தகுதி
வணிக அமைப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
குறிப்பு:
அங்கீகாரம் அளிக்கப்பட்ட எடைகள் அளவீடுகள் அல்லது எடையிட அல்லது அளவிடபயன்படும் உபகரணங்களை விற்பனை செய்வதற்குள்ள பதிவுச் சான்றிதழை வைத்திருக்கும் தனி நபர் அல்லது நிறுவனம், ஆய்வாளரால் முத்திரையிடப்பட்ட எடைகள் அளவீடுகள் அல்லது எடையிட அல்லது அளவிடபயன்படும் உபகரணங்களை மட்டுமே விற்பனை செய்ய அல்லது விற்பனைக்காக வைத்திருக்க முடியும். ஆய்வாளர் வழங்கிய சரிபார்த்தல் சான்றிதழ் வாங்குபவருக்கு வழங்கப்படும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
1
|
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
- திணைக்களம் வேண்டுகோள் கடிதத்தைப் பெற்ற பின்னரே, விண்ணப்பதாரருக்கு விண்ணப்பப் படிவத்தைப் பெறுவார்.
- விண்ணப்பதாரர் நேரடியாக திணைக்களத்திற்கு வந்து விண்ணப்பப்படிவத்திற்காக வேண்டுகோள் விடுக்கலாம்.
|
விண்ணப்பப் படிவம்
இலக்கம் குறிப்பிடப்படவில்லை.
|
2
|
தேவையான இணைப்பு ஆவணங்கள்
- சுயதொழில் பதிவுச் சான்றிதழின் நகல்.
|
3
|
விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை விண்ணப்பதாரர் நேரடியாகவோ அல்லது தபாலின் மூலமாகவோ அனுப்பலாம்.
|
வேலை நாட்கள்
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
வேலை நேரங்கள்
மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.
|
படிப்படியான நடவடிக்கைகள்:
படி 1:
விண்ணப்பதாரர் தேவையான விண்ணப்பப்படிவம் கேட்டு திணைக்களத்திற்கு வேண்டுகோள் கடிதத்தை அனுப்புதல்.
படி 2:
திணைக்களம் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனையாளருக்கு விண்ணப்பப்படிவத்தை அனுப்புதல்.
படி 3:
விண்ணப்பதாரர் படிவத்தைகப் பூர்த்தி செய்து அதனுடன் வணிக பதிவு சான்றிதழின் பிரதியை திணைக்களத்திற்கு அனுப்புதல்.
படி 4:
திணைக்களம் “பதிவு தபால்” மூலம் விற்பனையாளருக்கு உரிமத்தை வழங்குதல்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
அஞ்சல் மூலம்: 2 வாரங்கள்.
நேரடியாகத் திணைக்களத்திற்கு வருதல்: 4-7 நாட்கள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்:
வேலை நாட்கள் – திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்தல்:
வேலை நாட்கள் – திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு:
விற்பனையாளரின் உரிமம் ஒரு வருட காலம் வரை செல்லத்தக்கதாகும்.
பின் மீண்டும் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்
விண்ணப்பதாரரே இந்த சேவையைப் பெறுவதற்கான கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கட்டணம்
பதிவுக் கட்டணம்
- ரூ.200/=
அபராதங்கள்
குற்றங்கள் மற்றும் அபராதங்கள் பிரிவினை பார்க்கவும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
வணிகப் பதிவுச் சான்றிதழின் பிரதி.
சேவைத் தொடர்பான பொறுப்புக் குழு
நபரின் பதவி
|
நபரின் பெயர்
|
பிரிவின் பெயர்
|
இயக்குனர்
|
திரு. குணசோமா
|
அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைக்கான திணைக்களம்
|
அமைப்பு பற்றிய தகவல்அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
இலக்கம்: 101,
பார்க் வீதி,
கொழும்பு-05 இயக்குனர் தொலைபேசி:+94-11-2182250 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2182259 மின்னஞ்சல்:metrolad@sltnet.lk இணையத்தளம்: www.measurementsdept.gov.lk
|