பார்த்துள்ள பகுதிவாழ் மக்களுக்கும் கருத்திட்டம் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் அக்கறை காட்டுகின்ற ஏனைய ஆட்களுக்கும் கருத்திட்டம் பற்றிய விடயங்களை விளங்கவைத்தல் நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ளல் வெளிக்களப் பரிசீலணை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவற்றை மேற்கொள்ள முடியூம்.
அங்கீகாரம் கிடைக்க முன்னர் கருத்திட்டப் பணிகளை மேற்கொள்ளல் தேசிய சுற்றாடல் சட்டத்திற்கிணங்க சட்டவிரோதமானதாகும்.
கருத்திட்ட முன்மொழிவாளர்கள் சுற்றாடல் தாக்க மதிப்பீடு தொடர்பான மேலதிக விபரங்களை எங்கிருந்து பெறலாம்?
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவூ
மத்திய சுற்றாடல் அதிகாரசபை
இலக்கம் 104 டென்சில் கொப்பேகடுவ மாவத்த
பத்தரமுல்ல.
தொலைபேசி: 011-2872419 011-2876643
பக்ஸ் : 011-2872296
திருமதி காந்தி த சில்வா
பணிப்பாளர்
சுற்றாடல் தாக்க மதிப்பீடு.
தொலைபேசி:287
மின்னஞ்சல்: Kanthi@cea.lk
இதுவரை அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களின் சுற்றாடல் தாக்க மதிப்பீடு அறிக்கைப் பிரதிகளின் தொகுப்பு வாசித்தறியூம் பொருட்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அமைப்பு பற்றிய தகவல்மத்திய சுற்றாடல் அதிகாரசபை
இல்.104,
டெனிசில் கொப்பேகடுவே மாவத்தை,
பத்தரமுல்ல.
தொலைபேசி:011-7877277, 7877278, 7877279, 7877280 தொலைநகல் இலக்கங்கள்:011-2888999 மின்னஞ்சல்:complaint@cea.lk இணையத்தளம்: www.cea.lk
|